10 August, 2013

தலைவா சினிமா விமர்சனம் / thalaiva movie review


மக்களே முதல் முதலாக ஒரு தமிழ்படத்தை தெலுங்கில் பார்த்துவிட்டு திரைவிமர்சனம் எழுதுகிறேன்.  அதற்காக எல்லாவார்த்தையிலும் “லு” சேர்க்க வேண்டியதுதானேன்னு சொல்லக்கூடாது.  படம் புரிந்து விட்டது ஆனால் சில வசனங்களைத்தான்  சரியாக ரசிக்கமுடியவில்லை.

(படம் பார்க்க சென்ற திகிலுட்டும் அனுபவங்கள் அடுத்த பதிவில்.. ஏன் ஆரூர் முனா செந்தில் மட்டும்தான் எழுதுவாரா?...)

முதலில் இந்த படத்துக்கு எதற்கு தலைவா என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. “அண்ணா” இதுதான் சத்தியராஜ் அவர்களின் திரைக்கதை பெயர். ஆந்திராவில் ஓடும் தலைவாவுக்கு “அண்ணா” என்றுதான் பெயர்... (அங்கிட்டு ஒருத்தர் சொன்னாருங்க). தமிழகத்தில் ஏன் இந்த பெயரை வைக்கவில்லை என்று நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.



கதையா...? சரி சொல்றேன்... சிவா நடித்த தமி‌ழ்படம் மாதிரி தமிழில் வந்த டான் கதைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் காட்சிகளை எடுத்து ஒரு படத்தை கொடுத்துவிட்டார் இயக்குனர் விஜய்.


விஜய் ஒரு மும்மபைக்காரர். மும்மபையில் ஏற்படும் ஒரு கலவரத்துக்குபிறகு  சத்தியராஜ் விஜய்யை சிறு வயதிலே ஆஸ்திரேலியா அனுப்பிவைத்துவிடுகிறார். (இவங்க கம்முன்னு சென்னை செலைட் பண்ணியிருக்கலாம்.. அப்படி ஒண்ணும் ஆஸ்திரேலியாவை சுவாரஸ்யமாக காட்டியமாதிரி தெரியவில்லை)

விஜய் ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்திவருகிறார். இவருக்கு உதவியாக கொஞ்சம் நகைச்சுவைக்காக சந்தானம். (இப்பெல்லாம் சந்தானத்தின் தேதியை வாங்கிக்கொண்டுதான் ஹீரோவின் தேதியை வாங்குகிறார்கள்போல).
மினரல் வாட்டர் தொழில் மட்டுமில்லாமல் “தமிழ் பாய்ஸ்” (அங்க தெலுங்கு பாய்ஸ்) என்ற ஒரு டான்ஸ் குழுவை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் கொஞ்சமாய் பிரபலமாகிறார். இங்கு தான் ஹீரோயின் அமலாபாய் அறிமுகம் அப்படி இப்படின்னு விஜய்யுடன் சேர்ந்து நடனக்குழுவில் இணைந்து  அங்கு நடக்கும் நடனப்போட்டியிலும் வெற்றிப்பெறுகிறார்கள்.


அதுவரை கொஞ்சம் கலகலப்பாக சென்ற படம். திருமணம் செய்துக்கொள்ள அமலாபாலுடன் விஜய் மும்பை வந்தபிறகு கதை அப்படியே மாறிவிடுகிறது.


தன் அப்பா சாதாரன தொழிலதிபர் என்று  நினைத்த விஜய்க்கு தன்அப்பா மும்மையில் மிகப்பெரிய டான் என்று தெரியும் போது திகை்ததுப்போகிறார், மேலும் அப்போதே கைது செய்து.. ஒரு பாம் பிளாஸ்டில் கொள்ளப்படுகிறார்.


அமலாபால் ஒரு சிபிஐ ஆபிஸராம் சத்தியராஜை பிடிக்கத்தான் விஜய்யுடன் பழகுகிறார் என்பது அங்குதான் அம்பலத்துக்கு வருகிறது.

அதன் பிறகு தன் தந்தை விட்டஇடத்தை தானே நிரப்‌பவேண்டும் என்பதற்காக தானே டானாக மாறுகிறார். கொஞ்ச நேரம் பில்லா அஜித் போல டிப்டாப்பாக நடக்கவிட்டிருக்கிறார்கள். அதன்பிறகு மும்பையில் வாழும் மாஹி மக்களுக்கு உதவிகள் புரிந்து அங்கு நடக்கும் பிரச்சனைகளை, கலவரங்களை தடுத்துநிறுத்தி, தன் தந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கி... என இப்படி இழுத்து முடிக்கிறார்கள் படத்தை...

இடைவேளைக்கு பிறகு படம் நாயகன், பில்லா, பாட்ஷா, தேவர்மகன் எனபலபடங்களை நியாபகப்படுத்துகிறது அதானல் நீங்க அங்கேயே பார்த்துக்கங்க..


