27 August, 2013

இந்த மாணவர்கள் எம்புட்டு தயாராயிருக்காங்க பாருங்க...!






குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,


''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.

ஒருவன் சொன்னான்,

''ஐயா, இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''


"இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன்" என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.


அவன் சொன்னான்,
''இல்லை ஐயா, அவன் பெயர் ரவி.

என் பெயரோ, வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.''


*************************************



நம்ம நாராயணசாமி வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.


அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்து அதை அப்புறப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அந்த ஆள் குறும்பாக,

"சாமியாரே, இறந்த அந்த கழுதைக்கு இறுதிச் சடங்குகளை முதலில் முடித்துவிட்டு சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம்"என்றார்.


அதற்கு நாராயணசாமி சொன்னார்,


"அதற்கென்ன, பேஷாகச் செய்து விடுகிறேன். இருந்தாலும் அந்தக் கழுதையோட உறவினர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்".

***********************************




கை, கால்களில் கட்டுடன் அமர்ந்திருந்தார் கந்தசாமி.


"என்னடா... எப்படி அடிபட்டது?" கேட்டான் அவரது நண்பன்.


"நேற்று உணவு விடுதியில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது"


"ஏன்...என்ன நடந்தது?"

"என் மனைவியை அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்கு நேற்று இரவுசென்றேன். சாப்பிடும்போது அவள் உணவில் ஒரு பூச்சி கிடந்தது. உடனே அவள் சர்வரைப் பார்த்து, 'இந்தப் பூச்சியைத் தூக்கி வெளியே எறியுங்கள் என்று சொன்னாள் என்றாள்"

"சரிதானே... அதற்கும் நீ அடிபட்டதற்கும் என்ன சம்பந்தம்?"


நாராயணசாமி சொன்னார்,

"அந்த சர்வர் என்னைத்தூக்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்துவிட்டான்"

*************************



என்ன கொடுமை... கணேஷ்...


7 comments:

  1. நல்ல குறும்புகள்! இரசித்தேன்! தமிழ் மணத்தில் இணைக்க வில்லையா!

    ReplyDelete
  2. ரசித்தேன்....

    ReplyDelete
  3. வணக்கம்
    நகைச்சுவை மிக அருமையாக உள்ளது படிக்கும் போது சிரிப்பாகத்தான் வந்தது சுப்பர் நண்பரே வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
  4. இப்படியும் நடப்பதுண்டு உண்மைதான்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!