06 April, 2018

கால்பந்தை வச்சி காமெடியா....?


யானைகளுக்கும், பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன.

இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான் (நூறு கால் பூச்சி) இறங்கியது. உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது. பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது. 

ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது. விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது, யானைக் குழுவின் தலைவன்... 

பூச்சிக் குழுவின் தலைவனிடம், ”உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?

”பூச்சித்தலைவன் சொன்னது,” அதுவா, பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.”


1 comment:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!