06 June, 2013

இப்படியெல்லாம் கூடவா யோசிப்பாங்க...! சென்னா நம்பனும் தலைவா


டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவு ?"

"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"

"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,

"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க.

ம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.

"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"

"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"



குருவைச் சந்தித்து ஞானோதயம் பெறுவது எப்படி என்ற தம் சந்தேகத்தைக் கேட்டார் அறிஞர் ஒருவர்.

"மழை பெய்யும் போது இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு நில்லுங்கள்; ஞானோதயம் கிடைக்கும்," என்றார் குரு.

"குருஜி! நீங்கள் சொன்னவாறே நேற்று மழையில் நின்றேன். தண்ணீர் என் கழுத்து வழியாக கீழே இறங்கி ஓடிய போது, நான் ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்" என்றார் அந்த நபர்.

"முதல் நாள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஞானோதயம் அது தான்," என்றார் குரு.




கலைக்கூடமொன்றில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தாள் ஓவியர் ஒருவர்.

அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,

"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர்.

"உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல சேதி ஒன்றும், கெட்ட சேதி ஒன்றும் உள்ளது."

அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்"

"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார். ஆம். கூடும் என்று நான் சொன்னவுடன், 15 ஓவியங்களையும் அவரே வாங்கி விட்டார்."

"அப்படியா? மிகவும் நல்லது. சரி. அந்த கெட்ட சேதி?"

"அந்த ஆள் வேறு யாருமில்லை. உங்கள் குடும்ப டாக்டர் தாம்."


நம் சமுதாயத்தின் தற்போதைய நிலை...!

9 comments:

  1. 'பைனல்ஸ்' தான் முடிந்து விட்டதே...

    மற்றவை ஹா... ஹா... படம் பலவற்றை சொல்கிறது...

    ReplyDelete
  2. ஓஹோ... மறந்து விட்டேன்.. இன்று முதல் வேறு ஒன்று ஆரம்பம்...

    ReplyDelete
  3. நல்ல கதை..பல விஷயம் சொல்லும் படங்களும் அருமை..

    ReplyDelete
  4. ரசித்தேன் சிரித்தேன் அருமை

    ReplyDelete
  5. நம் சமுதாயத்தின் தற்போதைய நிலை...!
    >>
    வருத்தப்பட வேண்டிய விஷயம்

    ReplyDelete
  6. நல்ல ஜோக்குகள். பைக்குக்கு பெட்ரோல் போட்டு ஏர் உழும் ஆட்கள் பயங்கர பணக்காரர்கலாத்தான் இருக்கணும்.

    \\நம் சமுதாயத்தின் தற்போதைய நிலை...!\\ ஏதோ வெள்ளைக்காரன் படம் போல இருக்கே??

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!