15 January, 2011

காகித புலிகள்...


“ஏன் சார்... எனக்கு ஒரு சந்தேகம்....”

“என்ன?”

“காகிதப் புலின்னா என்னா சார் அர்த்தம்?”

“பார்க்கறதுக்குப் பலசாலி மாதிரி இருந்துக்கிட்டு உள்ளுக்குள்ளே பலமில்லாமே இருக்காங்க பாருங்க.. அவங்களைத்தான் காகிதப் புலின்னு சொல்லுவாங்க..”

“அப்படிங்களா?”

“ஆமாம். இந்த வார்த்தையை முதல்லே உபயோகப் படுத்தினவர் யார் தெரியுமா?”

“முன்னாள் சீன அதிபர் மா-சோதுங்-தான். 1946 ஆம் ஆண்டிலே ஒரு நிருபர்கிட்டே பேசும்போது அவர் சொன்னாராம்”

“என்ன சொன்னார்..?”

“பிற்போக்குவாதிகள் எல்லோருமே காகிதப் புலிகள் (Paper Tigers) பார்வைக்கு பயங்கரமாக தெரிவாங்க. ஆனா உண்மையிலே அவங்க பலம் இல்லாதவங்க.. அப்படின்னாராம்.”

“அப்படியா?”

“ஆமாம். அதுக்கப்புறம் அந்த வார்த்தையை நிறையப்பேர் உபயோகப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க?”
 
“அதுதான் இந்த அளவுக்கு ஆயிட்டுதா?”
 
“எந்த அளவுக்கு?”
 
“என் சம்சாரமே என்னைப் பார்த்துச் சொல்லும் அளவுக்கு..!”
 
“என்ன சொன்னாங்க?”
 
“என்னப் பார்த்து நீங்க ஒரு காகிதப் புலிங்கறா சார்!”
 
“நீங்க வீட்டுலே தைரியமா இருக்கணும்.. துணிச்சலாப் பேசணும்... அவங்க ஏதாவது தப்பு செய்தாக் கண்டிக்கணும்!”
 
“நான் அப்படித்தான் சார்... அவ ஏதாவது தப்புப் பண்ணினா நான் உடனே கண்டிப்பேன். ஆனா அதுலேயும் ஓர் இடைஞ்சல்..!”
 
“எனன?”
 
“நான்திட்டினா அவ தன் உயிரை அழிசுடுவேன்ங்கறா சார்!”
 
“அதுக்காகவா பயப்படுறீங்க?”
 
“என்ன சார் அவ உயிரா நினைக்கிறது.. என்ன தானே...”

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்
 

1 comment:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!