கவிதை வீதியில் ஒரு புதிய தொடர்
அன்பார்ந்த வாசக பெருமக்களே... இந்த கட்டுரை என்மனதில் மட்டுமல்ல உலகில் பரந்து கிடக்கும் எல்லா மானிட நெஞ்சங்களிலும் புழுங்கிக்கிடப்பது...
அன்பார்ந்த வாசக பெருமக்களே... இந்த கட்டுரை என்மனதில் மட்டுமல்ல உலகில் பரந்து கிடக்கும் எல்லா மானிட நெஞ்சங்களிலும் புழுங்கிக்கிடப்பது...
உலகில் உள்ள எல்லா இடங்களிலும் வாழும் மனித மனங்களில் அநியாயத்துக்கு எதிராக ஒரு அக்னி எரிந்துக்கொண்டிருக்கிறது...
தீவிரவாதம் மட்டுமல்ல யாரெல்லாம் தன்னுடைய கடமையிலிருந்து விலகி நிற்கிறாரோ அவரும் தண்டனைக்குரியவரே....
இந்த சமூகம் நான் என்பதோடு முடிந்து விடுவதில்லை நாம் என்பதில் தான் அடங்கிக்கிடக்கிறது... அந்த நாம்-க்குள்ளேதான் நான் என்ற ஒரு தனிமனிதனும் அடங்கியிருக்கிறான்...
தீவிரவாதம் மட்டுமல்ல யாரெல்லாம் தன்னுடைய கடமையிலிருந்து விலகி நிற்கிறாரோ அவரும் தண்டனைக்குரியவரே....
இந்த சமூகம் நான் என்பதோடு முடிந்து விடுவதில்லை நாம் என்பதில் தான் அடங்கிக்கிடக்கிறது... அந்த நாம்-க்குள்ளேதான் நான் என்ற ஒரு தனிமனிதனும் அடங்கியிருக்கிறான்...
ஒரு நிமிடம் யோசியுங்கள் யாரோ ஒருவர், தவறு செய்யும் போது நாம் கொதித்து போகிறோம்... அந்த தவறை தட்டி கேட்காவிடினும் குறைந்த பட்சம் இப்படி நடக்கிறதே எனறு புலம்பிக்கொண்டு போகிறோம். அது நமக்கு தவறென்று புரிகிறது.. ஆனால் அதே தவறை நாம் செய்யும் போது?
கொஞ்சம் யோசித்து பாருங்கள் மற்றொருவர் செய்யும் போது தவறானதாகதெரியும் ஒரு விஷயம் நாம் செய்யும் போது எப்படி சரியானதாக மாறிவிடுகிறது...
யோசித்து பாருங்கள்.. சாலை விதிகளை மதிக்காதவர் மீது நாம் கோவப்படுவோம்..
- வேகமாக செல்லும் போது...
- தேவையில்லாத இடத்தில் வானங்களை நிறுத்தும் போது..
- அதிகமான ஆட்களை ஏற்றும் போது..
- சாலை விதிகளை மதிக்காத போது...
ஓ... உலகத்தீரே நாம், என்றும் சமுதாய அக்கரையோடு வாழ்ந்தாக வேண்டும். உலகம் சுருங்கிக்கொண்டு போகும் இன்றைய சூழலில் வாழ்க்கையும் சுருங்கிக்கொண்டே போகிறது.. 100 ஆண்டுகள் சராசரி வாழ்நாள் என்பது மலையேறி விட்டது . 80, 60, தற்போது இந்தியரின் சராசரி வாழ்நாள் 48 ஆண்டுகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இயற்கையான மரணத்தை துறந்து அதை நாம் தேடி செல்கிறாம்.
என் தரப்பு நியாயம் :
சாலையில் செல்லும் போது முறையான வேகத்தை கடைபிடிப்போம்.
சாலை விதிகளை குறைந்த பட்சமாவது கடைபிடிப்போம்.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்ப்போம்.
பிறது உணர்வுகளை மதிப்போம்.
பிறருக்கு தவறுகளை சுட்டிகாட்டுவதை விட அந்த தவறை நாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
அதிகமான விபத்துகள் குடி போதையில் தான் நடக்கிறது.. குறிப்பாக மேலை நாடுகளில் அதிகமான விபத்துகள் குடிபோதையில் தான் நடக்கிறது என்கிறது ஒரு ஆய்வு..
அதை பார்த்து அதே தவறை நாம் செய்கிறோம். பிறருக்கு அறிவுரை சொல்லும் போது அந்த அறிவுரைக்கான தகுதியை தாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் வருடத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது (1-1-2011 முதல் 7-1-2001 வரை) அதை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவோம்..
நான் சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறேன். என்று நமக்குள்ளே
உத்திரவாதம் கொடுத்துக்கொள்வோம் பிறகு பிறர்க்கு உபதேசிப்போம்..
நம் உயிரும்.. நம் உறுப்புகளும்... விலைமதிக்க முடியாதவை.. நம்மை நம்பியே நாமும், நமது குடும்பமும், நமது சமுதாயமும் உள்ளது என்று உணர்வோம்...
அன்பான வாசக பெருமக்களே சினிமா சார்ந்த பதிவுக்கு மட்டுமல்லாமல் இதுபோன்ற சமூக அக்கரையுடைய பதிவுகளுக்கும் ஆதரவு தாருங்கள்... இது அனைவரையும் சென்றடைய இதை பிரபலபடுத்துங்கள்.. நன்றி...
No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!