25 July, 2011

பெண்மையே உன்னை என்னவென்று சொல்வது..?




ஆண்கள் உடல்ரீதியாக பலசாலியாக இருந்தாலும் அவர்களை விட பெண்கள்தான் பன்முக திறமை படைத்தவர்கள் என்று உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இல்லத்தை கவனிப்பதில் தொடங்கி, கணவன், குழந்தைகளுக்கு தேவையான பணிவிடைகள் செய்வது வரை அவர்களின் திறமைகள் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

அன்புக்குரியவர்கள் பெண்கள்

ஆண்கள் சுயநலவாதிகள். அவர்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் கூறிவிட்டு மறந்துவிடுவார்கள்.

பெண்களின் பன்முகத்திறன்

பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

மனதிருப்தி

ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

வெளிப்படையான பேச்சு

பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

ஆண் பெண் என்ற வித்தியாசம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் நாளை நம்பிக்கைகள் அவர்களே என்று நம்புவோம்.

54 comments:

  1. அட பொண்ணாக பிறந்திருக்கலாம் போல

    நல்ல பதிவு பாஸ் ..

    ReplyDelete
  2. மாப்ள நல்ல பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்!

    ReplyDelete
  3. இவ் உலகில் பெண்களின் முக்கியத்துவத்தை, அவர்களின் பிறப்பின் பேற்றினை விளக்கும் அருமையான பதிவு.

    ReplyDelete
  4. அட ..பெண்கள் பற்றி இவ்வளவு போசிடிவான பதிவா வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  5. பெண்களை கண்ணிமாக பதிவிட்டு ...
    தாய்குலங்களின் ஆதரவை கொள்ளை அடித்த உங்களுக்கு
    வாக்குகள் அனைத்தும்

    ReplyDelete
  6. ///////
    கந்தசாமி. said... [Reply to comment]

    அட பொண்ணாக பிறந்திருக்கலாம் போல

    நல்ல பதிவு பாஸ் ..
    ///////

    நான் பெண்ணால் பிறந்தவர்கள் பாஸ்...

    ReplyDelete
  7. இப்பிடி எல்லாம் ஐஸ் வச்சு வச்சு எல்லாத்தையும் சாதிச்சுட்டோம்!!??

    ReplyDelete
  8. ///////
    விக்கியுலகம் said... [Reply to comment]

    மாப்ள நல்ல பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்!
    ///////

    வாங்க விக்கி...

    ReplyDelete
  9. //ஆண்கள் உடல்ரீதியாக பலசாலியாக இருந்தாலும் அவர்களை விட பெண்கள்தான் பன்முக திறமை படைத்தவர்கள் என்று உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்//

    ஒரு சின்ன திருத்தம் பாஸ் உடலளவிலும் சக்தி வாய்ந்தவள் பெண்ணே... விஞ்ஞான ரீதியிலும் இதுவும் உண்மை.... அருமையாக பெண்களின் மகத்துவத்தை உணர்த்தியமைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. /////
    நிரூபன் said... [Reply to comment]

    இவ் உலகில் பெண்களின் முக்கியத்துவத்தை, அவர்களின் பிறப்பின் பேற்றினை விளக்கும் அருமையான பதிவு.
    ////////

    வாங்க நிருபன்..

    ReplyDelete
  11. நாளைய நம்பிக்கைகள் பெண்களே என்று பெண்களின் பெருமை சொல்லும் தங்களின் பதிவுக்கு ஒட்டுமொத்த பெண்களின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரரே.

    ReplyDelete
  12. பல இக்கட்டான தருணங்களில் ஆண்களே நம்பிக்கையிழந்து தடுமாறும் சமயங்களிலும் எதையும் துணிந்து எதிர்நோக்கும் அசாதாரணமான மனஉறுதி ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகம் என்பதை அனுபவத்தில் நிறைய கண்டிருக்கிறேன் சகோ.

    ReplyDelete
  13. பெண்களின் மனதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கின்றீர்கள் .........

    ReplyDelete
  14. ///////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    அட ..பெண்கள் பற்றி இவ்வளவு போசிடிவான பதிவா வாழ்த்துக்கள் நண்பா
    /////////



    வாங்க ரியாஸ்...

    ReplyDelete
  15. //////
    ரியாஸ் அஹமது said...

