12 September, 2013

மரியாதை இழக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு



“காசே தான் கடவுளடா... அந்த கடவுளுக்கு இது தெரியுமடா....
கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே"
என்று கண்ணதாசன் காசை கடவுளாக உறுவகப்படுத்தி பாடினான். 

அன்றைய காலகட்டத்தில் பணத்திற்கு தனிமரியாதை இருந்தது. அதை அடைவதற்கும் அதை சம்பாதிப்பதற்கும், இருபது ஆண்டுகளுக்கு முன்வரை மிகவும் கடினமாக இருந்தது. 

என் தாத்தா அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார் அன்னிக்கு கால் அனா கொடுத்தா அது கிடைக்கும் அரை அனா கொடுத்த இது கிடைக்கும் என்று ஆனால் இன்று சில பொருட்களின் விலையானது விண்ணைத்தொடு அளவுக்கு இருக்கிறது. 

ஆனால் பல்வேறு வழிகளில் இன்று அனைத்து பொருட்களையும் பயன்படுத்துகிறோம். பணம் ஒரு தடையாக இருப்பதில்லை. ஆனால் வாங்கும் பணம் இன்று எந்த நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் மிகவும் பரிதாபத்துக்குறியதாக இருக்கிறது.



நம் நாட்டின் செல்வத்துக்கு சரியான அடையாளமாகவும், நல்ல மரியாதைக்குரியதுமாக விளங்குபவை இந்த ரூபாய் நோட்டுக்கள். இந்திய தேச ஒற்றுமையை பிரதிபலிக்கும் ரூபாயை நம் முன்னோர்கள் தங்களை காக்கும் குலதெய்வமாக கருதி மரியாதையளித்து வந்தனர்.

 

இன்‌றைய காலக்கட்டத்தில் உழைக்காமலும் பணத்தை ஈட்டலாம் என்ற மனபோக்கு மக்கள் மத்தியில் வளர்ந்து விட்டதால் பணத்தின் மீதுஇருந்த தனிமரியாதை தற்போது பறிபோய் விட்டது. 

அதற்கு சான்றாக ரூபாய் நோட்டுகளில் இருக்கும் வெண்ணிற வெற்று இடத்தில் ஏதேதோ கிறுக்கி புழக்கத்தில் விடுவதை பார்க்க முடிகிறது. 


ஆனால் இன்று...!


ரூபாய் நோட்டுக்களை யாரும் மதிப்பதே கிடையாது...

நோட்டுக்களை பல மடிப்புகளாக மடித்து வைக்கிறோம். சிலர் அப்படியே சுருட்டி எங்காவது ஒரு இடத்தில் சொருகி வைக்கிறார்கள்.  சிலபேர் ரூபாய் நோட்டுக்களை சுருட்டி காதுகுடைந்துக்கொண்டிருக்கிறார்கள்.


பெரும்பாலான காதல் ‌ஜோடிகள் ரூபாய் நோட்டில் வரைப்படங்கள், இதயம் வரைந்து அதில் அம்பு விடுதல், காதல் வசனங்களையும் எழுதி வைக்கின்றனர். சிறிய மதிப்புடைய ரூ.5, ரூ.10, மற்றும் இருபதுரூபாய் நோட்டுகளில் இதுபோல் அதிக எழுத்துக்களை காணமுடிகிறது.   

கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், விடலை பையன்களும் இந்த ரூபாய் நோட்டுகளில் கவிதைகள், காதல் சின்னங்கள், முகவரிகள், காதலர்களின் பெயர்கள், படங்கள் என எதைஎதையே கிறுக்கிவைக்கிறார்கள்.

அரசியல் தலைவர்கள் கூட்டம் என்றால் தற்போது தவறாமல் இடம்பெறுவது ‌கரன்சி மாலை... ஒரு காலத்தில் ஒரு மரியாதை நிதித்தமாக இருந்த இந்த மாலை இப்போது கௌரவ பிரச்சனையாகவும் மாறிவருகிறது. மாலை, கிரிடம், தோரணம்,  இப்படியே முன்னேறிபோய்க்கொண்டு இருக்கிறது.


