01 February, 2016

கடவுள் கிட்ட உங்க வேலையை காட்டினா இப்படித்தான்...!


ஆசையை
ஒழிக்க எண்ணி
புத்தரைப் படித்தேன்..

அன்றைய இரவில்
வகைவகையாய் வந்து
வரிசைக்கட்டின
கனவுகள்...


***********************************


அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.

தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்’ சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடு நாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.

குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.’நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு’மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.
குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது. அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.

நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராமவாசி ‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.

மேலும் ’நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண, அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்’ என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார்.

***************************************



ஒரு சமயம் , கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன். கேட்டான்

" சாமி , ஒரு கோடி வருஷமங்க்குகறது உங்களுக்கு எவ்வளவு நேரம் ? "

இறைவனும் சிரித்துக் கொண்டே " ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் " என்றார்.

அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் "அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி ? "

அவரும், " ஒரு ரூபாய் போல " என்றார்.

உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், "அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் " என்றான் மிகவும் அடக்கமாய் ...

இறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே" நீ ஒரு நிமிஷம் பொறு "..என்றாராம் ...

அதனால் தான்...அவர்..இறைவன்

******************************

டாக்டர் கண்ணாடியைக் கழற்றி துடைத்தபடி,

“எதுவுமே 24 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்” என்றார்.

பேஷண்ட்டின் உறவினர் கால்குலேட்டரை எடுத்துக் கொண்டு,

“சொல்லுங்க, எவ்வளவுலேர்ந்து 24 மணி நேரத்தை கழிக்கணும்?” என்றார்.
******************************
பார்த்ததில் ரசித்தது...
----------------------------------------------------------
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

2 comments:

  1. இலஞ்சம் வாங்குவதை விட பிச்சை எடுப்பதே மேல்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!