25 September, 2013

அனைத்தையும் துறப்போம் வா...!


வா.. நண்பனே...
ஒற்றுமைக்கான ஒப்பந்தத்தை
பரிசீலனை செய்வோம்...
 
நெருப்‌பை கக்கும் சூரியனைக்கும்
பொருப்போடு சுற்றிவரும் பூமிக்கும்
இடையில் வாழும்
நீயும் நானும் எத்தனை வேற்றுமைகளோடு...

நமக்குள் ஏன் வெறுப்பு...
உறவாடி களியாமல் ஏன்இந்த பகை
நீயும் நானும் சகோதரன் என்றால்..?

இதை அறிந்தோமா?
தாய்பூமி சுமந்த அமைதி கர்ப்பம்
கலைந்துக்கொண்டிருப்பதை...

நம் அனைவரும் சகோதரர்கள்...
நம்மை சுற்றிய அனைவரும் சகோதரிகள்...
நாட்டை எரிக்கும் நெருப்பிலா
நாம் குளிர்காய்வது...?

சாதிக்கென்றும்....
மதத்துக்கென்றும்...
மொழிக்கென்றும்...
இன்னும் எப்படி‌எப்படியோ
மாறிவிட்டது நம் முகங்கள்..?

செத்துக்கொண்டிருக்கும் மனிதநேயத்துக்காக
உன் இயலாமையின் தடுமாற்றமும்
என் எதிர்பார்ப்பும் என்ன..?

என்னையும் உன்னையும்
குறிவைத்து தாக்கிக்கொண்டிருக்கிறது
இந்த ஜாதியும் மதமும்..!

பொறுத்தது போதும்... 
இனியும் எதற்கு வேறுபாடு
வா..! நீயும் நானும் வேற்றுமை துறப்போம்.. 
“தூங்காத விழிகளோடு..” 
என்ற என் கவிதை நூலிலிருந்து..!

6 comments:

  1. ஒவ்வொருவரும் உணர வேண்டும்...

    ReplyDelete
  2. மிக மிக அருமைங்க..ஒவ்வொரு வரியும் கூர்மை. உங்கள் கவிதை சொல்வது நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
    த.ம.3

    ReplyDelete
  3. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. காலம் காலமாக பலரும் சொல்லி வந்தாலும் இந்நிலை வரும் நாள் வருமா என்பதுதான் தெரியவில்லை...

    ReplyDelete
  5. அனைவரும் உணரவேண்டியது. அருமையான கவிதை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!