சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.
காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.
நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.
பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.
பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.
நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.
நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.
கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.
சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.
15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.
நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
வணக்கம்
ReplyDeleteவித்தியாசமான படங்கள் பொது அறிவு கருத்து நிறைந்த பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
///பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.///
ReplyDeleteJohn F. Kennady suttu kollappatta time endru paditha yabaham.
நல்ல தகவல்கள்
ReplyDeleteஅழகு...
ReplyDeleteஅனைத்தும் அருமை தகவல்களும் படமும், கடிகார நேரத்தில் மட்டும் லேசான சந்தேகம்
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDelete\\காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.\\இப்படி கூட ஒரு காரணம் இருக்கா?? [இதுக்கு அர்த்தம் என்னன்னு சொல்லிட்டா நலம்!!]
ReplyDelete\\வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.\\ தகவலுக்கு நன்றி.
காரில் பணயம் செய்யும்போது அல்லது இருக்கும் போது பூமிக்கும் காருக்கும் இடையில் டயர் இருப்பதால் பூமி காரின் வழியாக மின்னலை இழுக்கும் வாய்ப்பு இல்லை...
Deleteஎன் அறிவுக்கு எட்டியது
படமே சொல்லிருச்சு... நீங்க அங்கதான் வருவீங்கன்னு...
ReplyDeleteசின்னச் சின்ன தகவல்கள் அருமை.
#பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.#
ReplyDeleteஆப்ரகாம் லிங்கன் சுட்டுகொல்லப்பட்ட நேரத்தை நினைவுபடுத்துவதற்கும் அந்த நேரம் என்பார்கள் !
த.ம 6
இது உண்மை தகவல்தான்...
Deleteஅதற்காக லிங்கனை சுட்டுக்கொன்றதற்காகவா இப்படி புன்னகை காட்டு நேரம் என்று கேட்காதீர்கள்
வணக்கம் சகோதரர்...
ReplyDeleteபல தகவல்களைத் தாங்கிய அற்புதமான பதிவு. தலைப்புக்கு விடை தந்த விதம் ரசிக்க வைத்தது பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்..