03 February, 2014

இதுவும் என் படுக்கையறை அனுபவமே



பகல் முழுக்க 
உன்னைவிட்டு பிரிந்தாலும்
இரவில் மட்டும் முடிவில்லை...
 

இரவெல்லாம் தொடர்ந்து
விடிந்தப்பிறகுதான் முடிகிறது
 உனக்கும் எனக்குமான தொடர்பு...
 

நான் விட்டாலும்
முழுதாய் உன்னை வெறுத்தாலும்
நீ விடுவதாயில்லை என்னை...


எப்படியாவது முயன்று 

நிறைவேற்றிக்கொள்கிறாய்
உன் விருப்பத்தை...


உன் உதடுகளால்
முத்தமிட்டு உதிரம் ருசிக்கையில்
துடித்துப்போகிறேன் நான்...


உன்னிடம் இருந்து தப்பிக்க
நான் எவ்வளவு முயன்றாலும்
தப்ப முடியவில்லை ஒருநாளும்...


உனக்கும் எனக்குமான விரோதங்கள்
எனக்கும் உனக்குமான அடிதடிகள்
கட்டிலில்தான் அதிகம் நடக்கிறது...


காதோரம் கிசுகிசுத்து விட்டு

மறைந்த உன்னை தேடி 
அலையும் என் கரங்கள்...

மனிதம் வீசிய வலையில்
விதியெனச் சிக்கிவிடுகிறது
உலகத்தில் எல்லாம்...


உன்னிடம் மட்டும்தான் 

விதிவிலக்காய் மனிதகுலமே 
வலைக்குள் ஒளிகிறது...


(ஒரு இரவில் கொசுக்கள் கொடுத்த இம்சையை
அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் கவிதையாய்...)


10 comments:

  1. கவிதை தந்த கொசுக்களுக்கு ..தப்பு தப்பு ..கவிதை வீதி சௌந்தருக்கு பாராட்டுக்கள் !
    த ம 2

    ReplyDelete
  2. ஹா... ஹா...

    எல்லோருக்கும் உண்டு இந்த இம்சை...!

    ReplyDelete
  3. இரவென்ன இங்கு பகலும் கடிக்கிறது!

    ReplyDelete
  4. உன் உதடுகளால்
    முத்தமிட்டு உதிரம் ருசிக்கையில்
    >>
    இந்த வரியிலேயே இந்த பாட்டுடை தலைவி யார்ன்னு தெரிஞ்சுடுச்சு!!!

    ReplyDelete
  5. ஆம் நம்மிடையே மிக நெருக்கமாய்
    உறவாடி உயிரெடுக்கும் இரண்டாவது
    உறவு அதுதானே
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அன்பின் சௌந்தர் - கவிதை நன்று - கொசுவினைப் பற்றிய கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. நல்ல கவிதை...முக்கியமாக..

    [[உன்னிடம் மட்டும்தான்
    விதிவிலக்காய் மனிதகுலமே
    வலைக்குள் ஒளிகிறது...]]

    great! பிரமாதம்!
    தமிழ்மணம் +1

    ReplyDelete
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  9. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
    அன்பு வாழ்த்துகள்.

    மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!