28 June, 2013

ஒன்றுக்கு பதில் பத்து..! வடிவேலு போட்ட வில்லங்க ஒப்பந்தம்...


சினிமாவில் மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர் வடிவேலு. அதனால் பல கதைகள் கேட்டு அதில் ஒரு கதையை செலக்ட் பண்ணி இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பு அவரை வைத்து படம் தயாரிக்க முன்னணி படாதிபதிகள் யாரும் முன்வரவில்லை.

6 மாதங்களாக பொறுமையாக காத்திருந்த வடிவேலுவே ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் தேடும் பணியில் இறங்கி செயல்பட்டார். அப்படி கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் பிலிம்சுக்கும் பல தடவை நடையாய் நடந்திருக்கிறார். 

அதன்பிறகுதான் அவரை வைத்து படம் பண்ண முன்வந்தார்களாம். அப்போது, தன்னிடம் கதை சொல்லியிருந்த யுவராஜின் கதையை அவர்களிடம் சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார் வடிவேலு.

ஆனால், அப்படி ஒப்பந்தமாவதற்கு முன்பு, அந்த நிறுவனத்துக்கு ஒரு உறுதி மொழியும் அளித்தாராம் வடிவேலு. அதாவது, ஒருவேளை என்னை வைத்து நீங்கள் தயாரிக்கிற படம் தோல்வியடைந்தால், அதற்கு பிராயசித்தமாக உங்களுக்கு 10 படங்களில் காமெடியனாக நடித்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தாராம் வடிவேலு.

3 comments:

  1. வடிவேலுவின் வரவை இன்றும் எல்லோருமே
    எதிர்ப்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
    அதனால் அவரின் வரவும், புது படமும் நிச்சயம் வெற்றிபெரும்.

    ReplyDelete
  2. வடிவேலு வேற்றி பெற வாழ்த்துவோம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!