09 January, 2011

அம்மா...!


ம்மா
உயிரும் மெய்யும் கலந்
உயிர் மெய்...

நானே விளக்குகிறேன்...
அ - உயிர் எழுத்து
ம் - மெய் எழுத்து
மா - உயிர் ‌மெய்

ஆம்
அம்மா...
உயிரும் மெய்யும் கலந்த உயிர்மெய்..

நாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...

விண்ணிலிருந்து
வீடுகளில் சிதறிவிழுந்த
‌தேவதைகளின் சிதறல்கள்...

த்தத்திலிருந்து
பாலைப்பிரிக்கும்
உயிர்கோளத்தின் அதிசய அன்னப்பறவை...

திட்டித்தீர்க்கும்
கரங்களுக்கு மத்தியில்
தட்டிக் கொடுக்கும் வளையல் கரம்...

னைந்தபடி வீடு நுழைந்தேன் ..
“அறிவிருக்கா ஏன் இப்படி நனையிற”
அண்ணன்...

“குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியது தானே..”
அக்கா...

“காய்ச்சல் வந்தா என் பணம் தான் வீண்”
அப்பா..

தலை துவட்ட துண்டுடன்
அம்மா...

ள்ளி அள்ளி குடித்தாலும் குறையாத
ஆனந்த அன்புக்கடல்...
இவள் திட்டினாள் சீர்படுவோம்
இவள் குட்டினாள் சிற்பமாவோம்...

அம்மா
குடும்பம் தலைக்க
தாங்கி நிற்கும் மனித ஆலமரம்...

 *****************************************************************************
இதையும் கேளுங்கள்...

 *****************************************************************************
இதையும் கேளுங்கள்...

7 comments:

  1. அம்மா ஆனவுடன் நம் அம்மாவின் மதிப்பு இன்னுமே தெரியும்..
    கவிதை அருமை

    ReplyDelete
  2. ஓர் நல்ல படம் பார்க்கும் போதும், முடிக்கும் போதும், ஒரு அரைமணி நேரம் நம்மையே நாம் மறப்போமே...

    அதே உணர்வு தான் இந்த கவிதை படித்து முடிக்கும் போது ஏற்பட்டது..

    நன்றி, கவிதை அருமை..

    ReplyDelete
  3. உண்மையில் மனம் நெகிழச்செய்யும் ஒரு அருமையான கவிதை. வாழ்த்துக்கள் அண்ணே.....

    ReplyDelete
  4. சிறப்பான கவிதை.

    மனித இனம் மட்டுமல்ல ஆடு, மாடு உள்ளிட்ட பிற விலங்கினங்களில்கூட இத்தகைய பாசத் தாய்கள் உண்டு. இது மரபுக் குணமோ!

    வாழ்த்துக்கள்!

    எனது தளத்தில் தங்களின் பின்னூட்டம் பார்த்து இங்கு நுழைந்தேன். கதவைக் காட்டியமைக்கு நன்றி.

    அடிக்கடி வருவேன்-இனி
    அழையா விருந்தாளியாக
    படைத்த கவிகளை சுவைக்க-இனி
    படைக்க உள்ளவைகளை ருசிக்க...

    நன்றி!

    ReplyDelete
  5. அம்மா
    உயிரும் மெய்யும் கலந்த
    உயிர் மெய்...

    நானே விளக்குகிறேன்...
    அ - உயிர் எழுத்து
    ம் - மெய் எழுத்து
    மா - உயிர் ‌மெய்

    ஆம்
    அம்மா...
    உயிரும் மெய்யும் கலந்த உயிர்மெய்..//

    அறிய பட்ட ஒன்றே...அழகு...

    ReplyDelete
  6. அள்ளி அள்ளி குடித்தாலும் குறையாத
    ஆனந்த அன்புக்கடல்...
    இவள் தீட்டினாள் சீர்படுவோம்
    இவள் குட்டினாள் சிற்பமாவோம்...

    அம்மா
    குடும்பம் தலைக்க
    தாங்கி நிற்கும் மனித ஆலமரம்...//

    அருமை நண்பரே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!