10 December, 2010

காலம்...

 

வாழ்க்கையை நிலைநிறுத்தும்...
வாழ்க்கையை திசை திருப்பும்...
இதயத்தை தூண்டி விடும்...
மனதை மாற்றி விடும்...


நேர்மைக்கு இது ஒரு இலக்கணம்...
தீமைக்கு இது ஒரு துணையிருப்பு...


பாலைகளும் ஆறுகளாகும்...
கடல் கூட காய்ந்து விடும்...
உரிமையை உரம் போட்டு வளர்க்கும்...
லஞ்சத்தில் வஞ்சகமாக பிழைக்கும்...


நிலவும் உலகை சுட்டெரிக்கும்...
நினைவையும் மறக்க வைக்கும்...


கீழ்வானம் தொடுகிற தொலைவில் வரும்...
மேற்கில் நாளை
சூரிய உதயம் எட்டிப்பார்க்கும்...


மேகங்கள் மனிதனின் வாகனம்...
பனித்துளி உயிரை குடிக்கும் விஷம்...


இன்பங்கள் இல்லா நிலை வரும்...
சோகங்களை தள்ளி வைக்கும் நாள் வரும்...


கண்களால் கேட்கலாம்...
காதுகளால் பேசலாம்...


இவைகலெல்லாம் எப்போது...
 

காலம்...!
எதையும் செய்யும்..


காலம் மாறக்கூடியது...
காலம் மாற்றக்கூடியது...

 

1 comment:

  1. "பாலைகளும் ஆறுகளாக மாறும்
    காலம்...!" கிட்டட்டும்.

    வளமும் நலமும்
    நிதமும் நிறையும்
    புத்தாண்டாக 2011
    அமைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!