28 February, 2011

இனி பூமி உன்னைச் சுற்றும்..


விடியல்கள் என்னவோ நாளுக்கொரு விதமாய்
புதிதாகத்தான் பூக்கிறது
நாம்தான் பழைய போர்வைகளை
களைந்தெடுக்கவே பயந்துக் கொண்டிருக்கிறோம்...

ந்திய பெருங்கடலையே 
தன் இளம் சிறகால் கடந்து விடுகிறது 
தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...

நாரால் முடிந்தபின்னும் வாடும் வரை
சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது பூக்கள்...

மேகத்தையே பார்க்காத 
பாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து 
கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது 
கற்றாழை..

ண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
வளர்வதற்கான வழியை 
தேடிக் எடுக்கிறது பிறை நிலா..

க்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
நாம் மனிதர்களாயிற்றே...

திர்காலம் குறித்த கவலையில் 
நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..

னி என்னதான் ஆகப்போகிறது 
உச்சிகளையே குறி வையுங்கள்
 
ங்கள் சிந்தனையில் ஓடும்
இரவுக்கான கனவுகளும்..
பகலுக்கான கனவுகளும்...
இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்
 
பிறகென்ன
சூரியனுக்கு விண்ணப்பமிடும் பூமி 
தினமும் உண்னைச்சுற்றிவர...


இன்று பிப்ரவரி 28 இந்திய அறிவியல் தினம்
  நாளை மார்ச் 1 இளைஞர் எழுச்சி தினம்
இளைஞர்களே எழுச்சிப் பெருங்கள்..நாளை உலகம் உங்கள் கையில்

கவிதை பிடித்திருந்தால் ஒரு கருத்துச் சொல்லுங்க...

41 comments:

  1. //இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்//
    ம்ம் நல்ல கருத்து.............

    ReplyDelete
  2. //உங்கள் சிந்தனையில் ஓடும்
    இரவுக்கான கனவுகளும்..
    பகலுக்கான கனவுகளும்...
    இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்//

    Nice...

    ReplyDelete
  3. நீங்கள் தரும் ஒவ்வொரு கவிதையும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...

    ReplyDelete
  4. ஆக்க பூர்வமான சிந்தனையின் அவசியத்தைச் சொல்லும் அழகான கவிதை.

    ReplyDelete
  5. அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
    வளர்வதற்கான வழியை
    தேடிக் எடுக்கிறது பிறை நிலா..

    ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
    நாம் மனிதர்களாயிற்றே...

    எதிர்காலம் குறித்த கவலையில்
    நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..


    .....நம்பிக்கையூட்டும் வரிகள். அருமையான கவிதை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
    வளர்வதற்கான வழியை
    தேடிக் எடுக்கிறது பிறை நிலா..நம்பிக்கை வரிகள்,,, கலக்கல் கவிதை வீதி... சூப்பர் நண்பா

    ReplyDelete
  8. மனதை எழுச்சி பெற செய்யும் வரிகள்.

    ReplyDelete
  9. //ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
    நாம் மனிதர்களாயிற்றே...//


    நல்ல வரிகள்.

    கவிதையில் உள்ள அனைத்து வரிகளும், கருத்துக்களும் மிக நன்றாக உள்ளது.

    ReplyDelete
  10. மைந்தன் சிவா said... [Reply to comment]

    வடை
    //////

    நன்றி.. மைந்தன் சிவா..

    ReplyDelete
  11. சங்கவி said... [Reply to comment]

    //உங்கள் சிந்தனையில் ஓடும்
    இரவுக்கான கனவுகளும்..
    பகலுக்கான கனவுகளும்...
    இந்த அண்டம் தாண்டி பேரண்டம் எட்டட்டும்//

    Nice...
    ///////

    நன்றி.. சங்கவி..

    ReplyDelete
  12. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    நீங்கள் தரும் ஒவ்வொரு கவிதையும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...
    ////////

    ஏங்க லேட்டு..

    ReplyDelete
  13. சென்னை பித்தன் said... [Reply to comment]

    ஆக்க பூர்வமான சிந்தனையின் அவசியத்தைச் சொல்லும் அழகான கவிதை.
    //////

    நன்றி ஐயா..

    ReplyDelete
  14. தமிழ் உதயம் said... [Reply to comment]

    அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.
    //////

    நன்றி தமிழ் உதயம்..

    ReplyDelete
  15. கலக்குங்க தலைவரே

    ReplyDelete
  16. கவிதை அருமை

    நண்பா அவைகளுக்கு பேராசை எனும் நோய் இல்லை........மற்றும் அடுத்த வேலை மட்டுமே உசிதம்............!

    ReplyDelete
  17. இன்னைக்கு கருத்து மழையா? ரைட்டு

    ReplyDelete
  18. //இந்திய பெருங்கடலையே
    தன் இளம் சிறகால் கடந்து விடுகிறது
    தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...//

    கலக்கல்...
    வாரே வா...
    பஹுத் அச்சா ஹை...
    வொண்டர்ஃபுல்...
    அடி பொளி....

    ReplyDelete
  19. //மேகத்தையே பார்க்காத
    பாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து
    கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது
    கற்றாழை..//

    அற்புதமா இருக்கு...
    என்ன சவுந்தர் ஃபுல் ஃபாம்'ல இருக்கீங்க போல...அருமை அருமை...

    ReplyDelete
  20. ////
    Chitra said... [Reply to comment]

    ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
    வளர்வதற்கான வழியை
    தேடிக் எடுக்கிறது பிறை நிலா..

    ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
    நாம் மனிதர்களாயிற்றே...

