21 May, 2013

இப்படியும் நடக்கும்...! வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்களே உஷார்..!

 
சென்னை நகரில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர்.

தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன.


வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள 12 ஆலோசனைகளை சென்னை நகர போலீசார் வெளியிட்டுள்ளனர். இது சென்னை நகருக்கு மட்டுமின்றி எல்லா ஊர்களுக்கும் பொருந்தும் எச்சரிக்கை - அறிவுறை என்றே சொல்லலாம்.


போலீசார் வழங்கியுள்ள 12 அறிவுரைகள்:

1. வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.

2. வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக ''லென்ஸ்'' பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.


3. ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.


4. தற்காப்பு கலை: வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக்கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையர்களிடம் புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.


5. அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.


6. வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.


7. முதியவர்கள் : வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.


8. அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.


9. ஜோதிடர்கள்: ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.


10. டெலிபோன் எண்கள் : அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.


11. ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலைபேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.


12. இதேபோல, போலீசார் சமுதாயத்தில் நடக்கும் மற்ற குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளையும் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க உள்ளனர். பொது மக்களும் அக்கரை எடுத்துக் கொண்டு, இந்த அறிவுறைகளை நோட்டீஸாக அடித்து ஒவ்வொரு வீட்டிற்கும் வினியோகிக்கலாம். இளைய சமுதாயம் இதில் முனைப்புடன் செயல்பட்டால் குற்றங்கள் குறையும் 
(சென்னை போலீஸ்)

12 comments:

  1. சிறப்பான ஆலோசனைகள்! விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இதை நான் சொல்லவில்லை சுரேஷ்...
      சென்னை போலீஸ் மக்களுக்கு கொடுத்துள்ள விழிப்புணர்வு அறிவுரைகள்...

      தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி

      Delete
  2. நாடு எந்தளவு உள்ளது என்பதை விளக்கமாக காண்பிக்கிறது... எச்சரிக்கை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது தலைவரே... நாட்டு இப்போது புதுசுபுதுசா கண்டுப்பிடிக்கிறாங்க... அதுக்குஏற்றார்போல் அறிவுரைகளும் தேவைப்படுகிறது..

      Delete
  3. நல்ல அறிவுரைகள்.

    ReplyDelete

  4. //அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள்//
    சற்று நெருடலாக உள்ளது.
    சுத்தமாக குடிநீரை எப்போதும் வரவேற்பறையிலோ, வீட்டுக் கதவருகிலோ வைத்திருக்கலாமே!

    இங்கும் இப்படியான சிக்கல்கள் இருக்கவே செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அறிவுரைகள் ஏற்புடையதுதான்...



      பெண்கள் தனியாக இருக்கும்போது வருவோருக்கு மட்டும் தண்ணீர் எடுத்து கொடுக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்....

      நன்றி

      Delete
  5. சிறப்பான ஆலோசனைகள். பின் பற்றுவோம், நம்மை நாமே காத்துக் கொள்வோம்

    ReplyDelete
  6. இளம்பெண்கள் மட்டுமல்ல, எல்லோருமே தற்காலத்தில் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
  7. அடக்கடவுளே.... நாடு இப்படியா போகனும்...?

    முதலில் எல்லாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்களுக்குத் தான் அதிக அறிவுரைகள் வழங்கினார்கள்.
    இன்று...
    வீட்டுக்குள்ளெயே இருக்கும் பெண்களுக்கும் அறிவுரைகள்...!!

    ஏதோ படித்திருக்கிறேன்.... புலியை முறத்தால் ஓட்டிய தமிழச்சி என்று!!! எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான் போலும்.

    நல்ல பகிர்வு சௌந்தர. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நல்ல அறிவுரைகள். கவனத்தில் கொள்ளவேண்டும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!