03 February, 2011

எப்படித்தான் முடிவெடுக்க...


சில நேரங்களில் இப்படித்தான்
அவள் சிந்திவிட்டு போகும்
சிரிப்புபொளிகளை ‌சேகரித்து
அர்த்தம் தேடிப்பாக்கிறேன்...

தில் காதல் இருக்கிறதா
இல்லையா என்ற குழப்பத்தோடே
கலைந்து விடுகிறது அவைகள்...

நாம் கா‌தலை சொல்லி
அவளின் உதட்டோரத்தில்
ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையும்
உதிர்ந்து விடுமோ என்ற தயக்கத்தோடே
என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது விநாடிகள்...

வீடும் நாடும்
காவியமும் ஓவியமும்
காதலை மரணபயத்தோடே முடிக்கிறது...

சொல்லாமல் உணர்வற்று கிட்ப்பதை விட
சொல்லிவிடுவதாய் முடிவெடுக்கிறது
என் உயிர் அணுக்கள்...

டிதம் கொடுக்க
கிழிந்த சாலைகளுக்கிடையே கடக்கும்
அ‌வளை எதிர்நோக்கும் போது
பூனையின் குறுக்கீடலால்
வீடு திரும்பி நாளை கொடுக்கலாம்
என்று தன்னோடே வைத்துக் கொள்கிறேன்...

ப்போது தரலாம் என்று
சரிவராத முடிவை யோசிக்கையில்
பல்லியின் சப்தத்தால் அதுவும் ஸ்தம்பித்தது..

ப்படியாக 
என் காதலுக்கு தடங்கலாய் இருக்க
காலையில் இன்னொன்றாய்
பக்கத்து வீட்டுக்காரனின் 
காதல் தோல்வி மரணமும்...
 நான் எப்படித்தான் முடிவெடுக்க....


அன்பார்ந்த வாசக பெருமக்களே...
கருத்துக்களை சொல்லுங்கள்... கரங்களைக் கொடுங்கள்...
உயிர்ப்பித்து கொள்கிறோம் நானும் என் கவிதைகளும்...


18 comments:

  1. //வீடும் நாடும்
    காவியமும் ஓவியமும்
    காதலை மரணபயத்தோடே முடிக்கிறது...//

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  2. வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.

    ReplyDelete
  3. பதிவு செம டிசைனா இருக்கு கவிதை அருமை

    ReplyDelete
  4. ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  5. >>>.
    சொல்லாமல் உணர்வற்று கிட்ப்பதை விட
    சொல்லிவிடுவதாய் முடிவெடுக்கிறது
    என் உயிர் அணுக்கள்...

    கலக்கல் லைன்ஸ்.

    ReplyDelete
  6. எனக்கு விளம்பரம் பிடிக்காது.. அதனால 3லயும் ஓட்டு போட்டாச்சுன்னஎல்லாம் கமெண்ட் போட மாட்டேன்.. ஹி ஹி

    ReplyDelete
  7. எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....

    ReplyDelete
  8. சொல்லப்பட வேண்டிய, சொல்லப்படாத காதலின் தவிப்பை, சொல்லிய விதம்... கவிநயம்... அனைத்தும் அருமை!

    ReplyDelete
  9. @சி.பி.செந்தில்குமார்

    என்னை உசுப்பேத்தி என் கவிதைக்கு உயிருட்டிய உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  10. @சி.பி.செந்தில்குமார்

    நானும் உங்களுக்கு விளம்பரம் இல்லாமல் நன்றி கூறுகிறேன்..

    ReplyDelete
  11. @யாழ். நிதர்சனன்

    அப்படி யோசிச்சாதான் தலைவா இங்கு நிலைக்கமுடியும்

    ReplyDelete
  12. சிரிப்புபொளிகளை ‌சேகரித்து
    அர்த்தம் தேடிப்பாக்கிறேன்...

    காதலியின் சிரிப்புக்கு ஒளியும் உண்டு... நல்ல கற்பனை

    ReplyDelete
  13. வேல் தர்மா said... [Reply to comment]

    சிரிப்புபொளிகளை சேகரித்து
    அர்த்தம் தேடிப்பாக்கிறேன்...

    காதலியின் சிரிப்புக்கு ஒளியும் உண்டு... நல்ல கற்பனை

    படித்து விட்டு கருத்து ‌சொன்னதற்கு நன்றி..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!