ஏன்னென்று தெரியவில்லை தற்போது கதையை எடுத்துக்கொண்டு மும்பை ஓடிவிடுகிறார்கள்.... மும்பை வீதிகளை அழகிய தமிழ்மகன், துப்பாக்கி, படத்திலேயே முழுசாக காட்டிவிட்டார்கள். எல்லோரும் தாராவியை காட்டுவதால், இவர்கள் கொஞ்சம் வித்தியாசமான வடமும்பையிலுள்ள மாஹிம் பகுதியைச் சுற்றி கதையமைத்துள்ளார்கள். (ஒருவேளை பாலிவுட்டை பிடிக்க விஜய் திட்டமிட்டுருக்கிறாறா?)
 
வழக்கமான விஜய் படத்தில் வரும் காட்சிகள்தான் இந்தப்படத்திலும் புதியதாக ஒன்றும் செய்யவில்லை. வித்தியாசமான காட்சி அமைப்பு‌களோ.. பரபரப்பான திரைக்கதையோ இல்லை... (ஒரு சில இடங்களில் மட்டும் கைதட்டலாம்)


படத்துக்கு படம் விஜய்யின் இளமை கூடிக்கொண்டே இருப்பதை மறுக்க முடியாது. மனிதர் ரொம்பவும் அழகாக காணப்படுகிறார். ஆனால் இயக்குனர்களோடு ஒட்டமறுத்து அப்பாவின் பேச்சைக்கேட்டுக்கொண்டு இருந்தால் விஜய்யின் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை. (அனைத்தையும் விட்டுவிட்டு அரசியல் நடத்த வந்துவிடலாம்)

அமலா பால் முதல் பாதியில் ஹோட்டல் அதிபரின் மகளாக வந்து பின் விஜய்யுடன் இணைந்து “டான்ஸ்“ குழுவில் இணைத்து நடனத்தால் அசத்தியிருக்கரார்.. இரண்டாம் பாதியில் நான்கு காட்சியில் காக்கிச்சட்டையில் வந்து போகிறார் அவ்வளவுதான்.

இன்னும் சில காதாப்பாத்திரங்கள் தங்கள் பணியை செவ்வனவே செய்கிறார்கள். நிறைய முகங்கள் தமிழ் முகங்கள் அல்ல....

எது எப்படியோ இயக்குனர் விஜய்க்கும்.. ஹீரோ விஜய்க்கும் சரியான கதைகளம் அமையவில்லை என்றே சொல்லவேண்டும்

A மற்றும் B சென்டரில் படம் டல்லடிக்கும் ஆகால் C சென்டர் மக்கள் இதை கண்டிப்பாக கொண்டாடுவார்கள்...

விமர்சகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது என்னுடைய அபிப்ராயம்.

15 comments:

  1. நானும் இவர் கூட படத்துக்குப் பொய் தலைவலியை இலவசமாக வாங்கி வந்தேன்,

    ReplyDelete
    Replies
    1. ஏங்க ஜனங்களை இப்பவே பயமுருத்த வேண்டும் என்று விட்டுட்டேங்க...

      தலைவா...

      Delete
  2. கருணுக்குத் தலைவலி மாத்திரை வாங்கிக் கொடுத்தீர்களா?!

    ReplyDelete
    Replies
    1. அந்த மருந்தையே வாங்கிகொடுத்தேங்க...

      Delete
  3. விஜய் படத்துக்கு இவ்வளவு மெனக்கெட்டு இருக்க வேண்டாம்! எப்பவும் தெலுங்குல ஹிட்டான படமா பாத்து ரீமேக் செஞ்சு ஹிட் கொடுக்கிற பார்முலாவையே பாலோ பண்ணியிருக்கலாம்! கஷ்டப்பட்டு தலைவலியோடு படம் பார்த்து விமர்சனம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது ஆர்வத்துல இறங்கிட்டோம்...

      விஜய் இனிமேல் கண்டிப்பாக வெற்றி கதைகளை தேடி ஓடுவார் என்று நினைக்கிறேன்

      Delete
    2. ஓவர் பில்டப் கொடுக்கறாங்களே எப்படியும் அசத்தலாக இருக்கும் ஒரு நல்ல படத்துக்கு விமர்சனம் பண்ண பெருமை நமக்கு கிடைக்கட்டன்னு கொஞ்சம் அவசப்பட்டுட்டேங்க....

      Delete
  4. நடத்துங்கய்யா நடத்துங்க

    ReplyDelete
    Replies
    1. நடத்துரேம்மய்யா... நடத்துறோம்...

      Delete
  5. ஓக்கே ரைட்டு

    ReplyDelete
  6. தெலுங்குல ஹிட் ஆயிரும் அப்ப

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!