27 July, 2011

அவள் வராத நாட்களில் இப்படித்தான் நடக்கும்...


முதல் நண்பனாய்
கால்களில் ஒட்டி இம்சிக்கும்
மெல்லிய மணல்...

பாசம் கொண்டு
பணிந்து என் பாதம் தொட
வந்துப்போகும் அலைகள்....

சிவந்த கீழ்வானில் 
வரைந்து வைத்த ஓவியமாய்
பாய்மரக்கப்பல்....

காற்றில் மிதந்து காதில் விழுகிறது 
இளம்காதல் ஜோடிகளின்
 முத்த சப்தம்....

ழுத்தம் திருத்தமாய் 
பதித்துவிட்டுப்போயிருக்கும்
காதலர்களின் பாதச்சுவடுகள்....

யிர் தேடி
உள்ளிருந்து வெளியில் வந்து
எனைப்பார்த்து ஓடிஒளியும் நண்டு...

டிக்கடி ராகத்தால்
மௌனத்தை கலைத்துவிட்டு போகும்
சுண்டல் விற்கும் பையன்...

வைகளை மட்டுமே 
ரசித்து விட்டுச் செல்கிறேன்...

ருகிறேன் என்று சொல்லி
அவள் வராத நாட்களில்...


கருத்திடுங்கள்... வாக்களியுங்கள்...
கவிதையால் இணைந்திருப்போம்....

50 comments:

  1. நான் கடற்கரைக்கு செல்லும் போதெல்லாம் இப்படி ரசித்ததில்லை.அழகிய ரசனை.அருமையான கவிதை.
    http://gokulmanathil.blogspot.com/

    ReplyDelete
  2. நீங்க புத்திசாலி பாஸு

    வராத புள்ளைய திட்டாம சுத்தி ரசிச்சு இருக்கீங்க

    நானெல்லாம் டென்ஷன் ஆயி 100 போன் பண்ணி இருப்பேன், சும்மா சொன்னேன்

    நல்ல கவிதை வாழ்த்துக்கள் சௌந்தர்...

    ReplyDelete
  3. அழகிய ரசனை...
    அருமையான கவிதை.

    ReplyDelete
  4. அருமையான கவிதை ! மிகவும் ரசித்தேன்...

    நன்றி !

    ReplyDelete
  5. கவிதை அழகு பாஸ்!!
    தமிழ்மணம் என்னாச்சு பாஸ்?

    ReplyDelete
  6. கெக்கலிக்கும் குழந்தைபோல
    சத்தமிடும் கடற்கரையின் சிற்றலைகள்
    ரீங்காரமிடும் இடத்தை
    அழகுக் கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.
    அருமை.

    ReplyDelete
  7. நல்லாருக்கு பாஸ்

    ReplyDelete
  8. அருமையான கவிதையா வடிவெடுத்திருக்கும் அவதானம்.. ரொம்ப அழகாருக்கு.

    ReplyDelete
  9. அவள் வராத நாட்களே அருமையாக இருக்கிறதென்றால் உங்கள் கவிதைகளில்.. அவள் வந்த நாட்கள்.. ? ஆஹா ... அருமை

    ReplyDelete
  10. காதலில் காத்திருப்பும் ஒரு சுகம் தான் என்று சொல்வார்களே ,அதை கவிதையில் உணர்த்தியுள்ளீர்கள் .

    ReplyDelete
  11. உனக்கு பயந்து தான் வராம இருக்காங்க அப்ப கூட விட மாட்டேங்குரீன்களே

    ReplyDelete
  12. /////
    gokul said... [Reply to comment]

    நான் கடற்கரைக்கு செல்லும் போதெல்லாம் இப்படி ரசித்ததில்லை.அழகிய ரசனை.அருமையான கவிதை.///////


    கருத்துக்கு மிக்க நன்றி கோகுல்...

    ReplyDelete
  13. /////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    நீங்க புத்திசாலி பாஸு

    வராத புள்ளைய திட்டாம சுத்தி ரசிச்சு இருக்கீங்க

    நானெல்லாம் டென்ஷன் ஆயி 100 போன் பண்ணி இருப்பேன், சும்மா சொன்னேன்

    நல்ல கவிதை வாழ்த்துக்கள் சௌந்தர்...
    /////////



    கோவப்பட்டால் ஒன்றும் ஆகாப்போவதில்லை பாஸ்

    ReplyDelete
  14. கோர்த்த ரசனை வரிகளில்
    அழகிய கவிதை மலர்கள்

    அருமை தோழரே

    ReplyDelete
  15. அவள் வந்த நாட்களைவிட வராத நாட்கள்
    சிறப்பாக இருக்கும் போல இருக்கே
    இல்லாவிட்டால் இப்படி இயற்கையை
    ரசிக்கத்தான் முடியுமா அல்லது
    இப்படி ஒரு அருமையான கவிதையைத்தான்
    படைக்க முடியுமா
    (வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறேனா)
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. //////
    சே.குமார் said... [Reply to comment]

    அழகிய ரசனை...
    அருமையான கவிதை.
    //////////


    நன்றி குமார்...

