24 August, 2013

மனசு சஞ்சலப்படுகிறதா...? கண்டிப்பாக நீங்க இப்படித்தான் செய்யனும்...!...!



ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.




அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்

நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.

புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான். 
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். 
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். 
அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். It will happen. It is effortless. மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! it is an effortless process!

14 comments:

  1. எதுவுமே கடந்து போகும் என்று சொன்னார்கள் அல்லவா ?

    காலம் ஒன்று தானே கலக்கத்தை குறைக்கவல்லது !

    எதையுமே முதற்கண் பார்க்கையிலே ஏற்படுகின்ற உணர்வுகள்,
    சற்று நேரம் பொறுத்து இருந்து அவற்றினையே திரும்பி பார்க்கும்பொழுது
    ஏற்படுவதில்லை.

    புத்தனின் புத்திமதி

    பொறுத்தார் பூமி ஆள்வார் எனச் சொல்லும்.

    நன்றி.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  2. கலங்கின குட்டையிலேயே தெளிவா மீன் பிடிக்கிறவங்களாச்சே நம்மாளுங்க !

    ReplyDelete
  3. கலங்கின குட்டையிலேயே தெளிவா மீன் பிடிக்கிறவங்களாச்சே நம்மாளுங்க !

    ReplyDelete
  4. எதுவும் தேவை இல்லை... எதுவுமே...!

    ReplyDelete
  5. அருமையான எளிய விளக்கம்
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உண்மைதான்.அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும்

    ReplyDelete
  7. மிக ஆழமான அழுத்தமான உண்மை மனம் தனக்குத் தானே சரி ஆகும். காலம் ஒன்றே மருந்து. :)

    ReplyDelete
  8. அழுத்தமான செய்தி எளிமையான வரிகளில்

    ReplyDelete
  9. அன்பின் சௌந்தர் - நல்லதொரு அறிவுரை - புத்தபிரானை வைத்து ஒரு பதிவு. நல்வழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. Hi........hi...........hi............... kushtamappaa.......... chee.....kashtamappaa..............

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!