18 June, 2013

உடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க..!


காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம். 

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம். 

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான்.

இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். 'எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. 
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே... அதே பாணியில் பருமனையும் கரைப்போம்! (நன்றி மருத்துவ உலகம்)

11 comments:

  1. காலையில் எழுந்ததும் 1 லிட்டர் தண்ணீர்... அன்று முழுவதும் சுறுசுறுப்பு... மற்றவை பிறகு...

    ReplyDelete
  2. நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். //என்ன செய்ய?

    ReplyDelete
  3. ம் ம்ம் பயனுள்ள பகிர்வு.,, பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றாக சைக்கிள் மிதிக்கவும்...

    அடுத்து...

    வியாழக்கிழமை வியாழக்கிழமை வெறும் வயிற்றில் பாவைக்காய் ஜூஸ் குடிக்கவும்.

    இல்லையெனில் வெறி நாயை கல்லெடுத்து எறிந்துவிட்டும் ஓடாலாம் ஹி ஹி...

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு
    அனைவருக்கும் தேவையான பதிவும் கூட
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பயனுள்ள பகிர்வு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. படிக்கலாம் எழுதலாம் தொடர முடியுமா ?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!