26 December, 2013

இந்த குழந்தைகளுக்கு எதுவும் தெரியாதா...?



ங்கி வளர்ந்த
அழகிய சோலையை
அழித்து விட்டதாக கர்ஜித்தது
புயல்...!

விழுந்து விழுந்து
சிரித்துக் கொண்டிருக்கின்றன
மண்ணைத் தொட்ட
விதைகள்..!

************************************




ரெங்கும் உச்சத்தில் இருந்தது
சாதிக்கலவரம்...

வீதியெங்கும் ஓடித்தெளிகின்றன
ஆரறிவு மனிதனின் இரத்த ஆறுகள்...

எதையும் அறியாமல் விளையாடிக்கொண்டிருந்தன
இருசாதி குழந்தைகளும்..!

***********************************




நான் தடையேதும் சொல்லாமல்
ரசித்துக்கொண்டு இருந்தேன்...

ஒன்றும் அறியாத குழந்தை
என் கவிதை தாள்களை
கிழிக்கும் அழகை...!
************************************
என் முகநூலிலிருந்து...
வாசித்தமைக்கு மிக்க நன்றி..!!

4 comments:

  1. நானா இருந்தா இழுத்துப்போட்டு நாலு சாத்து சாத்தி இருப்பேன்.

    ReplyDelete
  2. மூன்றும் முத்தான கவிதைகள்.

    ReplyDelete
  3. முக நூலில் இருந்து வாசிக்க தந்தமைக்கு நன்றி !
    த ம 8

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!