29 July, 2011

பெண்களை தன் வலையில் விழவைப்பது எப்படி...?


இன்று 10 வயது  மாணவர் 20 வயது இளைஞர் மற்றும் 60 வயது முதியவர் வரை பெண்கள் மீது பெரிய ஈர்ப்பு இருக்கிறது. பொதுவாக அவ்வளவு ‌எளிதாக பெண்கள் ஆண்கள் வலையில் விழுவதில்லை. அப்படி விழவைப்பதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.  அதன்படி செய்தால் அவர்களை எளிதாக தம்முடைய வலையில் விழவைத்து விடலாம்.

முதலில் எந்தப்பெண்மை தன் வலையில் விழவைக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்ள வேண்டும். (அதை நான் காட்டமுடியாது... ராஸ்கேல்ஸ்...)

அவருடைய அன்றாட நடவடிக்கைகள் என்னவென்று ஒன்று அல்லது இரண்டுநாட்கள் ஆராய வேண்டும். (எந்த விஷயத்தை செஞ்சாலும் பிளான் பண்ணாம செய்யக்கூடாது)

அந்தப்பெண்ணுடைய தரப்பில் யாரவது வம்புக்கு வருவார்களா என்று ஆராய வேண்டும். (அப்புறம் சண்டைசச்சரவு ஆகிவிட்டால் நான் பொருப்பல்ல)

இப்போது முக்கியமானது, நல்ல தரமான நைலான் அல்லது நூலால் ஆன தரமான எளிதில் அறுபடாத வலை ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும்.(ரைட்டு)

அதற்கடுத்து நீங்கள் எந்த பெண்ணை வலையில் விழவைக்க நினைத்தீர்களோ அந்த பெண் வரும் போது இந்த வலையை தரையில் பரப்பி வைக்க வேண்டும். ( மிக மிக ரகசியமாக)

அந்த வலையில் அவர் வரும்போது எதாவது செய்தோ அல்லது பயமுறுத்தியோ அந்த வலையில் அவரை விழவைக்க வேண்டும். அப்படி விழவில்லையென்றால் திரும்ப திரும்ப முயற்ச்சிக்க வேண்டும். (வேற என்ன வேலையிருக்கு)

அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.

இப்படித்தான் ஒரு பெண்ணை வலையில் விழவைக்க வேண்டும்.


அடுத்து ஒரு எளிய வழியுடன் உங்களை நான் சந்திக்கிறேன். (இனிமேல் இங்க நிப்பேனா நானு..)


 விழுந்தப்பிறகு இப்படித்தான் இருக்கும்....

(குறிப்பு பின் விளைவுகளுக்கு கமபெனி பொருப்பல்ல...)

59 comments:

  1. தலைப்பைப் பார்த்துவிட்டு வில்லங்கமா எழுதியிருப்பீங்க.. சண்டை போடலாம்னு வந்தேன்..
    தப்பிச்சுட்டீங்க..

    //அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.//

    ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..

    ReplyDelete
  2. முடியல முடியல

    ReplyDelete
  3. ஹி ஹி
    ரசித்தேன் வாக்களித்தேன்
    தமிழ் மனம் எனாச்சு

    ReplyDelete
  4. பெண்களை வலை வீசி பிடிப்பதில் ஆண்களுக்கு தான் எவ்வளவு கஷ்டம். அவ்ளோ லேசா சிக்க மாட்டோம்லே !

    //அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது.//
    இது வேறயா , ஹாஹா....

    ReplyDelete
  5. சூப்பர் பாஸ்! :-)

    ReplyDelete
  6. யாருடா அது பொல்லு கட்டையோட...இப்ப வேணாம் அண்ண இப்படியே போனா பார்ப்பம்...

    என்னமாதிரி எல்லாம் யோசிக்கிறீங்க...

    எனது கனா.................

    ReplyDelete
  7. எப்படில்லாம் ஐடியா கொடுக்குராங்க ஹீ ஹீ

    ReplyDelete
  8. /////
    இந்திரா said...

