20 December, 2013

நமது வாழ்க்கை விஜய் படம் மாதிரியா..?


டைம் என்பது சூப்பர் ஸ்டார் படம் மாதிரி ஓடிகிட்டே இருக்கும் ஆனா
வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி நாமதான் ஓட்டனும்...
 
********************************

 "எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"

"நீ உருப்படவே மாட்டேன்னாங்க!"

********************************

Mr.X. அவர் மனைவியுடன் காபி ஷாப் சென்று 2 கோப்பைகள் காபி வாங்கினார். 
Mr.X வேகவேகமாக அருந்தி முடித்தார்.

மனைவி: ஏன் இப்படி சுடச்சுட குடிக்கிறீங்க..!

Mr.X.: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 10 ரூபாய்,
குளிர் காபி (Cold coffee) 20 ரூபாய்!!!


********************************

 ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு 
இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
 
எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

********************************


மேனேஜர்: "எங்க பேங்க்ல இண்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்".!...

கிராமத்தான்: "கொடுக்கறத கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாம்ல.. ஏன் இண்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க"?

********************************


"அப்பா நாளையிலிருந்து நாம பணக்காரனா ஆகிடலாம்."

"எப்படி?"

"எங்க கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்."

********************************


நம்ம டாக்டர் அபாய கட்டத்தை தாண்டிட்டாரு!

என்ன சொல்றே?

பேங்க் லோன் கட்ட இன்னிக்கு கடைசிநாள்.
என்னபண்றதுன்னு முழிச்சிகிட்டு இருந்தாரு. 
அதுக்குள்ள ஒரு பேஷண்ட் வந்துட்டாரு!

********************************
நகைச்சுவை துணுக்குகளையும்
படங்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி...!

5 comments:

  1. ஹா... ஹா... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நகைச்சுவைகள் எல்லாம் அருமை...
    சிரித்தேன்... சிரித்தேன்.

    ReplyDelete
  3. படமும் சகைச் சுவையும் மிக அருமை!

    ReplyDelete
  4. ஜோக்ஸ்லாம் பழசா இருந்தாலும் படங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தன

    ReplyDelete
  5. அதெப்படி படிக்காத ஜோக்ஸா உங்களுக்கு கிடைக்குது!! [I disagree with Raji!!]

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!