12 January, 2011

முடிவுரைதான் எப்போது...

து கற்பனைகள் ஓடும் நதிக்கரை
சோகங்கள் வாழும் துறைமுகம்
இதில் கரையேறிச் செல்லும் மேகங்களே
உங்கள் முகவரிகள் என்ன..?

மேகத்தின் கண்ணீர் அனைத்தும் தீர்ந்தப்பின்னும்
நிற்காமல் ஏன் அழுகிறது
எங்கள் கூரைகள்...

யற்காட்டு மரக்கிளையில்
பாடிவரும் குயிலினமே
மரம்கொத்தி தாளம் தட்ட
மலை அருவி வீணை இசைக்க
மாலையில் கடந்து வரும்
உன் மனச்சோகம்தான் என்ன..?
 
ழகிற்கிடையே ஒளிர்கின்ற முத்தே
உன்னை சுமந்தவளின் மரணத்தில்தான்
நீ மகத்துவம் பெருகிறாய்...
 
தயத்தை இதமாக்கும் முள்செடியே
இன்றைய கொள்முதல்
இந்த ஒற்றை ரோஜா தானா?

ரவினில் தலைச்சாயும்
மூங்கில் கிளையே நீயாவது
ராகம் இசை
இவைகளும் இல்லையேல்
என் இதய சோகங்களுக்கு
முடியுரைதான் எப்போது..
 
ஓ... பனித்துளியே நீயாவது
என் கவலைகளை நனைத்துவிட்டுப் போ
அவைகள் நாளை வரும் விடியலிலாவது
உலர்ந்துப் போகட்டும்...

2 comments:

  1. வழக்கம் போல கவிதை அருமை

    ReplyDelete
  2. பதிவுலக நண்பர்களே..
    ஒரு படைப்பாளியின் உண்மையான படைப்புகளுக்கு ஆதரவு தருவோம்.
    நாம் இவருக்கு ஆதரவு அளித்தால் பல கவிதைகளை வழங்குவார்.இவரின் கவிதை தொகுப்பு இரண்டு புத்தகங்களாக வெளிவந்து பலரின் ஆதரவை பெற்றுள்ளது.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!