21 April, 2011

ரஜினி பட பூஜை ஒரு வாரம் தள்ளிப் போனது... ராணா செய்தி..



ராணா படத்துக்காக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன ஏவிஎம் ஸ்டுடியோவில். இன்னும் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்கவில்லை என்பதால் இன்று நடக்கவிருந்த பட பூஜை தள்ளிப் போய்விட்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை எளிமையாக ஏவி எம் பிள்ளையார் கோயிலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து படத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வி4 ரியாஸிடம் விசாரித்தபோது, 'அநேகமாக இந்த மாத இறுதியில் படத்தின் பூஜை இருக்கும். ஸ்கிரிப்ட் மற்றும் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் சூப்பர் ஸ்டாரும் இயக்குநரும் பிஸியாக உள்ளனர்" என்றார்.

இந்தப் படத்தில் நடிக்கும் ஏழு நாயகிகள் யார் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தீபிகா படுகோன் மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு இந்தப் படத்துக்காக சண்டைப் பயிற்சி, சமஸ்கிருதப் பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார்கள்.

பூஜை போட்ட கையோடு, ரஜினி - தீபிகா டூயட் மட்டும்தான் எடுக்கப்பட உள்ளதால், மற்ற நடிகர் நடிகை தேர்வு குறித்து பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.

இன்னிக்கு அம்புட்டுதாங்க...

13 comments:

  1. என்னது... தீபிகா படுகோனே ரஜினிக்கு ஜோடியா!!!!!!!!!!!!!! சாமி முடியலடா

    ReplyDelete
  2. சுட சுட சூப்பர்ஸ்டார் செய்தி ம்ஹும்....

    ReplyDelete
  3. பரவால்ல.. நல்ல நியூஸ் தான்

    ReplyDelete
  4. இன்னைக்கு சினிமா நீயுஸா... கவிதை வீதியில்...

    ReplyDelete
  5. ரஜினி பட தகவலுக்கு நன்றிகள் சகோ.. டெம்பிளேட் கமெண்ட் போடுவதற்கு சாரி..

    ReplyDelete
  6. //இந்தப் படத்தில் நடிக்கும் ஏழு நாயகிகள் யார் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை//
    ஏழு நாயகிகளா....ஆ..ஆ?!!

    ReplyDelete
  7. படம் பூஜை போட்டதும பரபரப்பு பத்திக்கும்

    ReplyDelete
  8. மிக முக்கியமான,தேவையான ஒரு செய்திதான்!!

    ReplyDelete
  9. நடத்துங்க நண்பா

    நண்பேன்டா- கடி..கடி...கடி.. இது செம காமெடி... -
    http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_4055.html

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!