09 June, 2013

என்னாச்சி அஜீத் படங்களுக்கு...! இந்த ஓவர் பில்டப் தேவையா..?

வித்தியாசம் என்ற பெயரில் சினிமாக்காரர்கள் சில நேரங்களில் ரொம்பத்தான் ஓவராக சீன் போடுவார்கள். நம்ம தல அஜீத்தின் இரண்டு புதுப் படங்களுமே அந்த லிஸ்டில் சேரும்போலத் தெரிகிறது. 
 
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏஎம் ரத்னம் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தன் போர்ஷனை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்ட அஜீத், அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்துக்குப் போய்விட்டார். 
 
ஆனால் இன்னும் தலைப்பே சூட்டவில்லை. கேட்டால், தலைப்பை அறிவித்ததும் பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரசிகர்களே அந்தப் பெயரில் தனி பக்கங்கள், ஆன்ட்ராய்ட் - ஐபோன் ஆப்ஸ் போன்றவற்றை உருவாக்கிவிடுகின்றனர். அதனால்தான் அறிவிக்கவில்லை என்றனர். 
 
சில தினங்களில் படத்துக்கு தலைப்பு வலை என்றார்கள். பின்னர் இல்லை இல்லை.. இன்னும் வைக்கவில்லை என மறுத்தனர். இது க்ரைம் த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
படத்தின் ட்ரைலரைக் கூட பெயர் இல்லாமலேயே வெளியிட்டுவிட்டனர். தமிழில் இப்படி ட்ரைலர் வெளியானதே இதுதான் முதல் முறையாக இருக்கும் போலிருக்கிறது. 
 
இப்போது சிவா இயக்கத்தில், விஜயா நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கும் தலைப்பு வைக்கவில்லை. ஆரம்பத்தில் வெற்றி கொண்டான் என்று வைத்திருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அதை மறுத்துவிட்டனர். 
 
இது கிராமத்துக் கதை. முதல் முறையாக அஜீத் கிராமத்து இளைஞராக நடிக்கிறாராம். 
 
படம் ரிலீசாகும்போதாவது பெயரை அறிவிப்பீங்களா?

2 comments:

  1. தல படப் பெயர் தெரியாமல் தல வெடித்து விடும் போலிருக்கே... யாராவது சொல்லுங்கப்ப்ப்பா....ஆ...ஆ...

    ReplyDelete
  2. படம் ரிலீசாகும்போதாவது பெயரை அறிவிப்பீங்களா?
    அறிவிப்பார்கள் என்றே நம்புவோம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!