05 July, 2013

நம்பமுடியல...! இதுமாதிரி பதிவைதாங்க மக்கள் அதிகம் படிக்கிறாங்க...!

ஒரு கஞ்சன் வீடு எரிஞ்சி போச்சி. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அவன விசாரிச்சது..

போலீஸ்:- ஏன்யா.. வீடு முழுக்க எரியற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த?

கஞ்சன்:- தீ அணைப்பு வண்டிக்காக மிஸ் கால் கொடுத்துட்டு இருந்தேன் சார்..

*****************************************


" ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்?
என்று ஆசிரியர் கேட்கிறார் .
 "இரும்பு" என்கிறான் ஒரு மாணவன் .
 ஆசிரியர் = எப்படி ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"


 மாணவன் = "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன்...
ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன்,
எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "

*****************************************

துறவால் நீர் கண்ட பயன் என்ன...??


பெருஞ்செல்வந்தராக இருந்த பட்டினத்தார் திடீரென்று ஒரு நாள் எல்லாவற்றையும் துறந்து துறவியாகி விட்டார்.


அதை கேள்விப்பட்ட அரசன் தன் சுற்றம் சூழ ஆரவாரமாக அவரை காண வந்தான். பட்டினத்தார் ஓரிடத்தில் வெறுங்கோவணத்துடன் ஆண்டிக்கோலத்தில் அமர்ந்திருந்தார்.


அரசன் அவரை வணங்கி, எமக்கு இணையாக செல்வம் படைந்திருந்த நீர், எல்லாவற்றையும் துறந்து விட்டீர். இதனால் நீர் கண்ட பயன் என்ன? என்று அலட்சியமாக கேட்டான்.


அவை எல்லாம் இருந்திருந்தால் நான் உம்முன் நின்றிருப்பேன். துறந்ததால் இப்போது என் முன் நீர் நிற்கிறீர்கள். இந்த சிறப்பு ஒன்று போதாதா.. !


என்று அமைதியாக பதிலளித்தார் பட்டினத்தார்.

*****************************************
நம்ம நாராயணசாமி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...

முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...
சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

நாராயணசாமி : அது ஒன்னுமில்லைங்னா...
கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...
அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்... 
*****************************************

கடைசியா ஒன்னு...

*****************************************
முகநூல் ரசித்தவை....

15 comments:

  1. ஹா... ஹா... (சிலது புதிது...) பதிவின் தலைப்பை வைக்க உங்களிடம் தான் கேட்க வேண்டும்...!

    ReplyDelete
  2. பட்டினத்தார் கதை புதுசு

    ReplyDelete
  3. அனைத்தும் சிறப்பு.

    ReplyDelete
  4. படமும் கருத்தும் அருமைங்க...

    ReplyDelete
  5. மிகவும் ரசித்தோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சுவையான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
  7. கம்யூட்டர் கம்பனி ..ஹா.....ஹா.......

    ReplyDelete
  8. //இந்த மாதிரி பதிவைத்தான் மக்கள் அதிகம் படிக்கிறாங்க//

    உண்மை. நீங்களும் அதிகமா எழுதுங்க.

    ReplyDelete
  9. என்னமோ புதுமையா சொல்ல வந்தீங்கன்னு நெனச்சிட்டு வந்தேங்க.
    இருந்தாலும் ஏமாற்றமில்லை.

    ReplyDelete
  10. நானும் ரசித்தேன்

    ReplyDelete
  11. அகில உலக நியூக் ஸ்டார் நாசா பேரவை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.....கீ போர்டு 15 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டுவிடும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....

    ReplyDelete
  12. நீங்க என்ன பவர் ஸ்டார் ரசிகர் மன்ற தலைவரா, சும்மா கடிச்சு குதறிட்டீங்களே. அவ்வ்வ் !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!