16 June, 2013

இனிதே ஆரம்பம்.... கலைஞரின் விஸ்வரூபம்

 
ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி வேட்புமனுத் தாக்கல் செய்தார். 
 
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி-க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக ஏற்கெனவே 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 
 
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக, 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரசின் ஆதரவை கோரியிருந்தது. அதேபோல் 22 எம்.எல்.ஏக்களை தம் வசம் வைத்திருக்கும் தேமுதிகவின் ஆதரவையும் கோரியது. 
 
இந்நிலையில் 6வது வேட்பாளர் இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளரை நிறுத்தினால் வாக்கெடுப்பு நடைபெறக் கூடிய சூழல் உருவாகும். 
 
அப்படி 6 வது இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட எந்த ஒரு கட்சியுமே வேட்பாளரை நிறுத்தாத நிலையில் கனிமொழி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இந்திய கம்யூனிஸ்ட் திமுகவுக்கு ஆதரவு கனவில்கூட இல்லை என்று அழுத்ததிருத்தமாக சொல்லியிருக்கிறது. மேலும் மகளுக்கு பதவி வேண்டும் என்ற பிடிவாதத்தில் இனி கலைஞரே களம் இறங்கி வேலைசெய்வார்.

90-வது பிறந்த நாளை கொண்டாடி முடித்த கையோடு கனிமொழிக்காக கண்டிப்பாக தீயாக வேலை செய்வார் கலைஞர். தமக்கு தேவையான வாக்குகளை எப்பாடுபட்டாவது வாங்கி கெர்டுத்து தன் மகளின் பதவியை காப்பாற்றிவடுவார் கலைஞர்.

வேட்புமனு தாக்கல்செய்துவிட்டு வெளியில் வந்த கனிமொழியும், நான் கண்டிப்பாக ஜெயிப்பேன், எங்கள் தலைவர் கலைஞர் அவர்களும், தளபதி அவர்களும் என்னை ஜெயிக்கவைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கனிமொழி வெற்றி பெறும்வரை இலங்கைப்பிரச்சனை, தமிழக பிரச்சனை, தமிழக மக்கள் பிரச்சனை, கழகப்பிரச்சனை, என எத்தனை பிரச்சனை வந்தாலும் கலைஞர் தற்போது கண்டுக்கொள்ளமாட்டார். இதற்கு மேல் நான் என்னத்த சொல்ல...

இறுதியில் பாருங்கள் அவர்கள சொல்வார்கள் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.. நிரந்த நண்பனும் இல்லை என்று....

6 comments:

  1. கலைஞரா? கொக்கா? தந்தையர் தினத்தில் தன் கடமையை செய்துவிட்டார்.

    ReplyDelete
  2. தன் குடும்ப நன்மைக்காக
    எதையும் செய்வார் அவர்
    அவரை ஆதரிப்போர் எல்லாம் அதையும்
    கலைஞரின் ராஜ தந்திரம் என்பர்
    இதெல்லாம் நமக்குப் பழகிப் போனதுதானே ?

    ReplyDelete
  3. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!