03 June, 2011

வெளியில் தெரியாத மனக்கறை...!



தூசுகளும் அழுக்குகளும்
நிறைந்த இந்த உலகில்
ஆடையின் மீதும் உடல் மீதும்
கறைகள் படாமல் பார்த்துக் கொள்கிறேன்...

ன் மீது படுகின்ற கறைகளை
போக்குவது பற்றிய கவலைகள்
தினம் தினம்..

டல் அழுக்குகளை
போக்க வழிகள் அறிவேன்...
 
டைக்கறைகள் அகற்ற
எத்தனை வ‌ழிமுறைகளை
பின்பற்ற முடியுமோ
அத்தனையும் பின்பற்றுகிறேன்...

ன்னுடைய ஆடைகளில்
விடாத கறைபடுமாயின் அவைகள்
தலையணையிலே தஞ்சம் அடைகிறது...
 
னக்கு தெரிந்தும்
எனக்கு தெரியாமலும்
நான் செய்யும் என்னுடைய தவறுகள்
மனதில் அழுக்காய் படிகிறது...
 
தைப்பற்றி நான்ஒன்றும்
‌பெரியதாய் கவலைப் படுவதில்லை...


ருவேளை
மனதில் படிகிற கறை ‌
வெளியே தெரியாது என்பதலோ...!



இந்த கவிதை குறித்த தங்கள் மனசு என்ன சொல்கிறது...

67 comments:

  1. ஃஃஃஎனக்கு தெரியாமலும்
    நான் செய்யும் என்னுடைய தவறுகள்
    மனதில் அழுக்காய் படிகிறது..ஃஃஃஃ

    உண்மையாகத் தாங்க நாம் தெரயாமல் செய்யும் பல பின்னர் தான் மனதை உறுத்துது...

    ReplyDelete
  2. தூசுகளும் அழுக்குகளும்
    நிறைந்த இந்த உலகில்
    ஆடையின் மீதும் உடல் மீதும்
    கறைகள் படாமல் பார்த்துக் கொள்கிறேன்...//

    ஆம், சகோ மனதளவில் சுத்தமாக இருக்கையில் தான் எமது வாழ்வும் சிறக்கும் என்பதைத் தத்துவமாக கவிதையில் சொல்லுகிறீர்களே!

    ReplyDelete
  3. என்னுடைய ஆடைகளில்
    விடாத கறைபடுமாயின் அவைகள்
    தலையணையிலே தஞ்சம் அடைகிறது...//

    பாஸ், பின்னிட்டீங்க....

    ReplyDelete
  4. ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...//

    எங்கள் ஒவ்வொருவர் மனதினையும் பார்த்து நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தம் நிறைந்த் கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி சகோ.

    ReplyDelete
  5. நச்சுன்னு சொல்லி இருக்கய்யா கவிஞ்சா!

    ReplyDelete
  6. ///
    ♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]

    I I I சுடு சோறு////

    வாங்க நண்பரே..

    ReplyDelete
  7. ///
    ♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]

    ஃஃஃஎனக்கு தெரியாமலும்
    நான் செய்யும் என்னுடைய தவறுகள்
    மனதில் அழுக்காய் படிகிறது..ஃஃஃஃ

    உண்மையாகத் தாங்க நாம் தெரயாமல் செய்யும் பல பின்னர் தான் மனதை உறுத்துது...
    ///

    தங்கள் கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  8. #ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ..#


    யதார்த்தமான உண்மை....

    ReplyDelete
  9. ///
    நிரூபன் said... [Reply to comment]

    தூசுகளும் அழுக்குகளும்
    நிறைந்த இந்த உலகில்
    ஆடையின் மீதும் உடல் மீதும்
    கறைகள் படாமல் பார்த்துக் கொள்கிறேன்...//

    ஆம், சகோ மனதளவில் சுத்தமாக இருக்கையில் தான் எமது வாழ்வும் சிறக்கும் என்பதைத் தத்துவமாக கவிதையில் சொல்லுகிறீர்களே!
    ////

    உண்மைதான் நண்பரே..

    ReplyDelete
  10. //ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!


    அது வாழ்நாள் முழுவதும் வலிக்கும்

    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
    Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
    http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

    ReplyDelete
  11. ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!//

    ஆம். வெளியில் தெரியாது என்கிற கறைகள் பற்றி கவலைப்படாமல், நீக்கமுயற்சியும் செய்யாமல் இருப்பது பின்னாளில் வருத்தமளிக்கும்...

