23 April, 2011

ஒரு சர்வதேச எச்சரிக்கை... எங்களை பிரிக்க முடியாது...





நான் எல்லோரிடத்திலும்
சினேகம் பாராட்டி
அன்போடு கலந்த ‌பொழுதில்
என்னோடு அன்பு காட்டியும்...


நெஞ்சில் நஞ்சுக் கலந்து
கண்களில் தீ வளர்த்து...
சினம் கொண்டு
எதிரியை சொல்லால் சுட்ட பொழுதில்
என்னோடு மேனிச் சிவந்தும்....
 
ள்ளி படிப்பு முடிந்தப்பின்
மூன்றாம் பிறையாய் மீசை முகம் காட்ட
கல்லூரி சாலைகளில் கால் பதித்து
நான் காலங்களை தின்ற போது
சகத்தோழனாய் என் மீது கைப்போட்டும்...


சான்றிதழ்களை சுமந்துக் கொண்டு
வேலை கேட்டு ஏறிய படிகளில்
வெறுமையாய் திரும்ப
எதிர் கால கனவுகளில் தலைத் தாழ்கையில்
எனக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டும்...


வேலையில்லாதவர் தேவையில்லாதவர்
என நாடே புறம் தள்ள...
மாநகர பூங்காக்களில்
‌புள்வெளிகளில் படுத்துக்கிடக்கும் போது
என் அருகில் படுத்துக் கிடந்தும்...


காதல் நோய் பிடித்து
வானுக்கும் பூமிக்கும் பறந்து திரிந்து
பூக்கள் கூட்டத்தில் முகாமிட்டு
கவிதை சோலையில் கால் நீட்டி சாய்து கிடக்கும் போது
என் மடியில் தலை வைத்துச் சாய்ந்தும்...


யுளில் ஒரு நாளை கூட்டிக் ‌கொள்ள
அடிவயிறு வலியெடுக்க
அங்கமெல்லம் குலுங்க
ஆனந்தமாய் சிரித்த பொழுதில்
என்னோடு சிரித்துக் கொண்டும்...
 
ராரின் செய்கை எண்ணி
உற்றாரின் வஞ்சகத்தாலும்..
நட்பாளரின் துரோகத்தாலும்.
நொந்து நொடிந்து கண்ணீர் கசிந்து நிற்கையில்
என்னோடு விசுப்பிக் கொண்டும்...


தூரப்பயணங்களில்
நொடிகலெல்லாம் மணிகளாகும் போது
இடமிருப்போரும் வலமிருப்போரும்
அன்னியராய் அமைதி காக்கையில்
என் அருகில் அமர்ந்துக் கொண்டு ஆதரவு கொடுத்தும்...
 

புதுமையை கூறி வியக்க வைத்தும்...
கடமை கூறி நடக்க வைத்தும்...
காட்சி கூறி பயம் படுத்தியும்...
காவியம் கூறி கலங்க வைத்தும் ...
என்னை மனிதனாய் மாற்ற முயற்சித்திருக்கிறது..


விதைச் சொல்லியும்
கதைச் சொல்லியும்...
காதல் சொல்லியும்
காலத்தை சொல்லியும் ...
விதவிதமாய் ஆடைகள் அணிந்து
என்னை பரவசப்படுத்திக் கொண்டும்...


முடி நரைத்து.. மூளை நரைத்து..
நாடிகளும் நரம்புகளும் இற்றுப்போன பிறகும்
மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டு
என் வாயில் ஊற்றிய பால் வழியும் வரைக்கும்...
என்ன்னோடு ஊன்று கோலாய் இருந்தும்...


ன்னோடு
எப்பொழுதும் ஒன்றென

கலந்துக்கிடக்கிறது...
 
புத்தகங்கள்....



இன்று சர்வதேச புத்தகதினம்.....
உங்கள் கருத்துக்காக காத்துகிடக்கிறது இந்த கவிதை.....
(இது ஒரு மீள் பதிவு)

24 comments:

  1. கவிஞ்சா உன் கவிதை அருமை........

    புத்தகம் வாழ்வின் ஒரு அங்கம் அது இல்லையேல் ஏது சொர்க்கம் எப்பிடி!