    பெண்களை கண்ணிமாக பதிவிட்டு ...
    தாய்குலங்களின் ஆதரவை கொள்ளை அடித்த உங்களுக்கு
    வாக்குகள் அனைத்தும்///////



    இதுவும் உண்மைதாங்க....
    ஆனா இதெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது...

    ReplyDelete
  16. பெண்மையைப் போற்றுவோம்.

    ReplyDelete
  17. ஆண் பெண் என்ற வித்தியாசம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் நாளை நம்பிக்கைகள் அவர்களே என்று நம்புவோம்.

    கண்டிப்பாக...இனிவரும் கலங்கள் இப்டித்தான் இருக்கும்....

    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

    ReplyDelete
  18. ஆண்கள் சுயநலவாதிகள்// இந்த இடத்துல மட்டும் என்னோட கருத்து மாறுபடுது,மற்றபடி பெண்கள் பற்றி எழுதிருக்க எல்லா விஷயங்களும் உண்மையானவைதான். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே
    என்பார் கண்ணதாசன்.
    நாம் அதை மாற்றி
    பெண் இல்லாமல் ஏதுமில்லை உலகத்திலே
    என நிச்சயம் சொல்லலாம்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. என்னமோ பொதுவா சொல்லி வச்சிருக்கீங்க.சந்தோஷம்தான் !

    ReplyDelete
  21. நல்ல பதிவு!!!

    தாய்குலங்களின் ஆதரவோடு அதிக ஹிட்ஸ் கொடுக்க கூடிய பதிவா உருமாறுது போல :)

    ReplyDelete
  22. நல்ல பதிவு நண்பா !! நன்றிகளும் வாழ்த்துக்களும் !!!

    ReplyDelete
  23. அருமையான பதிவு

    ReplyDelete
  24. பெண்கள் பற்றிய அழகிய பதிவு
    ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
  25. மன திருப்தி பற்றி சொல்லி இருப்பது 100% சத்தியமான வார்த்தைகள்

    ReplyDelete
  26. ///
    சி.பி.செந்தில்குமார் said...

    குட்//////

    வாஙக சிபி...

    ReplyDelete
  27. //////
    இராஜராஜேஸ்வரி said...

    very nice../////////

    நன்றி...

    ReplyDelete
  28. சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

    சில இல்லீங்க பல

    ReplyDelete
  29. இன்னும் சில பெண்களை அடிமையாக தான் நடத்துகிறார்கள் நல்ல கட்டுரை சவுந்தர்

    ReplyDelete
  30. ஹா ஹா ஹா ஹா கவிதைவீதி சூப்பரா தடம் மாறி இருக்கே....!!!

    ReplyDelete
  31. சூப்பரான பகிர்வு மக்கா அசத்துங்க...!!!

    ReplyDelete
  32. ///////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    இப்பிடி எல்லாம் ஐஸ் வச்சு வச்சு எல்லாத்தையும் சாதிச்சுட்டோம்!!??
    /////////

    உண்மையெல்லாம் இப்படி வெளியில் சொல்லக்கூடாது...

    ReplyDelete
  33. பெண்மை போற்றும் பதிவு,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. ////
    மாய உலகம் said... [Reply to comment]

    / ஒரு சின்ன திருத்தம் பாஸ் உடலளவிலும் சக்தி வாய்ந்தவள் பெண்ணே... விஞ்ஞான ரீதியிலும் இதுவும் உண்மை.... அருமையாக பெண்களின் மகத்துவத்தை உணர்த்தியமைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
    /////////


    இது உலகத்தின் ஆரோக்கியத்திற்க்கு நல்லது தானே....

    ReplyDelete
  35. பெண்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  36. சகோ/நீங்கள் ஒரு ஆணாக இருந்துகொண்டு இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கும் போது உங்களில் உள்ள நேர்மை வெளிப்படையாக தெரிகிறது..
    99%ஆண்கள் பெண்களை குறையாக சொல்வதையே கண்டிருக்கிறேன்.ஆனால் நீங்கள் எதிர்மாறாக இருக்கிறீங்கள்..உண்மையிலேயே சொல்லியிருக்கும் கருத்துக்கள் அத்தனையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது...
    அற்புதமான பதிவு..
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  37. பெண்ணின் பெருமை பெருசு தான்

    ReplyDelete
  38. பெண்கள் உலகின் அதிசய படைப்பு. இன்னும் அவர்களை முழுதாய்ப் புரிந்து கொள்ளாத நிலையில்தான் நம் சமுதாயம் இருக்கின்றது. இந்நிலை மாறவேண்டும்.....! நிச்சயம் மாறும்!

