09 December, 2013

இதுதான் வாழ்க்கையின் உண்மையான யதார்த்தம்




வாழ்க்கையில் செல்லும் வழியெங்கும்
விட்டுவிட்டுப் போகிறோம்
தவிர்க்கமுடியாத சில தடயங்களை....!


பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிப்போல்
பலஇடங்களில் பதிந்துவிடுகிறது
தடயங்களாய் நமது தவறுகள்...!


அதை ஏற்கவும் சரிசெய்துக்கொள்ளவும்
எப்போதும் இடம்கொடுப்பதில்லை
நம் தன்மானங்கள்...!


நாம்செய்த தவறுகளையே
சரியென்று நியாயப்படுத்திவிட்டு
தவறுகளோடே நகர்கிறது வாழ்க்கை...!


முதுகை திரும்பிப்பார்க்க முயலுவதில்லை யாரும்
முதுகு என்பதை நம் மறுப்பக்கம்

என்று கொள்ளாதவரை...! 


வாசித்தமைக்கு நன்றி...!

11 comments:

  1. உண்மை தான் சகோ இப்படியும் சிலர் இருக்கத் தான் செய்கின்றார்கள் .
    சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .முடிந்தால்
    இதையும் கொஞ்சம் பாருங்கள் .
    http://rupika-rupika.blogspot.com/2013/12/blog-post_8.html
    http://rupika-rupika.blogspot.com/2013/12/blog-post_4989.html

    ReplyDelete
  2. //நாம்செய்த தவறுகளையே
    சரியென்று நியாயப்படுத்திவிட்டு
    தவறுகளோடே நகர்கிறது வாழ்க்கை...!// உண்மைதான்...இதனால் மற்றவர் வாழ்க்கையையும் பாதிக்கின்றனர் சிலர்..என்ன செய்வது!!

    ReplyDelete
  3. அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - இயல்பான செயல் - நாம் எல்லோருமே இப்படித்தான் நடக்கிறோம் - மாற வேண்டும் - சிந்தனை நன்று -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிப்போல்
    பலஇடங்களில் பதிந்துவிடுகிறது
    தடயங்களாய் நமது தவறுகள்...!


    இது நூறு சதம் உண்மை சௌந்தர்! ஆனால் யாரும் எண்ணுவதில்லை! என்பதும் உண்மை!!

    ReplyDelete
  6. மாற்றம் நம்மில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே நாம் உணர வேண்டிய உண்மை !
    +1

    ReplyDelete
  7. வந்த வழி பார்க்காமல் போகும் வழி தெரிவதேது... முட்டிக் கொள்ளத்தான் வேண்டும் ம்ம்ம்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!