28 April, 2011

நீயெல்லாம் ஒரு பெண்ணா....?




தையாவது இழந்து 
எதையாவது கொடு என்றாள்....
நேரத்தை வீணடித்து 
நேர்த்தியாய் ஒரு  கவிதை தந்தேன்...!

*******************************************


வள் சிரித்தால்..
அதற்குபின் மறைந்துக்கிடக்கும்
என் மரணத்தைப்பற்றி கவலைப்படமாமல் 
நானும் சிரித்தேன்..!

*******************************************


நீ போட்ட கோலத்தை விட
அழகாய் பதிந்து போயிருக்கிறது
பக்கத்தில் உன் பாதங்கள்..

*******************************************


யமில்லை..
வலிக்குப் பயந்திருந்தால்
நான் காதலிக்க அல்லவா 
பயந்திருக்க வேண்டும்...!

*******************************************

கவிதைகுறித்த தங்கள் கருத்தை பதிவுச் செய்யுங்கள்...


23 comments:

  1. அண்ணே! எம் மாமே பன்னிக்குட்டிய ரொம்ப நாளா காணோம! எங்கயாச்சும் பார்த்தேளா? சிநேகிதனை..... சிநேகிதனை ரகசிய சிநேகிதனை.......

    ReplyDelete
  2. கவிதை எல்லாமே நல்லா தான் இருக்கு...

    ஆனோ ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கே..

    ReplyDelete
  3. "நீ போட்ட கோலத்தை விட
    அழகாய் பதிந்து போயிருக்கிறது
    பக்கத்தில் உன் பாதங்கள்.."

    இயற்கையான, நேர்த்தியான, அழகான வரிகள் :)

    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  4. மாப்ள உங்களுக்கு ரத்த வாடை ரொம்ப பிடிக்குமோ ஹிஹி!

    ReplyDelete
  5. அவளே ஒரு கவிதை என்றால்,அவளுக்கு எதற்குக் கவிதை?

    ReplyDelete
  6. கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கிறது. இது கோபத்தில் வந்தவையா இல்லை ஊடலில் வந்தவையா?

    ReplyDelete
  7. அவ்ளோ வலியா எடுக்கும் அப்புறம் ஏம்பா அந்த பாழாப்போன காதல கட்டிக்கிட்டு அழுறீங்க.

    ReplyDelete
  8. அசத்தல் கவிதை நல்லாய் இருக்கு

    ReplyDelete
  9. குறுங் கவிகள். அருமையாக உள்ளன.

    ReplyDelete
  10. பயமில்லை..
    வலிக்குப் பயந்திருந்தால்
    நான் காதலிக்க அல்லவா
    பயந்திருக்க வேண்டும்...!//

    இது கொஞ்சம் ஓவர்...கலாட்டா
    ஹி...ஹி....

    ReplyDelete
  11. //அவள் சிரித்தால்..
    அதற்குபின் மறைந்துக்கிடக்கும்
    என் மரணத்தைப்பற்றி கவலைப்படமாமல்
    நானும் சிரித்தேன்..!//

    அருமை அருமை...

    ReplyDelete
  12. //பயமில்லை..
    வலிக்குப் பயந்திருந்தால்
    நான் காதலிக்க அல்லவா
    பயந்திருக்க வேண்டும்...!///

    கரெக்ட்டு.....

    ReplyDelete
  13. அசத்தல் அசத்தல் மக்கா...

    ReplyDelete
  14. செளந்தர் தயவுசெய்து பிளாக்கில் தேவையில்ல widget எல்ல்லம் தூக்குக்கு Dead Slow ஆகுது

    ReplyDelete
  15. //நீ போட்ட கோலத்தை விட
    அழகாய் பதிந்து போயிருக்கிறது
    பக்கத்தில் உன் பாதங்கள்..//

    அருமையான வரிகள். இவ்வளவு ரசிக்கும் ரசிகனுக்குமா காதல் வலி கொடுக்கும். காதல் வலி நிவாரணி என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

    ஆதலினால் மானிடரே காதல் செய்வீர்!!

    ReplyDelete
  16. அவள் சிரித்தால்..
    அதற்குபின் மறைந்துக்கிடக்கும்
    என் மரணத்தைப்பற்றி கவலைப்படாமல்
    நானும் சிரித்தேன்..!

    என்ன பாஸ்.

    அவள் சிரிப்பதினால் நீங்கள் எப்படி மரணம் அடைவிர்கள் ?

    ReplyDelete
  17. கவிதைகள் அருமை

    "நீ போட்ட கோலத்தை விட
    அழகாய் பதிந்து போயிருக்கிறது
    பக்கத்தில் உன் பாதங்கள்.."

    அழகான வரிகள்.

    ReplyDelete
  18. நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
    கருத்தெல்லாம் சொல்றீங்க...அசத்தல்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!