    வரவேற்கக்கூடிய கருத்துக்கள்! :)

    ReplyDelete
  39. ///////
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    நாளைய நம்பிக்கைகள் பெண்களே என்று பெண்களின் பெருமை சொல்லும் தங்களின் பதிவுக்கு ஒட்டுமொத்த பெண்களின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரரே.
    ////////

    தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  40. ///////
    koodal bala said...

    பெண்களின் மனதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கின்றீர்கள் .........///////


    ஏதோ எனக்கு தெரிஞ்சது..
    நன்றி பாலா...

    ReplyDelete
  41. /////
    சென்னை பித்தன் said...

    பெண்மையைப் போற்றுவோம்.//////


    ரைட்டு...

    ReplyDelete
  42. ////
    ஆகுலன் said...

    ஆண் பெண் என்ற வித்தியாசம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் நாளை நம்பிக்கைகள் அவர்களே என்று நம்புவோம்.

    கண்டிப்பாக...இனிவரும் கலங்கள் இப்டித்தான் இருக்கும்....//////


    நன்றி ஆகுலன்...

    ReplyDelete
  43. //////
    Heart Rider said...

    ஆண்கள் சுயநலவாதிகள்// இந்த இடத்துல மட்டும் என்னோட கருத்து மாறுபடுது,மற்றபடி பெண்கள் பற்றி எழுதிருக்க எல்லா விஷயங்களும் உண்மையானவைதான். பகிர்வுக்கு நன்றி.///////


    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  44. /////
    Ramani said...

    பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே
    என்பார் கண்ணதாசன்.
    நாம் அதை மாற்றி
    பெண் இல்லாமல் ஏதுமில்லை உலகத்திலே
    என நிச்சயம் சொல்லலாம்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்////////

    வாங்க சார்..

    ReplyDelete
  45. ////////
    ஹேமா said...

    என்னமோ பொதுவா சொல்லி வச்சிருக்கீங்க.சந்தோஷம்தான் !/////


    சரிங்க அம்மனி...

    ReplyDelete
  46. நல்ல பதிவு....
    பெண்களிடம் இருக்கும் அதீத திறமையை யாரும் கண்டுகொள்வதே இல்லை.
    அப்படிக் கண்டுகொண்டாண்டாலும் புகழுவதாயில்லையே....
    உள்ளதை உள்ளவாறு சொன்னதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  47. சரி எம் பெண்ணினத்தின் பெருமையை அருமையாக
    வர்ணித்துவிட்டீர்கள் மிக்க சந்தோசமாக இருக்கிறது
    இந்த சந்தோசத்துடன் திரும்பிவிட்டால் போதுமா?......
    நல்ல ஆண்களும் இவர்களுக்கு மத்தியில் குறைந்தவர்கள்
    இல்லை.எப்படி என்று கேளுங்கள்.என் பாணியில் சொல்கின்றேன்

    இரவில் சந்திரன் பகலில் சூரியன்
    இரண்டும் உலகின் கண்களடா......
    இதில் ஒருவர்மட்டும் உசத்தி என்றால்
    உன்னத தர்மம் பிளைக்குமட!............
    (மனசாட்சி:அண்ணே இதத்தான் காக்கா
    பிடிக்கிறது என்று சொல்வார்கள் இது எப்புடி?...)
    எப்படியோ அடுத்த கவிதைக்கு அடியெடுத்துக்
    குடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே!...வணக்கம்.

    ReplyDelete
  48. பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் கூறிவிட்டு மறந்துவிடுவார்கள்// உண்மைதான்..:))

    ReplyDelete
  49. பெண்மையே உன்னை என்னவென்று சொல்வது.. நல்ல பதிவு. . .

    ReplyDelete
  50. அன்பின் சௌந்தர்

    நல்லதொரு ஆராய்ச்சி - முடிவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத்தான் இருக்கிறது. இருப்பினும் நாம் பெண்களை - அவர்க்ளின் திறமைகளை அங்கீகரிப்போமா ??? சிந்திப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. நல்லதொரு ஆராய்ச்சி :-)))

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!