01 June, 2011

18 கடிதங்களுடன் வாதாடப் போகும் ராசா-2ஜி சிக்கலில் மாட்டும் மன்மோகன்?


ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரமதருக்கும் தனக்கும் நிகழ்ந்த 18 கடித பரிமாற்றங்களை முன் வைத்து வாதாட உள்ளதால், ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை வளையத்தில் மன்மோகன் சிங்கும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, தான் அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாட ராசா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ராசாவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களாகும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில்தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் ராசா முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடிதங்களை ஆதாரமாக வைத்து ராசா வாதாடும்போது மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.

ராசாவின் வாதத்தை வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் சிபிஐ தனது விசாரணைக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வரையில் பிரதமரின் பெயரை தெரிவிக்காத ராசா தற்போது களத்தில் 18 கடிதங்களுடன் தானே இறங்குகிறார். இச்சூழலில் அரசியலில் ஏற்படும் அதிரடிகளை பொருத்திருந்து பார்ப்போம். 

பிரதமர் தன் சுத்தத்தன்மையை நிருபிப்பாரா என்ற கேள்விகளுடன்...!

36 comments:

  1. நாம் இந்தியர், இப்பிடி தான் விடுவோமா, எல்லாத்தையும் சேர்ந்து செஞ்சுட்டு, அவரு மட்டும் ஜாலிய இருந்தா எப்பிடி?

    ஒண்ணு எல்லோரும் உள்ளே இருக்கணும், இல்ல வெளிய இருக்கணும். அதான் இப்பிடி எல்லாம் பண்றாங்க.

    ReplyDelete
  2. மாப்ளே எப்படியும் வெளிய உடப்போறாங்க ஹிஹி!

    ReplyDelete
  3. அப்ப மன்மோகனும் மாட்டுகிறாரா? பாவம் தலையாட்டி பொம்மை...

    ReplyDelete
  4. ஆஹா...ஸ்பெக்ரமைச் சுற்றி ஒரு பெரிய சங்கிலி வளையமே இருக்குப் போல...
    அடுத்தது மன்மோகனா. அவ்...

    ReplyDelete
  5. வண்டு முருகன் மாதிரி பிரதமர் மாட்டுவாரா .....

    ReplyDelete
  6. //ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை வளையத்தில் மன்மோகன் சிங்கும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.//

    அப்பிடியாவது இந்த கிழம் வாயை திறக்குதா பார்ப்போம்..

    ReplyDelete
  7. ராசாவின் வாதத்தை வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் சிபிஐ தனது விசாரணைக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.//
    செம திருப்பமா இருக்கே!அப்பயாவது இந்தகிழவன் வாயை திறப்பாராமா>?

    ReplyDelete
  8. அப்படி போடு அருவாள தமிழன்ன கொக்கா

    யோவ் மன்ன்னு மாட்டுனடீ

    ReplyDelete
  9. சிங்கை வழக்கினுள் நுழைய வைக்கும் முன், ராசாவுக்கு ஜாமீன் என்ன எல்லா மீனுமே கிடச்சிரும் வேண்ணா பாருங்க...!!!

    ReplyDelete
  10. இந்த வழக்கு எங்க போய் முடியும்ன்னு தெரியல

    ReplyDelete
  11. குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டால் நல்லது ..

    ReplyDelete
  12. இன்னும் என்னென்ன நடக்க போகுதோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்

    ReplyDelete
  13. இன்னும் என்னென்ன நடக்க போகுதோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்

    ரிப்பீட்டு

    ReplyDelete
  14. அவரு வெறும் டம்மி பீசுங்க..... அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது...

    ReplyDelete
  15. எல்லாரையும் புடிச்சு உள்ள போடுங்கப்பு நாடு நல்லாருக்கும்

    ReplyDelete
  16. இவங்க எல்லாம் எப்பத்தான் திருந்த போறாங்களோ தெரியல..

    ReplyDelete
  17. தாங்கள் தப்பித்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும் போது, வேறு பலர் சிக்குவார்கள். அப்படி சிக்கியவர் தான் கனிமொழி. இனி யார் யார் சிக்க போகிறார்களோ.

    ReplyDelete
  18. கடசியில் எப்படி முடியப்போகுது பார்க்கலாம்!

