14 May, 2018

தங்கச்சியும்... தமிழ் சினிமாவும்... மறக்க முடியாத சில தருணங்கள்..


தமிழ் சினிமா மறக்கமுடியாத காட்சிகள் - பகுதி - 2

தமிழ்சினிமா எவ்வளவு புதுமைக்குள் வந்தாலும் எப்போதும் சில காட்சிகள் தமிழ்சினிமாவை விட்டு விலகாமல் எல்லாப்படத்திலும் ஒட்டுக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு காட்சியை பற்றி பதிவு ஒன்றில் எழுதினேன்... அடுத்த காட்சிகளாக தமிழ் சினிமாவில் தங்கச்சியை பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்...

ஒரு திரைப்படம் பார்க்கும் போது அதில் வரும் காட்சிகள் வித்தியாசமாகவும், புதுமையாகவும் காட்ட மிகவும மெனக்கிடுகிறார்கள்... ஆனால் படம் பார்க்கும் நம்ம குப்பனோ... சுப்பனோ சொல்லிவிடுகிறான்... இது அந்த படம் மாதிரி இருக்கு... இந்தப்படம் மாதிரி இருக்கு அப்படின்னு...


இன்னும் சினிமா விமர்சகர்களும்... முகநூல் ஞானிகளும் ஒவ்வொறு காட்சியும் எந்தப்படத்தில் இருந்து எந்த காட்சியில் காப்பி இது என்பதை தெளிவாக எழுதி கிழித்து தொங்க விட்டுவிடுவார்கள்... அப்படி இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இயக்குனர்கள் தங்கள் பணியை செம்யைமாகவே செய்துக்கொண்டிருக்கிறார்கள்.


தமிழ் சினிமாவில் 70 முதல் 2000 வரை வந்த பெரும்பாலான படங்களில் ஒரு  கேரட்டர் இருக்கும் அது தங்கச்சி கேரட்டர்... தங்கச்சி கேரட்டர் இருந்தா கொஞ்சம் செண்டிமென்ட் மசாலாவை தூக்கலாகவே தூவலாம் என்பது ஒவ்வொறு இயக்குனர்களின் நினைப்பு அதனாலதான் மசாலா படமாக இருந்தால் கூட அதில் சிறிதளவு தங்கச்சி கதாபாத்திரத்தை புகுத்தி கொஞ்சநேரம் ரசிகர்களை தன்வசம் இழுக்க முயற்சிப்பார்கள்...


பொதுவாக கதைப்படி வில்லனுக்கு தங்கச்சியாக இருந்தால் பிரச்சனையில்லை.. ஏனென்றால் பெரும்பாலான படங்களில் வில்லனுடைய தங்கச்சிதான் ஹீரோயினாக இருப்பார்கள்.. அதனால் அவர்களுடைய கதாப்பாத்திரம் வலுவானதாக இருக்கும்...



ஆனால் அதேசமயம் மிகவும்  ஹீரோவுடைய தங்கச்சிதாங்க ரொம்ப பாவம்... ஹீரோக்கு தங்கச்சியா இருந்தா கண்டிப்பாக வில்லன்களால் கற்பழிக்கபடுவார்... மேலும் அடிக்கடி வில்லன்களால் விரட்டுவது.... துரத்துவது... அடிவாங்குவது... கடத்துவது என அத்தனை சீன்களிலும் தங்கச்சிதான் மாட்டிக்கொண்டு விழிப்பார்.

அதனாலே 70 வது 80 பதுகளில் தங்கச்சி கதாபாத்திரத்திற்கு சில நடிகைகள் நடிக்கவே தயங்கினார்கள் என்று பல்வேறு கட்டுரைகளில் படித்திருக்கிறேன்... மேலும் ஒருமுறை தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால் மீண்டும் அந்த ஹீரோவுடன் ஜோடிபோட்டு நடிக்கமுடியாது அதுமட்டுமில்லாமல் தங்கச்சி கதாபாத்திரத்திற்கு மட்டுமே அழைப்பார்கள் ஆகையால் பல பேருக்கு இந்த தங்கச்சி கதாபார்த்திரத்தில் நடிக்க மிகவும் தயங்கினார்கள்.