    ReplyDelete
  12. அகம் தூய்மையடையாதபோது புறத்தூய்மை பயனற்றது என்பதை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். அகத்தைப்பற்றி அக்கறையில்லாத மனிதர்கள் நிறைந்த உலகம் இது. அருமையான ஆதங்கம்.

    ReplyDelete
  13. படம் அட்டகாசம்

    ReplyDelete
  14. ////
    நிரூபன் said... [Reply to comment]

    ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...//

    எங்கள் ஒவ்வொருவர் மனதினையும் பார்த்து நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தம் நிறைந்த் கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி சகோ.
    /////

    நன்றி நிருபன்..

    ReplyDelete
  15. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    நச்சுன்னு சொல்லி இருக்கய்யா கவிஞ்சா!
    ////
    நன்றி விக்கி

    ReplyDelete
  16. ///
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    #ஒருவேளை
    மனதில் படிகிற கறை
    வெளியே தெரியாது என்பதலோ..#


    யதார்த்தமான உண்மை....
    ////

    ஆம்..
    தங்கள் வரு‌கைக்கு நன்றி..

    ReplyDelete
  17. ///
    Speed Master said... [Reply to comment]

    //ஒருவேளை
    மனதில் படிகிற கறை
    வெளியே தெரியாது என்பதலோ...!


    அது வாழ்நாள் முழுவதும் வலிக்கும்////

    உண்மைதான் நண்ப‌ரே..

    ReplyDelete
  18. ///
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!//

    ஆம். வெளியில் தெரியாது என்கிற கறைகள் பற்றி கவலைப்படாமல், நீக்கமுயற்சியும் செய்யாமல் இருப்பது பின்னாளில் வருத்தமளிக்கும்..////

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  19. ///
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    அகம் தூய்மையடையாதபோது புறத்தூய்மை பயனற்றது என்பதை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். அகத்தைப்பற்றி அக்கறையில்லாத மனிதர்கள் நிறைந்த உலகம் இது. அருமையான ஆதங்கம்.
    ///

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  20. ///
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    படம் அட்டகாசம்
    ////

    எல்லாம் சுட்டப்படம்..

    ReplyDelete
  21. அதனால்தான் பாரதி சொன்னான்
    ”துணி வெளுக்க மண்ணுண்டு .....
    தோல் வெளுக்கச் சாம்பருண்டு...
    மணி வெளுக்கச் சாணையுண்டு....
    மனம் வெளுக்க வழியேயில்லை எங்கள் முத்து மாரியம்மா” என்று.
    நல்ல சிந்தனை சௌந்தர்!

    ReplyDelete
  22. ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!//

    ஆம். வெளியில் தெரியாது என்கிற கறைகள் பற்றி கவலைப்படாமல், நீக்கமுயற்சியும் செய்யாமல் இருப்பது பின்னாளில் வருத்தமளிக்கும்...

    இதைத்தான்
    “மனத்துக்கண் மாசு இலன் ஆதல்”
    வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

    ReplyDelete
  23. //என்னுடைய ஆடைகளில்
    விடாத கறைபடுமாயின் அவைகள்
    தலையணையிலே தஞ்சம் அடைகிறது.//

    மிக ரசித்தேன் இவ்வரிகளை...

    ReplyDelete
  24. ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!//



    சரியாக சொன்னீர்கள் மக்கா...!!!

    ReplyDelete
  25. சும்மா முகத்தில் சப்புன்னு அடிச்சி கேக்குற மாதிரி இருக்கு...

    ReplyDelete
  26. ///அதைப்பற்றி நான்ஒன்றும்
    ‌பெரியதாய் கவலைப் படுவதில்லை...

    ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!/// இது தான் யதார்த்தமும் கூட ...:-) =:-(

    ReplyDelete
  27. கவிதைவீதியில் ஓர் அழகிய கவிதை ....

    ReplyDelete
  28. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    அதனால்தான் பாரதி சொன்னான்
    ”துணி வெளுக்க மண்ணுண்டு .....
    தோல் வெளுக்கச் சாம்பருண்டு...
    மணி வெளுக்கச் சாணையுண்டு....
    மனம் வெளுக்க வழியேயில்லை எங்கள் முத்து மாரியம்மா” என்று.
    நல்ல சிந்தனை சௌந்தர்!
    ////

    தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா..!

    ReplyDelete
  29. ///
    வை.கோபாலகிருஷ்ணன் said... [Reply to comment]

    ஒருவேளை
    மனதில் படிகிற கறை
    வெளியே தெரியாது என்பதலோ...!//

    ஆம். வெளியில் தெரியாது என்கிற கறைகள் பற்றி கவலைப்படாமல், நீக்கமுயற்சியும் செய்யாமல் இருப்பது பின்னாளில் வருத்தமளிக்கும்...

