14 August, 2013

இதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..!


ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான். அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆயிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்

அங்க இருந்த துறவி சொன்னாரு. தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். 
அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னன்னு பார்க்கல. உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்தத்துக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்

உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான்

அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்.

மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும் மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு. ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான். வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார். இவனும் பண்ணினான்

ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார்.

உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார். இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி. ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் .

.
அது என்னன்னு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.

(பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க)

(நன்றி... ரசித்தது...)

12 comments:

  1. நீர் பெற்ற துன்பம் நாங்களும் படனுமா?! நல்ல மனசுங்க சௌந்தர் உங்களுக்கு!!

    ReplyDelete
  2. யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

    ReplyDelete
  3. ஒரு[?] பெண்டாட்டியோட ஒழுக்கமா வாழ்ந்து கிட்டிருக்கேன் ,இது பிடிக்கலையா உங்களுக்கு ?

    ReplyDelete
  4. பகிர்ந்ததில் துன்பம் பாதி குறைந்திருக்குமே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வணக்கம்

    படிக்கும் போது கதை நன்றாக உள்ளது நீங்கள் கடசியில் சொன்னதுதான் சின்ன வெறுப்பாக இருக்கு,,ஓ,,,,ஓ,,,,ஓ
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. Facebook-ல பார்த்தது நிறைய அடுத்த ஓரிரு நாட்களில் இங்கே பார்க்க முடியுது......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் அதேதாங்க...

      யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...

      Delete
  7. நீங்கெல்லாம் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா வருவீங்க
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  8. முடியல சார்.சரி அது என்ன நன்றிங்கண்ணா அப்போ கருத்து சொன்ன பெண்களுக்கெல்லாம் நன்றி இல்லையா?

    ReplyDelete
  9. சிரிப்பதா? அழுவதா? என யோசிக்க இது போல வேண்டுமே :))))

    ReplyDelete
  10. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!