    ReplyDelete
  19. உண்மையான குற்றவாளிகள் யாரென்று இனி தெரியும்..

    ReplyDelete
  20. //பாட்டு ரசிகன் said... [Reply to comment]
    உண்மையான குற்றவாளிகள் யாரென்று இனி தெரியும்..//

    வேணாம், முடியல, பிச்சிபுடுவேன் பிச்சி...பாட்டு ரசிகனாம் பாட்டு ரசிகன் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  21. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //பாட்டு ரசிகன் said... [Reply to comment]
    உண்மையான குற்றவாளிகள் யாரென்று இனி தெரியும்..//

    வேணாம், முடியல, பிச்சிபுடுவேன் பிச்சி...பாட்டு ரசிகனாம் பாட்டு ரசிகன் ஹே ஹே ஹே ஹே...
    ////
    ஏங்க அவர எங்க இப்படி கலாய்க்கிறிங்க..
    அவரு ரொம்ப கோவக்காரரு இப்ப அவர் அமைதியா இருக்காரு.. அவரை உசுப்பேத்தாதீங்க..
    அப்புறம் தாங்க மாட்டிங்க..

    என்ன மாதிரி அவர் நல்லவரு இல்லீங்க...

    ReplyDelete
  22. அரசியல்??ம்ம்ம்

    ReplyDelete
  23. மன் மோகன் ஒரு மவுன மோகன்

    ReplyDelete
  24. கடைசியில் எல்லாம் பிசுபிசுத்துப்போய்டும். ஜாமீனில் எல்லோரும் வெளியே வந்து கேஸையே ஒண்ணுமி்ல்லாமல் பண்ணப்போறாங்க . நீங்க வேணா பாருங்க. நம்ம மக்களும் வசதியாஎல்லாத்தையும் மறந்துட்டு அடு்த்த ஊழலை பற்றி பேச ஆரம்பித்துடுவாங்க.

    ReplyDelete
  25. அன்பின் சௌந்தர் - பொறுத்திருந்து பார்ப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  26. ///
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    வாழ்க சனநாயகம்
    ///


    வாங்க பிரகாஷ்

    ReplyDelete
  27. ///
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    அரசியல்??ம்ம்ம்
    ///

    ஆமாம்..

    ReplyDelete
  28. //
    குணசேகரன்... said... [Reply to comment]

    மன் மோகன் ஒரு மவுன மோகன்
    ///

    இவர் என்று மௌனம் கலைப்பார் என்று தெரியவில்லை..

    ReplyDelete
  29. ////
    யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    உள்ளேன் ஐயா!
    ////

    ஐயா வந்து ரொம்ப நாளாச்சி..

    ReplyDelete
  30. ///
    FOOD said... [Reply to comment]

    வந்து வாக்கிட்டேன்.
    ////

    நன்றி..

    ReplyDelete
  31. ///
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    கடைசியில் எல்லாம் பிசுபிசுத்துப்போய்டும். ஜாமீனில் எல்லோரும் வெளியே வந்து கேஸையே ஒண்ணுமி்ல்லாமல் பண்ணப்போறாங்க . நீங்க வேணா பாருங்க. நம்ம மக்களும் வசதியாஎல்லாத்தையும் மறந்துட்டு அடு்த்த ஊழலை பற்றி பேச ஆரம்பித்துடுவாங்க.
    ////

    நீங்க சொல்வதும் உண்மைதாங்க...

    ReplyDelete
  32. ///
    cheena (சீனா) said... [Reply to comment]

    அன்பின் சௌந்தர் - பொறுத்திருந்து பார்ப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    //

    நன்றி ஐயா..

    ReplyDelete
  33. அப்போ கேஸ் முடியவே முடியாதா! பி.ஜே.பி வர வரைக்கும் பத்து நாளுக்கொருதரம் தலைப்புச் செய்தியில மட்டும் வரும்!

    ReplyDelete
  34. //////
    என் நடை பாதையில்(ராம்) said... [Reply to comment]

    அப்போ கேஸ் முடியவே முடியாதா! பி.ஜே.பி வர வரைக்கும் பத்து நாளுக்கொருதரம் தலைப்புச் செய்தியில மட்டும் வரும்!
    //////
    வாங்க நண்பரே..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!