    ReplyDelete
  17. //////
    யாழினி said...

    அருமையான கவிதை ! மிகவும் ரசித்தேன்...

    நன்றி !////////

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  18. /////
    மைந்தன் சிவா said...

    கவிதை அழகு பாஸ்!!
    தமிழ்மணம் என்னாச்சு பாஸ்?////////

    அது அடிக்கடி மக்கர் பண்ணுதுங்க...

    ReplyDelete
  19. /////
    மகேந்திரன் said...

    கெக்கலிக்கும் குழந்தைபோல
    சத்தமிடும் கடற்கரையின் சிற்றலைகள்
    ரீங்காரமிடும் இடத்தை
    அழகுக் கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.
    அருமை.//////

    நன்றி...

    ReplyDelete
  20. உங்க (கவிதையில் குறிப்பிட்டுள்ள) காதலி எப்பவும் வரவே கூடாது... அப்ப தான் நீங்க இப்படி கவிதையா கொட்டுவீங்க? எப்ப்ப்ப்ப்பூடி????

    ReplyDelete
  21. சென்னைக்கு வந்தப்பவே நெனச்சேன், இப்படி ஒரு கவிதை வரும்னு!

    ReplyDelete
  22. சிவந்த கீழ்வானில்
    வரைந்து வைத்த ஓவியமாய்
    பாய்மரக்கப்பல்....//

    இந்த உவமையின் மூலம் என்னை நீங்கள் கடற்கரைக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்.
    கவிதையின் நகர்விற்கு
    ஏற்றாற் போல, எதிர்பார்ப்புடன் காத்திருந்து ஏமாற்றமடையும் உள்ளத்தின் உணர்வலைகளை அருமையாக விளக்கியிருக்கிறீங்க.

    ReplyDelete
  23. அவள் வராத நாட்களில் இப்படித்தான் நடக்கும்...//

    ஏமாற்றங்களோடு நகர்ந்த, காத்திருப்பு பொய்யான நாழிகைகளின் நினைவலைகளை மீட்டும் வலி நிறைந்த கவிதையாக இங்கே பரிணமித்துள்ளது.

    ReplyDelete
  24. இவைகளை மட்டுமே
    ரசித்து விட்டுச் செல்கிறேன்...

    வருகிறேன் என்று சொல்லி
    அவள் வராத நாட்களில்...

    எல்லாமுமாய் அவள் உடன்னிருக்கையில், இவற்றையெல்லாம் எப்படி ரசிக்க முடியும். உன்மைதான். . .

    ReplyDelete
  25. ///////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    நல்லாருக்கு பாஸ்
    ///////

    வாங்க சதீஸ்...

    ReplyDelete
  26. /////
    அமைதிச்சாரல் said...

    அருமையான கவிதையா வடிவெடுத்திருக்கும் அவதானம்.. ரொம்ப அழகாருக்கு.///////

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  27. ///////
    மாய உலகம் said...

    அவள் வராத நாட்களே அருமையாக இருக்கிறதென்றால் உங்கள் கவிதைகளில்.. அவள் வந்த நாட்கள்.. ? ஆஹா ... அருமை//////

    நன்றி...

    ReplyDelete
  28. ///////
    கந்தசாமி. said...

    காதலில் காத்திருப்பும் ஒரு சுகம் தான் என்று சொல்வார்களே ,அதை கவிதையில் உணர்த்தியுள்ளீர்கள் .////////

    நன்றி...

    ReplyDelete
  29. ///காற்றில் மிதந்து காதில் விழுகிறது
    இளம்காதல் ஜோடிகளின்
    முத்த சப்தம்....///
    இங்கே ஒரு சாடல் இருந்து இருந்தால் நல்ல இருக்குமே ...ஹி ஹி வயித்து எரிச்சல் அல்ல
    --

    ReplyDelete
  30. //////
    சசிகுமார் said... [Reply to comment]

    உனக்கு பயந்து தான் வராம இருக்காங்க அப்ப கூட விட மாட்டேங்குரீன்களே
    //////



    கிடைச்சது ஒண்ணு அதையும் விட்டுட்டுதான் இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
  31. //////
    செய்தாலி said...

    கோர்த்த ரசனை வரிகளில்
    அழகிய கவிதை மலர்கள்

    அருமை தோழரே//////

    நன்றி...

    ReplyDelete
  32. //////
    Ramani said...

    அவள் வந்த நாட்களைவிட வராத நாட்கள்
    சிறப்பாக இருக்கும் போல இருக்கே
    இல்லாவிட்டால் இப்படி இயற்கையை
    ரசிக்கத்தான் முடியுமா அல்லது
    இப்படி ஒரு அருமையான கவிதையைத்தான்
    படைக்க முடியுமா
    (வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறேனா)
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்/////////

    தாங்கள் சொல்வதும் சரிதான்...