ஒரு காலத்தில் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் தயாரிக்கப்பட்ட நோட்டு மாலை இப்போது ஆயிரம் ரூபாயை கொண்டு தயாரிக்கும் அளவுக்கு முன்னேரி வருகிறது நாடு...(சமீபத்தில் இந்த கரன்சி மாலையால் ஒரு முதல்வர் பிரச்சனையில் மாட்டியது நினைவிருக்கலாம்)


அது போதாதென்று இந்தியாவில் பல்வேறு கோயில்களில் சாமிகளையும், மூலஸ்த்தானத்தையும் ரூபாய் நோட்டுகளைகொண்டு அலங்காரங்கள் செய்து பூஜை நடந்திக்கொண்டிருக்கிறார்கள்.




இன்னும் ஒருபடிமேலேபோய் சினிமாக்களில் ரூபாய் நோட்டுகளை விளையாட்டு பொருட்களாக... அதாவது ராக்கெட் செய்து விட, மழையில் கப்பல் செய்து விடவும், எரிப்பது என சித்தரித்து ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு அகல பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கும் வேளையில் இன்னும் பணத்தின் பயன்பாடு என்னன்ன வேலைகளுக்கு பயன்படுமோ என்று தெரியவில்லை.



இப்படியே போனால்...

இன்னும் அன்றாட செயல்பாடுகளுக்குகூட காகிதத்திற்கு பதில் பணத்தை பயன்படுத்தும் நிலைக்கு இந்திய ரூபாய் போய்விடும் போலிருக்கு... 
தற்போது அமெரிக்கா டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாயை எட்டியிருக்கும் வேளையில் இன்னும் அதன் மதிப்பு என்னவாகும் என்ற கேள்வி அனைத்து மனங்களிலும் எழுகிறது. இப்படி குறையும் பணத்தின் மதிப்பை இன்னும் ஏன்நாம் மதிப்பிழக்கவேண்டும்.

நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர், நிதியமைச்சர் என அத்தனை தலைமைப்பொருப்புகளிலும் பொருளாதார நிபுனர்களாக வீற்றிருக்கும் இந்த தேசத்தில் பொருளாதாரத்தை இப்படி குப்புறபோட்டுவிட்டு வேடிக்கைப்பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.


தற்போது விழித்துக்கொண்டிருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி பணத்தின் மதிப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...
 

அதில் முதல் கட்டமான இந்திய ரூபாய் நோட்டுகளை மரியாதையை அதிகரிக்க தற்போது கோயில்கள், விழாக்கள் போன்றவற்றில் அலங்காரப்பொருளாக நோட்டுகளை பயன்படுத்த கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளது.


ரூபாய் நோட்டுக்கள் நம் தேசத்தின் அடையாளம்... அந்த அடையாளம் அழியாமல் பார்த்துக்கொள்வது நம்முடைய கடமை...! பணமதிப்பைத்தான் இழக்கிறது... மரியாதையையும் இழக்க வேண்டுமா...?

அது என்ன ஒன்பது ரூபாய் நோட்டு.... இந்தியாவில் 9 மதிப்புகளில்தான் ரூபாய் நோட்டுகள் இருக்கிறது.. அதாவது 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 1000, என 9 வடிவங்களில் இருக்கிறது. தற்போது 1, 2, 5, ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்திருக்கிறது.

6 comments:

  1. யோசிக்க வேண்டிய விசயம்தான்!!

    ReplyDelete
  2. ரூபாய் நோட்டிலே காந்தி சிரிக்கிறார் ,அதை வைத்திருக்கும் நாமதான் எதையும் வாங்க முடியாமல் அழுதுக் கொண்டிருக்கிறோம் !
    த.ம.2

    ReplyDelete
  3. ரூபாயை பற்றிய தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  4. சரியாகச்சொன்னீர்கள்! என்ன செய்வது காலம் செய்யும் விலையாட்டு

    ReplyDelete
  5. யோசிக்க வேண்டியதை பகிர்வாகத் தந்திருக்கிறீர்கள்...
    அருமையான பதிவு...

    ReplyDelete
  6. நல்ல தகவல்..ஒன்பது ரூபாய் நோட்டையும் அறிந்துகொண்டேன்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!