    தலைப்பைப் பார்த்துவிட்டு வில்லங்கமா எழுதியிருப்பீங்க.. சண்டை போடலாம்னு வந்தேன்..
    தப்பிச்சுட்டீங்க..

    //அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.//

    ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..
    //////////


    கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சதில் வந்தது கோவப்படாதீங்க.....

    ReplyDelete
  9. //////
    ரியாஸ் அஹமது said...

    முடியல முடியல///////


    இன்னோரு முறை படிங்க சரியாயிடும்...

    ReplyDelete
  10. //////
    ரியாஸ் அஹமது said...

    ஹி ஹி
    ரசித்தேன் வாக்களித்தேன்
    தமிழ் மனம் எனாச்சு//////

    நன்றி ரியாஸ்...

    தமிழ்மணம் எனக்கு என்னாச்சின்னு தெரியல இரண்டு நாட்களாக வேலை செய்ய வில்லை...

    யாராவது உதவ முடியுமா....

    ReplyDelete
  11. ///////
    யாழினி said...

    பெண்களை வலை வீசி பிடிப்பதில் ஆண்களுக்கு தான் எவ்வளவு கஷ்டம். அவ்ளோ லேசா சிக்க மாட்டோம்லே !

    //அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது.//
    இது வேறயா , ஹாஹா....
    /////////

    ரைட்டு...

    ReplyDelete
  12. நல்லா விரிச்சு வச்சு இருக்கீங்க வலையை...

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  13. வணக்கம் மச்சி, உட்கார்ந்து யோசிப்பீங்களோ,
    என்னமா ஐடியா கொடுக்கிறீங்க.

    ReplyDelete
  14. கிரேட் டிசப்பாய்ன்ட்மென்ட்........அவ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
  15. சகா இப்பவே கண்ணகட்டுதே. . .இதெல்லாம் யார் சொல்லிக் கொடுக்கிறார்கள். . .

    ReplyDelete
  16. /////
    ஜீ... said... [Reply to comment]

    சூப்பர் பாஸ்! :-)
    ///////


    வாங்க ஜீ...

    ReplyDelete
  17. ///////
    ஆகுலன் said...

    யாருடா அது பொல்லு கட்டையோட...இப்ப வேணாம் அண்ண இப்படியே போனா பார்ப்பம்...

    என்னமாதிரி எல்லாம் யோசிக்கிறீங்க...
    ///////////



    சிக்குவோமா நாங்க...
    எஸ்க்கேப்..

    ReplyDelete
  18. ////
    சசிகுமார் said...

    எப்படில்லாம் ஐடியா கொடுக்குராங்க ஹீ ஹீ//////


    எல்லாம் அப்படித்தான்...

    ReplyDelete
  19. புடிங்க புடிங்க சௌவுந்தர புடிங்க ,அடடா ஓடிட்டாரே.

    சரி விடுங்க நாளைக்கு பார்க்கலாம் .

    ReplyDelete
  20. இந்திரா சகோதரி சொன்னது போல் நானும் உங்களை வசைபாட தான் வந்தேன் ,பதிவை படித்ததும் நகைச்சுவைக்கு பாராட்டி கைகுடுக்க தான் உங்களை கூப்பிட்டேன் ,அதற்குள் எஸ்கேப் ஆயிட்டீங்க .

    நல்ல நகைச்சுவை சிந்தனை .

    வேற எண்ணத்தில் வந்தவங்களுக்கு மூக்குடைப்பு .

    ReplyDelete
  21. தலைப்ப பார்த்து ஏமாந்திட்டேன் நண்பா.....

    ReplyDelete
  22. ரைட்டு. அப்படித்தான் இருக்கணும்.

    ReplyDelete
  23. நல்ல தலைப்பூ
    உங்க வலையிலே வந்து
    நானும் விழுந்திட்டேன்! பாத்தீங்களா
    அது மட்டுமா விழுந்து விழுந்து
    சிரிச்சேன் எத்தனைபேர் ஏமாறுவாங்களே அப்படின்னு
    சரி, நீங்க எங்க வலையிலேவிழுந்து
    ரொம்ப நாளாச்சி. வரங்கிளா
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. என்னையா ஏதோ ஐடியா தருவாய் என்று பார்த்தால் இப்படி கவுத்திட்டியே மக்கா! எடுய்யா மனோட அருவாளை!

