29 April, 2014

என் அவதாரங்கள்...



என் தலைமுடியை பிடித்து
உன் பச்சைநிற ரிப்பனில்
உச்சிக் குடுமி போட்டுப்பார்த்தாய்...

உன் நெற்றி பொட்டு எடுத்து
என்நெற்றியில் ஒட்டி அழகாகயிருக்கிறது
என்று குதுகலித்தாய்...

சுடிதார் போட்டால் எப்படியிருப்பீங்க...!
நீயே கற்பனை செய்துகொண்டு
விழுந்து விழுந்து சிரித்தாய்....
 

கொஞ்சுகையில் மீசை வேண்டாம் ‌‌என்று..கிறாய்
கெஞ்சுகையில் அதையே அழகு என்று..

என் மீசை எடுத்து உருமாற்றுகியாய்...

முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு...
தூக்கிவிட்டிருந்த காலரை மடித்துவிட்டு

நெடிக்குகொருமுறை எனை அலங்கரிக்கிறாய்..!

வீட்டில் இன்முகம்கூட காட்டாத நான்
ஒரு விகடகவியாகி
சிரிப்பால் உன்னை அழகுபடுத்துகிறேன்...!



இப்படியாய் உன்னை மகிழ்விக்க 
இன்னும் எத்தனை அவதாரங்கள் எடுக்கவும் 
நான் தயார்தான்...!

(உண்மையில் இப்படி ஒரு வாழ்க்கை வாய்க்கவில்லை)

11 comments:

  1. கற்பனையாயினும் அற்புதமே
    கவிதையை மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எங்குமே பெண்மை அழகு தான். கவிதையிலும். படித்ததும் என்னை ம்றந்து ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  3. அப்பப்போ மகிழ்விக்க பதிவு செய்க...

    ReplyDelete
  4. நிஜத்தை விட கற்பனை எப்போதும் அழகுதான்! கலக்குங்க!

    ReplyDelete
  5. பாவம்! ஏக்கத்தின் எதிரொலியோ!!? கவிதை!

    ReplyDelete
  6. ரசிக்க வைத்த கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .

    ReplyDelete
  7. அருமை
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  8. அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - கற்பனையில் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமெனக் கூறுவது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!