03 May, 2018

இரவுக்குள் தான் இப்படி நடக்கிறது...


ஒவ்வொறு இரவும்
கனவுகளாலே நிறைகிறது...

அழகிய
சோலையாக இருக்கும்
ஆபத்தான
சாலையாக இருக்கும்...

சிலசமயம்
சோகமானதாக இருக்கும்
சொர்கமாகவும் இருக்கும்...

வானத்தில் பறப்பது
ஆகாயத்தில் குதிப்பது
இப்படியாய் ஒவ்வொறு கனவும்...

அழகிய வேடங்களை 
தரித்து வருகிறது
தினம்... தினம்...

விடிந்தவுடன் 
முடிந்துவிடுகிறது
இரவில் வரும் கனவுகள்...

கற்பனைக்கு 
எட்டாத காட்சிகள்...
திகைப்பூட்டும் 
சம்பவங்கள்...

காதல் பரவசங்கள்...
காம களியாட்டங்கள்...

ஆனால்
இறுதியில் ஏதும்
நினைவில் நிற்பதில்லை
விடிந்தவுடன்...!

இதில் ஒன்று மட்டுமே உண்மை
எல்லா கனவுகளிலும்
பிரிதிபலிப்பது

நம்மால் வாழ முடியாத
வாழ்க்கையையும்...!

நாம் வேண்டாம் என்கிற
வாழ்க்கையையுமே...!

இரவுக்கே தெரியாமல்
விழிகளுக்குள்
விடிந்து மறையும்
இந்த கனவுகள்...

கனவுகளாகவே
இருந்துவிட்டுப்
போகட்டும்...!


3 comments:

  1. சொல்ல முடியாததை
    சொன்னவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  2. நனவாகும் கனவுகள்......!கனவாகா நனவுகள் இரண்டும் கலந்து பிசையப்படடதுதானே கனவுலகம்...!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!