04 August, 2013

நம்ம பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே...?



"ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா "

"என்ன சார்! கோழிப்பண்ணை வைக்க போறேன்னு, போன வாரம் நூறு கோழி குஞ்சு வங்கிட்டுப்போனிங்க... என்ன ஆச்சு?"

"ஒன்னும் வளரலப்பா..."

"சரி சார்! இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வரணும்"

"வருவோம்ல... போன தடவ என்ன தப்புன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல"

"போன தடவ என்ன சார் தப்பு?"

"ரொம்ப ஆழமா நட்டுட்டேன்"

*********************************



" இப்படி மடத்தனமா ஊழல் செஞ்சு மாட்டிகிட்ட என் புத்தியை செருப்பால அடிக்கணும்! "

" செருப்பு வைச்சிருக்கீங்க! புத்திக்கு எங்கே போவீங்க தலைவா? "

*********************************
மகன்: "அப்பா, கஞ்சன்னா என்னப்பா ?"

அப்பா : "யார் கண்லயும் காசையே காட்டாதவன் பேருதாண்டா கஞ்சன் "

மகன் : "அப்பா, காசுன்னா என்னப்பா ?"

*********************************


சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது

*********************************

சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..

மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..

சர்தார்:இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..
*********************************
 பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...


கூகுளில் எடுத்த நண்பர்கள் தின படங்களுடன்
பேஸ்புக்கில் தொகுத்த நகைச்சுவை துணுக்குகள்...
ரசித்தமைக்கு நன்றி...!

11 comments:

  1. ரசித்துச் சிரித்தோம் நண்பரே
    இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முதல் ஜோக் அருமை புதுசும் கூட!!

    ReplyDelete
  4. இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நண்பர்கள்தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குட் ஜோக்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. நானும் சிரித்தேன் சகோ!

    நல்ல நறுக்கு நகைச்சுவகைள்!

    த ம.6

    ReplyDelete
  8. மிக்க நன்றி சகோ உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    ReplyDelete
  9. அன்பின் சௌந்தர் - அனைத்துமே அருமை - சர்தார் ஜோக்ஸ் தான் சூப்பர் ஜோக்ஸ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. sirichchi sirichchi kainil NEER (not water)

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!