அன்பார்ந்த வலைபதிவர் அன்பர்களுக்கு...
பதிவர்களின் மேலான நலன் கருதி, தங்கள் படைப்புகளுக்கு ஒரு பாதுகாப்பு தரும் நோக்கில் உங்களுக்காக :“அனைத்துலக பதிவர்கள் சங்கம்” ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சங்கத்தை துவங்குவதற்கான கூடட்டமும், மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காள கூட்டமும் கடந்த ஒரு வாரமாக இரண்டு இடங்களில் நடைப்பெற்றது.
கூட்டங்கள் நடைப்பெற்ற இடங்கள் :
2. திருவள்ளுர் நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா திரையங்க உள்வளாகம் (சீட் எண் 23,24)
இதில் கலந்துக் கொண்டவர்கள் :
இந்த சங்கம் மிக அவசரமாக ஆரம்பிக்கவேண்டும் என்று கருதியதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை
ஆகையால்
1.http://kavithaiveedhi.blogspot.com கவிதை வீதி சார்பாக நானும்.
2. http://sakthistudycentre.blogspot.com வேடந்தாங்கள் சார்பாக திரு.கருண்குமார்
ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
(குறிப்பு : இந்திய கூட்டாண்மை சட்டம் 1932-ன் படி கூட்டத்தை செல்லதக்கதாக ஆக்க 2 பேர் கலந்துக் கொண்டால் போதும் என்கிறது)
சங்கத்தின் நிர்வாகிகள் :
சங்கத்தின் நலன் கருதியும், பதிவர்களின் மேலான வேண்டுகோளுக்கு ஏற்ப சுயநலம் இல்லாமல் இந்த சங்கத்தின் நிரந்தர தலைவராக
அன்பும், பண்பும், நிறைந்த தன்மானச்சிங்கம், விடிவெள்ளி, போர்வாள், இலக்கியத் தென்றல், சமூக ஆர்வளர் (வேறு ஏதாவது பட்டம் தரவேண்டும் என்றால் தாங்கள் சூட்டலாம்) அஞ்சா நெஞ்சன்
உங்கள் மு. சௌந்தரபாண்டியன் ஆகிய நான்
இச்சங்கத்தின் தலைவராகவும்,
எனது நண்பர் பட்டங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ளதாத
திரு. கருண்குமார்
அவர்கள் செயலாளராகவும் பெறுப்பேற்றுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
(சங்கத்திற்கான சின்னம் கொடி பஞ்ச் டயலாக் விரைவில்)சங்கத்தின் தீர்மானங்கள் :
- ஒவ்வோறு பதிவரும் தலைவரை பின்தொடர்பவராக ஆகவேண்டும்.
- பின்னுட்டங்கள் இடவேண்டும் (அப்படி பின்னுட்டம் இட்டால் தங்களை சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படும்)
- பதிவர்கள் (நான் உள்பட) எப்பவாவது காப்பி அடித்தால் அதை கண்டுக்கொள்ள கூடாது
- கஷ்டப்படடு பதிவு தரும்போது பின்னுட்டம் இடாமல் காப்பி அடித்து போடும்போது மட்டும் பின்னுட்டம் அனுப்பினால் அதற்கு சங்கம் மிகுந்த கண்டனத்தை வெளிப்படுத்தும்.
இன்னும் நிறைய தீர்மானங்கள் உள்ளன அவைகளை பின்னர் அறிவிக்கப்படும்
எனக்கு கூட சொல்லலையேப்பா...
ReplyDeleteஒரமா உட்காந்தா, இல்ல இதுக்கினு ரூம் போடுவீங்களா...
ReplyDeletevery very super “அனைத்துலக பதிவர்கள் சங்கம்”
ReplyDeleteசூப்பர் ஐடியா ..நானும் ஏதோ எண்டு பயந்துட்டன் ....தொடருங்கள் புதிய பணியை
ReplyDeleteஆமா இந்த கடைசியில ஒருத்தர் கொலைவெறியில அடித்துகொண்டு இருக்கிறாரே அதுபோலத்தான் வந்து விழும் உங்களுக்கும் பார்த்து . தக்காளி பதிவு போடுனா கட்சியா தொடங்குற !???????????????????
ReplyDeleteஉங்க சங்கத்துக்கு வோட்டு போட்டுட்டேன்.....
ReplyDeleteவோட்டு போட்டா என்ன தருவிங்க?????
அட...இது பற்றி சண் டி.வி- செய்தியில சொன்னாங்களே...நானும் பார்த்தேனே....
ReplyDeleteவேற போஸ்ட் ஏதாச்சும் காலியா இருக்கா பாஸ்?
ReplyDeletevilankidum.....
ReplyDeleteசர்வதேச அளவில் தொடருங்கள் சூப்பர் ஐடியா
ReplyDelete