    ReplyDelete
  2. This is your best kavithai in my perception. I like the way the story is dramatized. Superb....

    ReplyDelete
  3. கவித வீதியில் அருமையான கவிதை உலா...சூப்பர்.

    ReplyDelete
  4. சூப்பர்.. நான் கவிதையை படித்து முடிக்கும் வரை நினைக்கவில்லை, உங்கள் கவிதைக்கான, கரு புத்தகம் என்று.,.... சூப்பர்.... கவிதை

    ReplyDelete
  5. நன்றாக உள்ளது கவிதை.....

    ReplyDelete
  6. நண்பா கவிதைகள் மிக அழகு

    ReplyDelete
  7. என்ன சொல்லிப் பாராட்ட
    என்றே திகைகிறேன்!கவிஞனே
    உன் கவித்திறம்,வாழ்க,வள்ர்க
    மென்மேலும்,மென்மேலும்!

    ReplyDelete
  8. தமிழ் மணம் என்னவாச்சு?

    ReplyDelete
  9. ”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
    அது உங்களுக்குதிரும்ப வராது.
    என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
    என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”

    -பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.

    கவிதை super

    ReplyDelete
  10. கவிதை எழுத்தின் பரிணாமம் நல்ல வளர்ச்சி.....

    ReplyDelete
  11. புத்தகங்கள் இல்லையானால், நாம் இங்கு வரை வந்துருக்க முடியாதே மக்கா....

    ReplyDelete
  12. புத்தகங்கள் வாழும் வரலாறு....

    ReplyDelete
  13. வாசிக்கும் போது புத்தகத்தை தான் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கவில்லை. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  14. கவிதை கவிதை

    ReplyDelete
  15. நல்ல புத்தகம் நல்ல தோழன் என்பார்கள்....புத்தகம் பற்றிய உங்கள் கவிதை சூப்பர்

    ReplyDelete
  16. வரிகளை படித்துவிட்டு இப்படி சொல்லிகொண்டேன் ம்ம்ம்ம்
    என் முதல் நண்பனைப் பற்றி உங்களின் வரிகள் அருமை

    ரஹீம் கஸாலி அண்ணன் சொன்னது போல்
    நல்ல புத்தகம் ஒரு நல்ல தோழன்

    நம் தனிமைகளிலும் அதிகமாக நம்முடன் இருப்பவனும் அவன்தான்

    கவிதைக்கு என் பாராட்டுக்கள் நண்பா

    ReplyDelete
  17. இந்த கவிதையெல்லாம் எப்படிபா எழுதறீங்க, கொஞ்சம் சொல்லி கொடுங்க

    ReplyDelete
  18. உங்க கவிதை மிக நன்றாக உள்ளது
    கவிமன்னா
    பாராட்டுக்கள் நண்பா

    ReplyDelete
  19. வில்லனாய் வரும் அஜீத்
    http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_7211.html

    ReplyDelete
  20. சகோ, கவிதையின் கருப் பொருளில் இரண்டு பொருள்கள் வரும் வகையிற் சொல்லியிருக்கிறீர்கள் என்பது கவிதையின் இறுதி வரிகளைப் படிக்கையில் தான் தெரிந்தது.

    கவிதையின் கடைசி வரி வரை, நீங்கள் உங்கள் உயிர் நண்பனைப் பற்றிப் பாடுகிறீர்கள் என்று தான் நினைத்தேன், இறுதி வரிகளில் அழகாக கவிதையின் உள்ளடக்கத்திற்கு அர்த்தம் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  21. ஒத் இவங்கள சொன்னீங்களா??நானும் எதோ தப்சி ஹன்சிகா எண்டு நினைச்சு வந்தேன் பாருங்க...

    ReplyDelete
  22. சிறப்பாக இருந்தது சௌந்தர். புத்தக தினத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  23. புத்தக தினத்தை நினைவுபடுத்தி அசத்தலான கவிதை.ஆனால் புத்தகம் வாசிக்க நிறையப்
    பொறுமை வேணும் !

    ReplyDelete
  24. அசத்திட்டீங்க....வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!