25 February, 2016

காட்சி ஒன்று...! பார்வை பல...!



எல்லா மழைக் காலத்திலும்
குடை பிடித்தே வருகிறாய்...

தழுவ முடியாமல்
மண்ணில் வீழ்ந்து மடிகிறது
மழைத்துளிகள்...!

கார் மேகம்
வாழ்த்தைகளை பொழிகிறது...

அதை 
குடைக்கம்பிகள் வழியே
வரிகளாக்கி வாசிக்கிறாய்...

மின்னலாய்
கண் சிமிட்டி ரசிக்கிறது
காலம்...!

நீ  குடையோடு 
வருவதால் என்னவோ
சில பருவங்களில் 
தள்ளிப்போகிறது 
மழைக்காலம்..!

மழையை 
விரும்புபவள் தானே நீ
பிறகு ஏன்
கருப்பு குடைப்பிடித்து
எதிர்ப்பை காட்டுகிறாய்...

இப்போது பார்...
உன்னோடு இணைந்து
போராட்டத்தில் குதித்து விட்டன
பூக்கள்...!

மழை நின்று விட்டதா என்று
குடை தாழ்த்தி ஆகாயம் பார்க்கிறாய்...

உற்சாகத்தோடு புறப்பட்டன
அதுவரை அமைதிகாத்த 
மழையின் விழுதுகள்

அவசரஅவசரமாய் 
குடைபிடித்துக்கொள்கிறாய்...
இப்படியாய் 
வஞ்சித்ததை எண்ணி 
வீதியில் வீழ்ந்து
அழுது புலம்புகின்றன 
விண்ணீர்கள்...!

உன்னை கட்டியணைத்து
தழுவ வந்த என்னை
வேகமாய் தள்ளிவிட்டு 
தலைக்குணிந்தாய்...!

சுடேற்றுகிறது என்று 
மழையை தவிர்த்துவிடுகிறாய்
என்னையுமா...?
வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

4 comments:

  1. அருமைக்கவி மீண்டும் வலையில் காண்பது மகிழ்ச்சி சகோ!

    ReplyDelete
  2. வணக்கம்
    அருமை இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!