    நன்றி...

    ReplyDelete
  33. /////
    FOOD said...

    காதல், காத்திருப்பு,கவிதை மூன்றுமே அருமை.///////


    நன்றி...

    ReplyDelete
  34. ////
    ஆமினா said...

    உங்க (கவிதையில் குறிப்பிட்டுள்ள) காதலி எப்பவும் வரவே கூடாது... அப்ப தான் நீங்க இப்படி கவிதையா கொட்டுவீங்க? எப்ப்ப்ப்ப்பூடி????//////

    வாழ்க உங்க எண்ணம்...

    ReplyDelete
  35. //////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    அசத்தல் கவிதை,..//////

    ரைட்டு...

    ReplyDelete
  36. ////
    ! சிவகுமார் ! said...

    சென்னைக்கு வந்தப்பவே நெனச்சேன், இப்படி ஒரு கவிதை வரும்னு!////////

    வாங்க சிவா....

    ReplyDelete
  37. //////
    நிரூபன் said...

    சிவந்த கீழ்வானில்
    வரைந்து வைத்த ஓவியமாய்
    பாய்மரக்கப்பல்....//

    இந்த உவமையின் மூலம் என்னை நீங்கள் கடற்கரைக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்.
    கவிதையின் நகர்விற்கு
    ஏற்றாற் போல, எதிர்பார்ப்புடன் காத்திருந்து ஏமாற்றமடையும் உள்ளத்தின் உணர்வலைகளை அருமையாக விளக்கியிருக்கிறீங்க.////////

    தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நிருபன்...

    ReplyDelete
  38. ///////
    பிரணவன் said...

    இவைகளை மட்டுமே
    ரசித்து விட்டுச் செல்கிறேன்...

    வருகிறேன் என்று சொல்லி
    அவள் வராத நாட்களில்...

    எல்லாமுமாய் அவள் உடன்னிருக்கையில், இவற்றையெல்லாம் எப்படி ரசிக்க முடியும். உன்மைதான். . .//////

    நன்றி பிரவணன்...

    ReplyDelete
  39. அவள் வராத நாட்களில் இப்படித்தான் நடக்கும்.../

    நடக்கட்டும்...நடக்கட்டும்....

    ReplyDelete
  40. நானும் ரசித்திருக்கிறேன்
    சிவந்த கீழ் வான்..
    அழகான கடல்...
    அலைகள்...
    பாதச்சுவடு...

    ஆனால்...
    இவ்வளவு லாவகமாய் அழகான வரிகள், என்னுள் பிரவாகித்ததில்லை...

    வருகிறேன் என்றுசொல்லி
    அவள் வராத நாட்களில்...

    என்ற வரியில்...மனதில் முள் தைத்த வலி....

    ReplyDelete
  41. முதல் நண்பனாய்
    கால்களில் ஒட்டி இம்சிக்கும்
    மெல்லிய மணல்...//

    அருமையான வரிகள், இதெல்லாம் எப்படி எழுதுரீங்கன்னு சொல்லிக்கொடுங்க அடுத்த இடுகைல,

    அப்புறம் என்ன நம்ம கடை பக்கமே ஆளை காணும், நானும் ஆளில்லாத கடையில எத்தனை நாளைக்குங்க டீ ஆத்துறது?
    http://vigneshms.blogspot.com

    ReplyDelete
  42. காதல் கவிதைகளிலும் தம்
    ரசனையை சொல்ல முடியும்,
    மனதை வெல்ல முடியும் என்று
    நின்று
    நிரூபணம் செய்யத
    நிதர்சன கவிதை
    அருமை நண்பரே

    ReplyDelete
  43. ஆகா ....அப்போ அந்தக் காலடையாளம் உங்களுடையதுதானா?.... உங்கள் வீட்டுக்கு இந்த விஷயம் தெரியுமா?.....நான் இதைக் காட்டிக்
    கொடுக்க மாட்டன்.ஏனென்றால் கவிதை அருமையாக இருக்கிறது....
    வாழ்த்துக்கள் சகோ .நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  44. சூப்பர் காதல் கவிதை சௌந்தர். Keep it up.

    ReplyDelete
  45. தொடர்ந்து ஜமாயுங்க பாஸ்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. கவிதை என்னை கவர்ந்துவிட்டது.
    கவிதை எழுத காதல் கொள்ளவும் தூண்டுகிறது.
    நானும் கவிஞன் என்று சொல்லிக்கொண்டு அலைகிறேன் ...
    வந்து பாருங்கள்...
    www.maheskavithai.blogspot.com

    ReplyDelete
  47. அருமையாய் உள்ளது

    ReplyDelete
  48. ''...இவைகளை மட்டுமே
    ரசித்து விட்டுச் செல்கிறேன்...

    வருகிறேன் என்று சொல்லி

    அவள் வராத நாட்களில்.....''
    reality..
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!