சமீபத்தில் கூட கில்லி படத்தில் நடித்த விஜய் தங்கச்சி நடிகை நான் குமரியாகிவிட்டப்பிறகு கூட என்னை விஜய்யின் தங்கையாகவே பார்க்கிறார்கள் என்று கலங்கியிருந்தார்.



தங்கையை மையமாக வைத்து ஓடிய படங்களும் இங்கு ஏகப்பட்டது இருக்கு அதில் முக்கிய படங்களான பாசமலர், பச்சை விளக்கு, என் தங்கை கல்யாணி, தங்கைக்கோர் கீதம், நான் சிகப்பு மனிதன், தாவணி கனவுகள், கீழக்குச்சீமையிலே, போன்ற காலத்தால் அழியாத படங்களும்... 

சமீபத்தின் விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி, வேலாயுதம் போன்ற படங்களில் தங்கை கதாபாத்திரம் மிகவும் வலுவானதாகவும் என்றும் பேசும்படியான கதாப்பாத்திரங்களாக அமைந்திருந்தன அதனால்தான் இன்றளவும் அந்தப்படங்களும் அந்த கதாபாத்திரங்களும் போற்றப்படுகிறது....

தங்கச்சி சென்டிமெண்டை சரியாக பயன்படுத்திகொண்ட முதல் நடிகர் எம்.ஜி.ஆர். தான்... தங்கை பாசத்தை வைத்து  அதிக ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான்.. சிவாஜி, ரஜினி, கமல் என அத்தனை நடிகர்களும் தங்கச்சி சென்டிமெண்ட் படங்கள் நிறையவே இருக்கு...

இன்னும் குறிப்பாக டி.ஆர். மற்றும் பாக்கியராஜ் அவர்கள் தன் படங்களில் தங்கச்சி கதாபாத்திரத்தை உருகி உருகி உறுவாக்கியிருப்பார்... இப்படி என அத்தனை நடிகர்களும் சென்டிமெண்ட் விஷயத்தில் தங்கச்சியை பயன்படுத்திய விதம் மிக அருமை

இயக்குனர் வரிசையை எடுத்துக்கொண்டால் எனக்கு தெரிந்து தான் எடுத்த அனைத்துபடங்களிலும் தங்கச்சி சென்டிமெண்ட் மையமாக வைத்தவர் இயக்குனர் பேரரசு தான்...  திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, திருத்தணி இப்படி எல்லாபடங்களிலும் தங்கச்சி சென்டிமெண்டுதான்...



தனித்து நிற்கும் தங்கச்சி படங்கள்...

பாசமலர்... ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அண்ணன்-தங்கைபாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இன்றளவிலும் இவ்வுறவிற்கு ஒரு மேற்கோளாகப் பொதுவழக்கில் பயன்படுகிறது.


என் தங்கை.... சி. எச். நாராயணமூர்த்தி, எம். கே. ஆர். நம்பியார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் அவருக்கு விழியிழந்த தங்கையாக ஈ. வி. சரோஜா நடித்தார்.


திருப்பாச்சி.... பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதில் தங்கையாக நடித்திருந்த கற்பகத்தின் (மல்லிகா) மீது பெரிதும் பாசம் காட்டும் அண்ணனாக விஜய் அசத்தியிருப்பார்....


கிழக்கு சீமையிலே... படத்தில் வரும் விஜயகுமார்..நெப்போலியன்.. ராதிகா என தங்கச்சி கதாப்பாத்திரம் மிகவும் பேசப்பட்டது...

பாசத்துடன்...
கவிதைவீதி சௌந்தர்
14-05-2018

4 comments:

  1. முன்னலாம் எந்த கதைக்களமா இருந்தாலும் உயிர் தியாகம் செய்ய ஒரு தங்கச்சி கேரக்டர் படத்துல இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அதைதான் இந்த பதிவுல சொல்ல வற்றேன்

      Delete
  2. பாசமான தொகுப்பு...

    பாசம் இனி படத்தில் தான் பார்க்க முடியுமோ...?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!