வெளியே போய்விட்டு இரவு வீடு திரும்பினர்...
கணவனும் மனைவியும்..
கதவில் போட்டிருந்த பூட்டு மக்கர் செய்தது....
"இந்தாங்க, நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்"னுட்டு மனைவி ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிப்படைஞ்சு போய்" நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா.
அதன்பிறகு அந்தக்கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது.
அதப்பார்த்துட்டு அந்த மனைவி கணவனைப் பார்த்து கோபமாகச் சொன்னா "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு. !
#இப்படியெல்லாம் யோசிச்சி... ரசிச்சி கணவரை திட்டிதீர்க்க இவர்களால் மட்டும்தான் முடியும்... நாம எது செய்தாலும் குறையாகத்தான் பார்க்குறாங்க.... இப்படித்தான் போயிகிட்டு இருக்கும் இங்குட்டும்...
**********************
அவரு யாரு?
அவரா... கூடவே இருந்து குழி பறிப்பவர்..!
#செமையான சிந்தனை... அழகிய ரசிக்கும்படியான நகைச்சுவையும் கூட... இப்பெல்லாம் தலைவர்கூட மட்டுமல்ல எல்லார்கூடையும்....
#செமையான சிந்தனை... அழகிய ரசிக்கும்படியான நகைச்சுவையும் கூட... இப்பெல்லாம் தலைவர்கூட மட்டுமல்ல எல்லார்கூடையும்....
**********************
நீங்க ஒண்டியா எல்லா வேலையும் பாக்குறீங்களே...
ஒரு நர்ஸ் வச்சுக்கிட்டா என்ன டாக்டர்?"
"அதுக்கு என் மனைவி ஒத்துக்கமாட்டாங்க."
"ஏன் டாக்டர்?"
"ஏற்கெனவே இங்கே நர்ஸா இருந்தவங்கதான் அவுங்க!"
#அடேய் இப்படித்தான் வலைச்சிபோட்டயா.... அப்ப எப்படி ஒத்துப்பாங்க...
#அடேய் இப்படித்தான் வலைச்சிபோட்டயா.... அப்ப எப்படி ஒத்துப்பாங்க...
நகர சாலை ஒன்றில் விபத்து ஒன்று ஏற்பட்டுவிட்டது....
அதில் பலியானவரை சுற்றி ஒரு பெருங்கூட்டம்
கூடி இருந்தது....
அப்போது அங்கு வந்த ஒரு பத்திரிகை நிருபர்...
அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்....
அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது....
இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான் என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
நான் அருகில் செல்ல வேண்டும், தயவு செய்து வழிவிடுங்கள் என்று கதறும் தோனியில் நடித்தார்....
உடனே, அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று, அவருக்காக வழி விட்டனர்....
நிருபர் அருகில் சென்றவுடன், விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்....
அது ஒரு கழுதை...!
#இப்படிதான் பலபேர் அவசரப்பட்டு முட்டாள்தனமா யோசிச்சி அவமானம்படுறோம்....
#இப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....
******************************
ரசித்தமைக்கு மிக்க நன்றி...!
இவைகள் சும்மா ஒரு ரீ-எண்ட்ரிக்காகத் தான்....!
மீண்டும் தொடர்வோம்...
கவிதைகளுடன்...
மனுஷன் லைட் புடிக்க தெரியாமலா இவ்வளவு நாளா காலத்த ஓட்டுனாரு ... https://www.scientificjudgment.com/
ReplyDelete