    இதைத்தான்
    “மனத்துக்கண் மாசு இலன் ஆதல்”
    வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
    ///////

    தங்கள் வரு‌கைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..!

    ReplyDelete
  30. ////
    சங்கவி said... [Reply to comment]

    //என்னுடைய ஆடைகளில்
    விடாத கறைபடுமாயின் அவைகள்
    தலையணையிலே தஞ்சம் அடைகிறது.//

    மிக ரசித்தேன் இவ்வரிகளை...
    ///

    நன்றி...

    ReplyDelete
  31. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!//



    சரியாக சொன்னீர்கள் மக்கா...!!!
    /////

    நன்றி மக்கா...

    ReplyDelete
  32. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    சும்மா முகத்தில் சப்புன்னு அடிச்சி கேக்குற மாதிரி இருக்கு...
    ////

    நம்முடைய மனசாட்சிக்கு பயந்து நாம் நடந்தால் போதும் மக்கா...

    ReplyDelete
  33. ///
    கந்தசாமி. said... [Reply to comment]

    ///அதைப்பற்றி நான்ஒன்றும்
    பெரியதாய் கவலைப் படுவதில்லை...

    ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!/// இது தான் யதார்த்தமும் கூட ...:-) =:-(
    ////

    சரியாக ‌சொன்னீர்கள்..
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  34. ////
    koodal bala said... [Reply to comment]

    கவிதைவீதியில் ஓர் அழகிய கவிதை ....
    /////

    நன்றி..

    ReplyDelete
  35. /////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    கலக்கல் கவிதை நண்பா..
    /////

    வாங்க நண்பரே..

    ReplyDelete
  36. போன கவிதை அளவுக்கு கவரலை அண்ணா... போன கவிதைனா இதுக்கு முன்னாடினா காலத்தோட ஒத்துப்போவதில்லை வாழ்க்கை னு ஒரு கவிதை வந்திசுல அது :-)

    ReplyDelete
  37. ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!

    மற்றவர்களுக்கு தெரியாது என நினைத்து நாம் செய்யும் தவறுகளையும் , சந்தர்பத்திற்கு ஏற்ப மரம் விட்டு மரம் தாவும் சந்தர்ப்பவாதத்தை
    சத்திய வார்த்தைகளினால் சொல்லியிருக்கிறிர்கள் கவிஞரே

    ReplyDelete
  38. அன்பின் சௌந்தர்- சிந்தனை அருமை - அகத் தூய்மை புறதூய்மை இரண்டுமே இன்றியமையாத தூய்மைகள் - புறத் தூய்மை ஓரிரு நாட்களில் / வாரங்களில் செது விடலாம். அகத் தூய்மை - நாம் நினைத்தால் அன்றே செய்யலாம் - இயலவில்லை எனில் முயன்றால் விரைவினில் செய்யலாம். ஆனால் நம் மனது ஏதொ காரணத்தினால் நம்மைச் செய்ய அனுமதிப்பதே இல்லை. ம்ம்ம்ம்ம்ம் சிந்திப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  39. ஆடைகளில் படியும் அழுக்கு அப்புறப்படுத்தப்பட வழியுண்டு. மன அழுக்குகளுக்கு...
    நல்ல கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. ///
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    போன கவிதை அளவுக்கு கவரலை அண்ணா... போன கவிதைனா இதுக்கு முன்னாடினா காலத்தோட ஒத்துப்போவதில்லை வாழ்க்கை னு ஒரு கவிதை வந்திசுல அது :-)
    ////

    வாங்க...

    ReplyDelete
  41. @cheena (சீனா)

    தங்கள் வுருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...!

    ReplyDelete
  42. ///
    குடந்தை அன்புமணி said... [Reply to comment]

    ஆடைகளில் படியும் அழுக்கு அப்புறப்படுத்தப்பட வழியுண்டு. மன அழுக்குகளுக்கு...
    நல்ல கவிதை. வாழ்த்துகள்.
    /////


    நன்றி...

    ReplyDelete
  43. கறையில்லாத மனசு எது...? ஆமா படம்லாம் எங்கேருந்து புடிக்கிறீங்க?

    ReplyDelete
  44. கறை நல்லது...அவங்கவங்களுக்குத் தெரிஞ்சா...உணர்ந்தால்...

    ReplyDelete
  45. இதை படித்ததும் ஏனோ மனதில் ஒரு சிறு உறுத்தல்,

    கறைகள் ஈட்டியாய் மாறிவிட்டனவோ?

