25 October, 2013

இந்த தகவல் தெரியுமா உங்களுக்கு... மேலும் பார்க்க.. ரசிக்க.... சிரிக்க...


உன் பிரிவுதான் உணர்த்துகிறது
ஒரு ந‌ாளைக்கு எத்தனை
நிமிடங்கள் என்று..!
 
உன் அமைதிதான் உணர்த்துகிறது
ஒரு மௌனத்திற்கு எத்தனை
அர்த்தங்கள் என்று...!

உன் கண்கள்தான் உணர்த்துகிறது
ஒரு பார்வைக்கு எத்தனை
சுகங்கள் என்று...!

உன் இதயம்தான் உணர்த்துகிறது
உன் மனதுக்கு எத்தனை
அழுத்தங்கள் என்று...!

******************************


(தெரிந்துக்கொள்ளுங்கள்)

அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005-ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. 

அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.


தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி எதையும் குறிப்பிடத் தேவையில்லை. 

விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. 

பார்லிமென்ட், சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.

குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. 

இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது. 
**************************
 ""ஹலோ, டாக்டர் 
நான் உங்களப் பார்க்க வரணும். நீங்க எப்ப ஃப்ரீ''

""எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது. 
ஃபீஸ் வாங்குவேன்''
**************************


 
(பார்க்க சிரிக்க)
**************************

12 comments:

  1. உங்கள் கவி வார்த்தைகள் தான் உணர்த்துகின்றன
    காதல் எவ்வளவு வலிமையானது என்று...

    ReplyDelete
  2. கவிதையுடன் பயனுள்ள தகவலுடன்
    கூடிய பகிர்வு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தகவல் அறியும் சட்டம் பற்றிய விரிவான தகவல்தந்தது மிகவும் நன்று! அனைவரும் அவசியம் அறிய வேண்டுவன!
    பயன்படும்! நன்றி!

    ReplyDelete
  4. கவிதை அருமை! RTI பற்றிய தகவலும் பகிர்ந்தமை நன்று, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது!

    ReplyDelete
  5. உங்கள் பதிவைப் பாத்துதான் இன்று தகவல் அறியும் உரிமை சட்ட நாள் என்பதை தெரிந்துகொண்டேன்... பயனுள்ள தகவல்கள்...

    ReplyDelete
  6. வணக்கம்

    கவிதையும் அருமை தகவலும்அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. எல்லாம் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கவிதை அருமை... நல்லதொரு தகவல் பகிர்வு...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!