22 October, 2013

பெண்களை எந்த கண்னோட்டத்தோடு பார்க்க வேண்டும்... இதை நீங்கள் ஏற்பீர்களா..?

 


ஒரு குரு சீடர்களுக்குப் பாடம் போதித்துக் கொண்டிருந்தார்.

“பிறப்பைப் பொறுத்தவரை எல்லா உயிர்களும் சமமே. பசி, தாகம், தூக்கம், மரணபயம் இவை எல்லா உயிர்களுக்கும் உண்டு. கவலைகள் என்பவை எல்லோருக்கும் பொதுவானவை. இரவும், பகவும் மாறி மாறி வருவது போலவே இன்பமும், துன்பமும் ஒருவரது வாழ்வில் மாறிமாறி வரும். அதே போல் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும்”

சீடர்கள் குரு சொல்வதைக் கூர்மையாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“இரவு வருகிறது. மெல்ல அது கலைந்து பொழுது புலர ஆரம்பிக்கிறது. அந்த சமயத்தில் எந்த நொடியில் பொழுது விடிந்து விட்டது என்பதை நீ அறிவாய்..?” குரு ஒரு கேள்வியுயுடன் தன் போதனையை நிறுத்தினார்.

“ஒரு மிருகம் தொலைவில் நிற்கும் போதே அது கழுதையா, குதிரையா என்று அடையாளம் காண முடியும் என்றால் அதை வைத்து வெளிச்சம் வந்து விட்டது என்று புரிந்து கொள்ளலாம்” என்றான் ஒரு சீடன்.

குரு இல்லை என்று தலையசைத்தார்...

“ஒரு மரம் தூ‌ரத்திலிருக்கும்போதே இங்கிருந்தபடி அது ஆல மரமா, அரச மரமா என்று சொல்ல முடியுமானால் அதுதான் வெளிச்சம்!” என்றான் வேறொருவன்.

அதற்கும் குரு மறுப்பாகத் தலையசைத்தார்...

சீடர்கள் விழித்தார்கள்...

கடைசியாக “சரியான விடையைத் தாங்கள் தான் கூறி அருளவேண்டும்!” என்றனர்.

“எந்த ஒரு மனிதரைக் கண்டாலும் இவன் என் சகோதரன் என்றும், எந்த ஒரு பெண்ணைக் கண்டாலும் இவள் என் சகோதரி என்றும், எப்போது நீ  அறிகிறாயோ அப்போதுதான் உண்மையான வெளிச்சம் உனக்கு ஏற்பட்டது என்று பொருள். அதுவரை உச்சி வெயில் கூட உமக்கு காரிருளே.”

 யாதும் ஊரே... யாரும் கேளிர்... அப்படித்தானே....

இப்படிப்பட்ட மனநிலை நம் மக்களிடையே வந்துவிட்டால் ஏன் தேவையில்லாத கற்பழிப்பும் கலவரங்களும் இங்கு நடக்கிறது.. தற்போது திருமணமாகிவிட்டப்பிறகு கூட அடுத்தப்பெண்களை கண்டு வழிவது குறையாமல் இருக்கிறது. இதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள்...


9 comments:

  1. குரு மிகச் சரியாக சொல்லி உள்ளார்... அவரவர் உணர வேண்டும்...

    ReplyDelete
  2. குரு கேட்டது ...எந்த நொடியில் விடிந்ததென்று ?அதாவது கண்ணுக்கு !
    கடைசியில் அவர் பதில் ..மனதில் ஏற்படும் விடியலைப் பற்றி !ஏதோ லாஜிக் இடிக்கிற மாதிரி தெரியுதே !
    த. ம.3

    ReplyDelete
  3. அவரவர் உணர்ந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  4. அறியாத மூடர் உங்கள் பதிவைப் படிக்க வேண்டுமே...ஹ்ம்ம்
    பகிர்விற்கு நன்றி சௌந்தர்!

    ReplyDelete
  5. “தற்போது திருமணமாகிவிட்டப்பிறகு கூட அடுத்தப்பெண்களை கண்டு வழிவது குறையாமல் இருக்கிறது. இதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள்...“

    என்னது தற்போதா.....? இராமாயணம் படித்ததில்லையா நீங்கள்?
    அல்லது
    இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வந்த திருக்குறளில் “பிறனில் விழையாமை“ படித்ததில்லையா...?

    என்ன சௌந்தர் நீங்கள்.... உலகம் தெரியாத இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறீர்கள்!!!

    ReplyDelete
  6. குரு சொல்லும் ஒளி
    பரவினால் நிச்சயம் மன இருள் நீங்கும்தான்
    தெளிவைத் தரும் பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நல்ல கருத்து தான்... எல்லாரும் எத்துகிறனுமே...

    ReplyDelete
  8. சரியான கருத்து

    ReplyDelete
  9. நல்லதொரு அறிவுரைக் கதை! நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!