    ReplyDelete
  25. ////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    நல்லா விரிச்சு வச்சு இருக்கீங்க வலையை...

    ஹா ஹா ஹா
    ////////

    ரைட்டு...

    ReplyDelete
  26. /////////
    நிரூபன் said...

    வணக்கம் மச்சி, உட்கார்ந்து யோசிப்பீங்களோ,
    என்னமா ஐடியா கொடுக்கிறீங்க.
    ///////

    அப்படியே வறதுதான்...

    ReplyDelete
  27. கொல கேசில உள்ள போப்போறிங்க ..))

    ReplyDelete
  28. //////
    koodal bala said...

    கிரேட் டிசப்பாய்ன்ட்மென்ட்........அவ்வவ்வ்வ்வ்///////

    ரைட்டு...

    ReplyDelete
  29. வித்தியாச சிந்தனை
    நல்லா இருக்கு நண்பரே..

    ReplyDelete
  30. //////
    பிரணவன் said... [Reply to comment]

    சகா இப்பவே கண்ணகட்டுதே. . .இதெல்லாம் யார் சொல்லிக் கொடுக்கிறார்கள். . .
    //////

    அப்படியே வற்றதுதான்...

    ReplyDelete
  31. // முதலில் எந்தப்பெண்மை தன் வலையில் விழவைக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்ள வேண்டும். (அதை நான் காட்டமுடியாது... ராஸ்கேல்ஸ்...)//

    ஏன் காட்ட முடியாது. ரொம்ப சின்ன வலையா?

    ReplyDelete
  32. ஆசிரியரே, இந்தப்பதிவை உங்க மாணவர்கள் படிச்சா இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆயிடும். ஹே.. ஹே..

    ReplyDelete
  33. நாள்ல ஐய்டியா

    ReplyDelete
  34. நினைத்தேன் ஏதாவது வில்லங்கம் இருக்கும்மென்று
    சரியாகச்சரி.....

    ReplyDelete
  35. ஏன் பாஸ் இந்த கொலை வெறி இப்போ??

    ReplyDelete
  36. ///////
    M.R said... [Reply to comment]

    புடிங்க புடிங்க சௌவுந்தர புடிங்க ,அடடா ஓடிட்டாரே.

    சரி விடுங்க நாளைக்கு பார்க்கலாம் .
    /////////

    நான் இங்க இல்ல...

    ReplyDelete
  37. /////
    M.R said...

    இந்திரா சகோதரி சொன்னது போல் நானும் உங்களை வசைபாட தான் வந்தேன் ,பதிவை படித்ததும் நகைச்சுவைக்கு பாராட்டி கைகுடுக்க தான் உங்களை கூப்பிட்டேன் ,அதற்குள் எஸ்கேப் ஆயிட்டீங்க .

    நல்ல நகைச்சுவை சிந்தனை .

    வேற எண்ணத்தில் வந்தவங்களுக்கு மூக்குடைப்பு ./////



    கவிதைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்கதாற்க்காகதான்...

    ReplyDelete
  38. ////
    ஈரோடு தங்கதுரை said...

    தலைப்ப பார்த்து ஏமாந்திட்டேன் நண்பா.....//////

    உங்களை வரவைக்க இப்படி தலைப்பை யோசிச்சி வைக்கவேண்டியதாயிருக்கு...

    ReplyDelete
  39. ///////
    தமிழ்வாசி - Prakash said...

    ரைட்டு. அப்படித்தான் இருக்கணும்.////////

    நாங்களும் மொக்கை போடுவோம்ல...

    ReplyDelete
  40. /////
    புலவர் சா இராமாநுசம் said...

    நல்ல தலைப்பூ
    உங்க வலையிலே வந்து
    நானும் விழுந்திட்டேன்! பாத்தீங்களா
    அது மட்டுமா விழுந்து விழுந்து
    சிரிச்சேன் எத்தனைபேர் ஏமாறுவாங்களே அப்படின்னு
    சரி, நீங்க எங்க வலையிலேவிழுந்து
    ரொம்ப நாளாச்சி. வரங்கிளா
    புலவர் சா இராமாநுசம்
    ///////

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
    ஐயா...

