03 January, 2011

பத்து வயதில் பட்டம்


      உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், 10 வயது மாணவி ஒருவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் தேஜ் பகதூர்-சாயாதேவியின் மகள் சுஷ்மா. தற்போது 10 வயதாகும் இந்த மாணவிக்கு அபூர்வமான கல்வித் திறமை இருப்பது கண்டு, அப்பெண்ணின் பெற்றோர் வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். 

இதனால், தனது ஏழாவது வயதில் 10ம் வகுப்பு தேர்வையும், இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வையும் எழுதி பாஸ் செய்துவிட்டார். இதையடுத்து, சுஷ்மா லக்னோ பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்க அனுமதி கேட்டு, லக்னோ பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக் கழகம், சுஷ்மாவுக்கு தற்காலிக அடிப்படையில், அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, உ.பி.,யில் உள்ள கல்லூரி ஒன்றில், பி.எஸ்சி., அறிவியல் பாடத்தில் சுஷ்மா சேர்ந்துள்ளார். சுஷ்மாவின் சகோதரன் சைலேந்திரா கடந்த 2007ம் ஆண்டில், தனது 14ம் வயதில் கம்ப்யூட்டர் சயின்சில் பட்டப்படிப்பை முடித்து சாதனை செய்துள்ளான். சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் தினக்கூலி. தாயார் சாயாதேவி படிக்காதவர். எனினும், தங்களது பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, 

சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் கூறியதாவது: எனது மகளின் திறமையைக் கண்டு, அவளை பட்டப்படிப்பிற்கு அனுமதி அளித்த லக்னோ பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுஷ்மா, கடுமையான உழைப்பாளி. நிச்சயம் அவள், இந்த பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்வாள் என்று நம்புகிறேன். சுஷ்மா போன்ற அபூர்வ திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்காகவே, அவளுக்கு பட்டப்படிப்பு படிக்க அனுமதி அளித்ததாக, பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது நம்பிக்கையை சுஷ்மா நிச்சயம் காப்பாற்றுவாள். இவ்வாறு தேஜ் பகதூர் கூறினார்.

5 comments:

  1. சிறுமிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அறிவு மிகுந்தவர்கள் எப்போதும் உச்சத்திலே இருப்பார்கள்.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. /i wish her all the best /
    வாழ்த்துக்கு நன்றி நன்பரே

    ReplyDelete
  4. /சிறுமிக்கு வாழ்த்துக்கள் /
    நன்றி /மகாதேவன்-V.K/

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!