    எதிர்காலம் குறித்த கவலையில்
    நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..


    .....நம்பிக்கையூட்டும் வரிகள். அருமையான கவிதை. பாராட்டுக்கள்!
    ////

    நன்றி சித்ரா..

    ReplyDelete
  21. ///////
    ரேவா said... [Reply to comment]

    ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்
    வளர்வதற்கான வழியை
    தேடிக் எடுக்கிறது பிறை நிலா..நம்பிக்கை வரிகள்,,, கலக்கல் கவிதை வீதி... சூப்பர் நண்பா
    //////

    நன்றி ரேவா..

    ReplyDelete
  22. /////
    தமிழ் 007 said... [Reply to comment]

    மனதை எழுச்சி பெற செய்யும் வரிகள்.
    //////
    தமிழ் 007 said... [Reply to comment]

    //ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது
    நாம் மனிதர்களாயிற்றே...//


    நல்ல வரிகள்.

    கவிதையில் உள்ள அனைத்து வரிகளும், கருத்துக்களும் மிக நன்றாக உள்ளது.
    ////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  23. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    கலக்குங்க தலைவரே
    /////

    நன்றி தல..

    ReplyDelete
  24. விக்கி உலகம் said... [Reply to comment]

    கவிதை அருமை

    நண்பா அவைகளுக்கு பேராசை எனும் நோய் இல்லை........மற்றும் அடுத்த வேலை மட்டுமே உசிதம்............!

    நன்றி விக்கி

    ReplyDelete
  25. எதிர்காலம் குறித்த கவலையில் நிகழ்காலத்தை ஏன் இழக்கவேண்டும்?
    நாட்டில் நிறைய பேர் அப்படிதான் திரியறாங்க . சிந்தனையை தூண்டும் வரிகள். அப்படியே நம்ம கடம்பவன பூங்காக்கும் வந்து கொஞ்சம் இளைபாறிட்டு போங்க. இன்று தான் ஆரம்பித்திருக்கேன். உற்சாகப்படுதினால் உயர்வேன்

    ReplyDelete
  26. //////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    இன்னைக்கு கருத்து மழையா? ரைட்டு
    ///////

    ஆமாங்க..

    ReplyDelete
  27. சௌந்தர்...ஒவ்வொரு சிந்தனையும் சிறப்பு.
    பிறைநிலா மிக மிக அருமை !

    ReplyDelete
  28. லேட்டானாலும் வந்துட்டோம்ல...

    ReplyDelete
  29. எதிர்காலம் குறித்த கவலையில்
    நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..//
    அந்தந்த நிமிடத்தை உருப்படியாக
    உபயோகித்தாலே நிகழ்காலமும்,
    எதிர்காலமும் கவலைப்படும்படி
    இருக்காது.
    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //இந்திய பெருங்கடலையே
    தன் இளம் சிறகால் கடந்து விடுகிறது
    தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...//

    கலக்கல்...
    வாரே வா...
    பஹுத் அச்சா ஹை...
    வொண்டர்ஃபுல்...
    அடி பொளி....

    நன்றி மனோ சார்..

    ReplyDelete
  31. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //மேகத்தையே பார்க்காத
    பாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து
    கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது
    கற்றாழை..//

    அற்புதமா இருக்கு...
    என்ன சவுந்தர் ஃபுல் ஃபாம்'ல இருக்கீங்க போல...அருமை அருமை...



    தொடர்ந்து வாங்க..

    ReplyDelete
  32. KADAMBAVANA KUYIL said... [Reply to comment]

    எதிர்காலம் குறித்த கவலையில் நிகழ்காலத்தை ஏன் இழக்கவேண்டும்?
    நாட்டில் நிறைய பேர் அப்படிதான் திரியறாங்க . சிந்தனையை தூண்டும் வரிகள். அப்படியே நம்ம கடம்பவன பூங்காக்கும் வந்து கொஞ்சம் இளைபாறிட்டு போங்க. இன்று தான் ஆரம்பித்திருக்கேன். உற்சாகப்படுதினால் உயர்வேன்


    கண்டிப்பாக என் ஆதரவு உங்களுக்கு..

    ReplyDelete
  33. ஹேமா said... [Reply to comment]

    சௌந்தர்...ஒவ்வொரு சிந்தனையும் சிறப்பு.
    பிறைநிலா மிக மிக அருமை !


    நன்றி ..

    ReplyDelete
  34. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    கவிதை அருமை ..


    நன்றி பாட்டு ரசிகன்

    ReplyDelete
  35. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    /////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
    வாழ்ந்து விட்டு போவோம்/////

    விவரம் அறிய...

    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html


    நீங்கள் தந்துள்ள பாடல் மிக அருமை..

    ReplyDelete
  36. ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    லேட்டானாலும் வந்துட்டோம்ல...

    நன்றி .. தல..

    ReplyDelete
  37. FOOD said... [Reply to comment]

    கவிதை கலக்கல் சார்


    நன்றி.. தல..

    ReplyDelete
  38. இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    எதிர்காலம் குறித்த கவலையில்
    நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..//
    அந்தந்த நிமிடத்தை உருப்படியாக
    உபயோகித்தாலே நிகழ்காலமும்,
    எதிர்காலமும் கவலைப்படும்படி
    இருக்காது.
    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.


    நன்றி..

    ReplyDelete
  39. அன்பின் சௌந்தர் - நல்ல உவமைகள் நிறைந்த நற்கவிதை - இயல்பான சொற்கள் - தெளிந்த நீரோடை போன்ற நடை. படிப்பவனைச் சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் - பலே பலே சொஔந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!