    ReplyDelete
  41. ////
    Nesan said...

    என்னையா ஏதோ ஐடியா தருவாய் என்று பார்த்தால் இப்படி கவுத்திட்டியே மக்கா! எடுய்யா மனோட அருவாளை!/
    ///////

    விடாதிங்க பிடிங்க...

    ReplyDelete
  42. ///////
    கவி அழகன் said...

    ராஸ்கல்
    //////


    இப்படியா போன எப்படி...

    ReplyDelete
  43. ////////
    கந்தசாமி. said...

    கொல கேசில உள்ள போப்போறிங்க ..))/
    ///////



    நான் ஊர்ல இல்லீங்கோ...

    ReplyDelete
  44. //////
    மகேந்திரன் said...

    வித்தியாச சிந்தனை
    நல்லா இருக்கு நண்பரே..
    ////////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  45. நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா சௌந்தர்? கொடுமை...

    ReplyDelete
  46. ////////
    ! சிவகுமார் ! said...

    // முதலில் எந்தப்பெண்மை தன் வலையில் விழவைக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்ள வேண்டும். (அதை நான் காட்டமுடியாது... ராஸ்கேல்ஸ்...)//

    ஏன் காட்ட முடியாது. ரொம்ப சின்ன வலையா?
    ///////////


    வேணா அழுதுடுவேன்..

    ReplyDelete
  47. ஓ இதான் வலையில் விழ வைக்கிறதா... அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  48. ஏன்??ஏன் ஏன் ஏன் ஏன் ??????????????

    ReplyDelete
  49. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  50. அருமையாக முடித்தீர்கள் நானும் என்னமோ
    ஏதோ என்று கோவப்பட்டேன்.ஆனால் சிரிப்பு
    மாளவில்லை சகோ வாழ்த்துக்கள் .என் தளத்தில்
    உறவுகளால் வஞ்சிக்கப்பட்ட அவலைப் பெண்ணின்
    சோககீதம் எழுத்துருவில் தந்துள்ளேன்.உங்கள் கருத்தினைக்
    கூறிவிடுங்கள்.நன்றி இப் பகிர்வுக்கு......

    ReplyDelete
  51. என்ன பாஸ் சூப்பர் ஐடியா கொடுபீங்கன்னு வேல வெட்டியெல்லாம் விட்டுட்டு ஓடி வந்தா இப்பிடி பெரிய பல்பா குடுதுடீங்க

    ReplyDelete
  52. அன்பின் சௌந்தர் - இவ்வளவு ஈசியா - தெரியாமப் போச்ச்ச்ச்ச்ச்ச்சே ! எவ்ளோ பேர வலையில விழ வச்சிருக்கலாம் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  53. இந்திரா said... [Reply to comment]
    தலைப்பைப் பார்த்துவிட்டு வில்லங்கமா எழுதியிருப்பீங்க.. சண்டை போடலாம்னு வந்தேன்..
    தப்பிச்சுட்டீங்க..

    //அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.//

    ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..

    ஆமாக்கா.இன்னிக்கு ஏதோ தப்பீற்றார்.

    ReplyDelete
  54. இந்திரா said... [Reply to comment]
    தலைப்பைப் பார்த்துவிட்டு வில்லங்கமா எழுதியிருப்பீங்க.. சண்டை போடலாம்னு வந்தேன்..
    தப்பிச்சுட்டீங்க..

    //அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.//

    ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..

    ஆமாக்கா.இன்னிக்கு ஏதோ தப்பீற்றார்.

    ReplyDelete
  55. சௌந்தர் சார் கவனம் பின்னாடி அந்தப் பெண்ணின் அண்ணன் நிற்கப் போறான்.
    ஹ ஹ ஹ ஹா....

    ReplyDelete
  56. ஓபனிங்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா....

    நல்ல நகைச்சுவையான பதிவு

    ReplyDelete
  57. ஏமாத்தீட்டீங்களே ந்ன்பா...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!