10 January, 2011

அதிமுக பக்கம் சீமான்

 2010 சீமானை புரட்சிவாதியாக்கு இணையாக மாற்றிவிட்டது.. அவரது ‌பேச்சுகள்... நாம் தமிழர் என்ற ஒரு புரட்சிகரமான இயக்கத்தை தோற்றுவித்து இலங்கை தமிழர்களுக்கு மிகவும் ஆக்ரோஷமாக குரல் கொடுத்தவர், சீமான்.
 
தமிழகத்தில்,  இலங்கைத்மிழர்களுக்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக பல மாதங்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையில் இருந்திருக்கிறார். வெயியில் வந்து கூட தன்னுடைய நிலையில் இருந்து இவர் மாறாமல் இருந்து வருகிறார். ஒரு பேட்டியின்போது... உங்கள் பேச்சில் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு..“இ‌லங்கைத் தமிழனை கொன்று குவிக்கும் போது.. ஒரு உண்மையான தமிழனால் உணர்ச்சிவசப் படாமல் எப்படிஇருக்கமுடியும்” என்று உணர்ச்சிபட கூறினார்..

இந்நிலையில்  சீமான் தேர்தல் பிரசாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னையில் இன்று சந்தித்து ‌பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : வருகின்றன சட்டமன்ற தேர்தலில் அதிமுக.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்; ஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதால் காங்கிரசை தோற்கடிப்பதே எனது லட்சியம்; சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வை போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. appadi seythi onrayum kaanome ? appadi ethuvum seemaan sonnathaakath theriyavillaye ?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!