02 June, 2013

அச்சத்தோடு நிம்மதியின்றி இருக்கிறேன்... எனக்கேது முற்றுப்புள்ளி.. - கலைஞர் ஆவேசம்

 
என்னை பாராட்டிய சிறப்புரைகள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்த்தொண்டு, பொதுத்தொண்டு, சமுதாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். 
 
ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பணியாற்ற வேண்டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை என்றார் திமுக தலைவர் கருணாநிதி. 
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 90-வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னையில்நேற்று 90 கவிஞர்கள் கூடி சிறப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். 
 

இறுதியில் கருணாநிதி ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: 
 
என்னுடைய 90-வது பிறந்தநாள் விழாவையட்டி கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னையும், அவரையும், இதற்கெல்லாம் மேலாக தமிழையும் பெருமைபடுத்தி உள்ளார். 
 
ஏற்புரை என்ற தலைப்பில் நான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டேன். ஆனால் என்னை பாராட்டிய சிறப்புரைகள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்த்தொண்டு, பொதுத்தொண்டு, சமுதாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். 
 
 
 
ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பணியாற்ற வேண்டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் வாழ்க்கையில் கஷ்டங்களையும், வலியையும், மக்கள் படும் துன்ப துயரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியும். 
 
பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு கவிஞர்கள் ஊட்டிய உணர்வாலும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய்தால் தமிழையும், தமிழர்களையும் காப்பாற்ற முடியும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது முழு நிம்மதியாக இல்லை. 
 
எனக்கு பல்வேறு வழிகளில் இடையூறுகள், இடைஞ்சல்கள் வருகின்றன. என்னைப் பொறுத்தவரையில் பொதுவாழ்க்கையில் அவையெல்லாம் ஒரு தூசிகள் தான். தொடர்ந்து பயணம் செய்யவே விரும்புகிறேன். 
 
 
என் உணர்வையும், வலியையும் பெரிதாக்கும் அளவுக்கு காரியங்கள் நடக்கின்றன. தமிழை காக்க கவிஞர்களுக்கு கடமை உள்ளது. நம்காலத்தில் தமிழுக்கு தீங்கு வந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். 
 
அச்சத்தைப் போக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. தற்போது தமிழுக்கு ஏற்பட்ட கிளர்ச்சியை தமிழ் புரவலர்கள் எதிர்ப்பு காட்டியதால் மனநிம்மதி ஏற்படும் அளவுக்கு ஆபத்து நீங்கி உள்ளது. ஆனால் மீண்டும் இந்த ஆபத்து வராது என்று நிச்சயமாக கூற முடியாது. 
 
நம் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து கொண்ட உயிரான மொழியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. டெல்லியில் வாதாடி செம்மொழி தகுதி பெறப்பட்டது. செம்மொழி தகுதியை அளித்ததுடன், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சோனியாகாந்தி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். 
 
ஆனால் இன்று செம்மொழி என்று சொல்லக் கூடாது, எழுதக் கூடாது என்கின்றனர். நான் பெற்றுத் தந்ததால் இதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. செம்மொழி தமிழை காப்பாற்றவும், உலகளவில் பெருமைப்படுத்த, விரிவாக்கம் செய்ய பாடுபட வேண்டும். 
 
தமிழ் செம்மொழி நிலை நாட்ட அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி செம்மொழி தகுதியை இழந்துவிடாமல் காப்பாற்ற என்னை அர்ப்பணிப்பதுடன், வாதாடவும், போராடவும் செய்வதுடன் என்னையே ஒப்படைப்பேன். 
 
நம்முடைய மொழிக்காக தாய்க்கு வந்த விபத்து போல் உணர்வை பங்கிட்டு கொள்வதுடன், தமிழ் மொழியை காப்பாற்ற கவிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

4 comments:

  1. வருத்த மாகத்தான் உள்ளது!

    ReplyDelete
  2. கலைஞரின் தமிழ் தொண்டு....

    ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு பினிஷிங் சரியில்லையே போலீசு...?

    ReplyDelete
  3. இப்போது வந்த இந்த சொரணை தொடர்ந்து இருந்திருந்தால் ஏன் இவ்வளவு தொல்லை இந்த இனத்துக்கு?

    ReplyDelete
  4. வருத்தமாகத்தான் உள்ளது அய்யா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!