    ReplyDelete
  46. ////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    கறையில்லாத மனசு எது...? ஆமா படம்லாம் எங்கேருந்து புடிக்கிறீங்க?
    ////


    நம்ம கூகுள் ஆண்டவரே துணை...
    அப்படியே வலையை விரிப்போ்ம் அப்படியே சிக்கிடும்...

    ReplyDelete
  47. வரிகளில் வாழ்கையின் எதார்த்தம்
    பாராட்டுக்கள் கவிஞரே

    ReplyDelete
  48. ///FOOD said... [Reply to comment]

    //ஒருவேளை
    மனதில் படிகிற கறை ‌
    வெளியே தெரியாது என்பதலோ...!//
    நிஜம் நிஜம்.
    ///

    நன்றி ஆபிஸர்..

    ReplyDelete
  49. ///
    கலாநேசன் said... [Reply to comment]

    கறை நல்லது...அவங்கவங்களுக்குத் தெரிஞ்சா...உணர்ந்தால்...
    //////

    நன்றாகத்தான் இருக்கும்..

    ReplyDelete
  50. ///
    Heart Rider said... [Reply to comment]

    இதை படித்ததும் ஏனோ மனதில் ஒரு சிறு உறுத்தல்,

    கறைகள் ஈட்டியாய் மாறிவிட்டனவோ?
    ////

    உண்மைதான்..

    ReplyDelete
  51. ///
    செய்தாலி said... [Reply to comment]

    வரிகளில் வாழ்கையின் எதார்த்தம்
    பாராட்டுக்கள் கவிஞரே
    ///

    நன்றி...

    ReplyDelete
  52. தவறென்று உணரும்போது தவறுகள் மன்னிக்கப்படுகிறது,மன்னிக்கப்படும் போது கறைகளும் கழுவப்படுகிறது..

    ReplyDelete
  53. அருமை நன்றாக உள்ளது

    ReplyDelete
  54. ///
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    தவறென்று உணரும்போது தவறுகள் மன்னிக்கப்படுகிறது,மன்னிக்கப்படும் போது கறைகளும் கழுவப்படுகிறது..
    ///

    நல்ல உதாரணம்..

    ReplyDelete
  55. ///
    யாதவன் said... [Reply to comment]

    அருமை நன்றாக உள்ளது
    ////////

    நன்றி...

    ReplyDelete
  56. ஏற்றுகொள்ளவேண்டிய கவிதை வரிக

    ReplyDelete
  57. அருமையான சிந்தனை சௌந்தர்.அதைக் கவிதையாக்கிய விதம் அற்புதம்!சென்னைப் பித்தன் அவர்கள் சொன்னது போல மனம் வெளுக்க வழியில்லையே என்ற பாரதியின் வரிகள்.

    ReplyDelete
  58. உங்க கவிதை சில சமயத்துல சுத்தமா புரியவே மாட்டேங்குது.

    ReplyDelete
  59. /////////
    பிரபாஷ்கரன் said... [Reply to comment]

    ஏற்றுகொள்ளவேண்டிய கவிதை வரிக
    /////////


    நன்றி...

    ReplyDelete
  60. //////
    Murugeswari Rajavel said... [Reply to comment]

    அருமையான சிந்தனை சௌந்தர்.அதைக் கவிதையாக்கிய விதம் அற்புதம்!சென்னைப் பித்தன் அவர்கள் சொன்னது போல மனம் வெளுக்க வழியில்லையே என்ற பாரதியின் வரிகள்.
    //////

    நன்றி..

    ReplyDelete
  61. ////////
    N.H.பிரசாத் said... [Reply to comment]

    உங்க கவிதை சில சமயத்துல சுத்தமா புரியவே மாட்டேங்குது.
    ////////

    இரண்டு முறை படியுங்கள் புரியும்....

    ReplyDelete
  62. எல்லாருடைய மனதிலும் தோன்றும், யாருமறியாதது என்று என்னும் எண்ணங்களை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
    இருட்டில் ஒலிக்கும் பொருளாய் இயல்பான மனித மனதின் எண்ணங்கள், அதன் கருப்பு வண்ணங்கள்..

    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  63. ///////
    Lali said... [Reply to comment]

    எல்லாருடைய மனதிலும் தோன்றும், யாருமறியாதது என்று என்னும் எண்ணங்களை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
    இருட்டில் ஒலிக்கும் பொருளாய் இயல்பான மனித மனதின் எண்ணங்கள், அதன் கருப்பு வண்ணங்கள்..

    http://karadipommai.blogspot.com/
    ///////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  64. so nicely depicting the nature of inner soul of everyone..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!