15 October, 2013

நீங்கள் இதை வீட்டில் சொல்லும் தைரியம் உண்டா..?


ண் குழந்தை ஒன்று...
‌அடுத்து பெண் குழந்தை ஒன்று...
போதும் என்று முடிவெடுத்தாகிவிட்டது..!


நம் குழந்தைகளுக்கு
தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்

பலமுறை பரிசீலித்து தேர்வுசெய்துவிட்டோம்..!

ஒவ்வொறு பிள்ளையும்
எதிர்காலத்தில் என்னவாகவேண்டும்
கற்பனை குதிரையை பறக்கவிட்டுள்ளோம்...!


நம் உருவங்களை வடித்தெடுத்து
வளர்ந்துவிட்ட குழந்தைகளை
சுதந்திரமாய் பறக்கவிட்டு மகிழ்ந்திருக்கிறோம்..!


பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து
பேரன் பேத்தியை கொஞ்சிக்கொண்டிருக்கிறோம்
தாத்தா பாட்டியாகிவிட்ட நீயும் நானும்...!


இப்படியாய் சென்றுக்கொண்டிருந்த
கனவுகளை கொஞ்சம் நிறுத்திவிட்டு

மௌனத்தால் பேசிக்கொள்கிறோம்..!
 

எப்போதுதான் சொல்லப்போகிறேமோ...!
என் வீட்டிலும் உன் வீட்டிலும்

நம் காதலை...!

ரசித்த அனைவருக்கும் நன்றி....!

16 comments:

  1. வணக்கம்
    ரசிக்கவைக்கும் வரிகள் கவிதை நன்று வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அடடா... கனவா...? தேறுவது சிரமம் தான்... ஹிஹி...

    ReplyDelete
  3. இனி சொன்னால் என்ன!? சொல்லாட்டி என்ன!?

    ReplyDelete
  4. நிச்சயம் எல்லோருக்குள்ளும்
    இப்படி ஒன்று இருக்கும்தான்
    அதை மட்டும் அல்ல
    இந்தக் கவிதையைப் போலவும்
    சொல்லமுடியாதுதான்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அட... அத்தனையும் கனவுதானா...:)

    அருமை! அழகிய கற்பனை!

    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.4

    ReplyDelete
  6. அட முடிவில் இப்படித் திருப்பிட்டிங்களே :)
    வீட்டில் சொல்லாமல் இவ்வளவு நீண்ட கனவா? சரி, காதலைச் சொல்லவேண்டாம், இந்தக் கனவைச் சொல்லிவிடுங்கள் அவரவர் வீட்டில்!
    அழகிய கற்பனைங்க!

    ReplyDelete
  7. கனவுக் கவிதை...
    அருமை...
    வரிகள் கலக்கல்...

    ReplyDelete
  8. நான் வேண்டுமானால் உங்கள் வீட்டிற்கு துர்து போகட்டுமா?

    ReplyDelete
  9. விரைவில் சொல்லிவிடுங்கள். :))) வாழ்த்துகள்.

    அருமை.

    ReplyDelete
  10. அழகிய கனவு... :)

    ReplyDelete
  11. அன்பின் சௌந்தர் - கனவு நன்று - ஆனால் காதலை எப்பொழுது தான் சொல்வது ? விரைவினில் சொல்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. கனவிலேயே பேரன் பேத்திகளா? அருமை

    ReplyDelete
  13. இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது காதல் நிறைவேறட்டும் !
    த.ம 1௦

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!