23 September, 2013

என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்..?



நீ அதிகாலையில் போட்ட கோலத்தில்
பூக்களாய் பூக்கிறேன் நான்...

குடம் சுமக்கும் இடையில் சிக்கி
உன் பாரங்களை சுமக்கிறேன் நான்...

புத்தகங்கள் சுமந்து நீ கல்லூரி செல்கையில்
படிக்கும்ஆசையோடு பயணிக்கிறது மனசு...

நீ வேண்டுதலுக்காய் ஆலயம் செல்கையில்
திருநீர் பூசி பக்தனாய் பின்தொடர்கிறேன் நான்...

உன் மாலைநேர வருகைக்காக பூங்காவில் காத்திருப்பது
புல்வெளியும் பூக்களோடும் சேர்ந்து நானும்...

நீ விரும்பி வாங்கிய வண்ணங்களைதான்
கொண்டாடிக்கொண்டிருக்கிறேன் நான்..

உனக்கு பிடித்த உணவுகளைத்தான்
என் விருப்ப பட்டியலில் பதிவேற்றியிருக்கிறேன்...

தூங்கநினைத்து  இமைகளை மூடும் நிமிடங்களில் இருந்து
என் கனவுகளை ஆக்கிரமிப்பது நீதான்

இப்படியாய்...!
காலை முதல் இரவு வரை 
உன்னோடே பயணிக்கிறேன் நான்
இதை எப்போது உணரப்போகிறாயோ நீ...!


12 comments:

  1. உன்னோடே பயணிக்கிறேன் நான்
    இதை எப்போது உணரப்போகிறாயோ நீ...!
    >>
    விரைவில்....,

    ReplyDelete
  2. என்னங்க! திரும்பவும் காதல் கவிதைகளாய் பொழிய ஆரம்பிச்சிட்டீங்க! அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கலந்து கொடுக்க வேண்டியது தானே....

      Delete
  3. எடுத்துரையுங்கள் இருவர் பாதையும் ஒன்றென்பதை விரைவில் கை கூடும்...நல்ல கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கை கூடும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது...

      நன்றி பிரியா

      Delete
  4. கவிதை அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. காலை கோலத்துடனேயே காதலும் தொடங்கிவிட்டது :))
    ரசனை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!