28 September, 2013

பேஸ்புக் பதிவர் குறித்து தன் படத்தில் மிஸ்கின் கூற்று சரிதானா..?


‌நேற்றுமட்டும் இரண்டு மாறுப்பட்ட படங்கள் பார்க்க நேர்ந்தது... காலை 10.30 மணி காட்சி ராஜா ராணி படம்.. (விமர்சனம் படிக்க கிளிக் செய்யவும்) இருந்த வேலைகளை மதியம் முடித்துவிட்டு மாலை 6.00 மணி காட்சிக்கு அடுத்த திரையரங்கில் ஓடும் மிஸ்கின் படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (விமர்சனம்) பார்க்க சென்றுவிட்டேன்.. 

ராஜா ராணி...! இரு காதல் ஜோடியின் வாழ்க்கையை மாறுப்பட்ட கோணத்தில் பொழுதுப்போக்காக சொல்லப்பட்ட நகைச்சுவைத் திரைப்படம்... ஆனால் மிஸ்கின் திரைப்படம் எல்லாவற்றிலும் மாறுப்பட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு 6.15 மணி காட்சிக்கு 6.00 மணிக்கு சென்றேன் திரையரங்க வளாகம் காலியாக இருந்‌தது ஒருவேளை படம் போட்டுவிட்டார்களா என்று பார்த்ததேன்... அப்படி‌யோதும் இல்லை... கூட்டம் இல்லை... இறுதியில் 15 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தும் 1000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகொண்ட  அரங்கில் வெறும் 15 பேர் மட்டுமே படம் பார்த்தோம். (ரைட்டு விடுங்க)


சரி விஷயத்துக்கு வருகிறேன். பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துவோர் மீது ஓர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது... (நாம் எந்த மாதிரியாக சமுகத்தில் வாழ்கிறோம்) இப்படி பல்வேறு சூழலில் பேஸ்புக் பதிவர்களை தன்னுடைய படத்தில் சமூக அக்கறையற்றவர்களாக காட்டியிருக்கிறார் மிஸ்கின்.

ஆரம்ப காட்சியில் குண்டடிப்பட்டு இரத்தவெள்ளத்தில் ஒருவர் வீழ்ந்துகிடக்கிறார்... அந்த உடலைப்பார்த்து ஆட்டோவில் செல்பவரும்.. நடந்து செல்பவரும் பரிதாபத்துடன் பார்த்துச் செல்வார்கள்... யாரும் அவருக்கு உதவிசெய்யவில்லை...

அடுத்து இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் அந்த காட்சியை பார்க்கிறார்கள்.. பின் பக்கம் அமர்ந்து இருப்பவர் “டேய் நமக்கு ஏன் வம்பு செல்லாம்” என்று சொல்கிறார்..

உடனே வண்டி ஓட்டிவந்த நபர்.. தன்னுடைய செல்போனை எடுத்து அந்த காட்சியை தன்னுடைய செல்போனில் படம்பிடிக்கிறார்... நண்பர் எதற்கு என்று கேட்க...

போஸ்புக்-ல போடலாம்டா என்று கிண்டலாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்கள்....

இப்போது சொல்லுங்கள்.... அடிப்பட்டு விழுந்துகிடக்கும் ஒருவரைப் பார்த்து அவருக்கு முதலில் எதாவது உதவி செய்யாமல்... பேஸ் புக்கில் படத்தை போடுவதற்கு ஆர்வம் காட்டுவது மிகவும் கிழ்த்தனமான ஒரு செயல் அல்லவா...? பேஸ்புக்கில் இருப்பவர்கள் சமூக அக்கறையற்று பேஸ்புக்கில் இப்படியா செய்துக்கொண்டிருக்கிறோம்.


ஒருவேளை இதுதான் உண்மையா... பேஸ்புக் தற்போது சமூக சிந்தனையில் இருந்து விலகி வெட்டித்தனம், கிண்டல், நையாண்டி, வீண் வேலை, வதந்திகளை பரப்புதல், என இப்படித்தான் போய்கொண்டிருக்கிறதா...?

உண்மையில் இந்த காட்சியில் மிஸ்கின் சொல்லவருவது என்னதான் என்று எனக்கு தெரியவில்லை..

7 comments:

  1. இதற்கு பதில் கூற
    உண்மைத் தமிழன் தான்
    சிறந்த நபர் என்று எண்ணுகிறேன்

    ReplyDelete
  2. பேஸ்புக்கில் அரட்டை, அழிச்சாட்டியம் எல்லாம் இருந்தாலும் பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...

    ReplyDelete
  3. மிஸ்கின் மிஸ்டேக்காய் சொல்கிறார் ...மனிதாபிமானம் அற்ற காட்சிகள் டிவியில் தான் பார்க்க நேரிடுகிறது !
    த.ம.5

    ReplyDelete
  4. மிஷ்கின் காட்டியது மிக சரி. உலகெங்கும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  5. மிஸ்கின் காட்டியதும் சரிதான்
    அதிக லைக்குகள் பெறுவதொன்றே நோக்கமெனக்
    கொண்ட சிலரும் அதில் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  6. மிஸ்கின் கருத்து உண்மைதான் நண்பரே...

    ReplyDelete
  7. கருத்து சரியெனில் வருந்தத் தக்கது

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!